
100 Million Images
We want to thank all of you for your continued support of Snapchat. Over 110 million images have been sent through our service! Woohoo! We couldn’t have done it without you.
கடந்த சில வாரங்களில் நிறைய நடந்தன. இரண்டு சிறப்பான மற்றும் திறமையான பொறியியலாளர்கள் (மற்றும் நண்பர்கள்) அணியில் சேர்ந்துள்ளனர் என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம் – டேனியல் மற்றும் டேவிடை வரவேற்கிறோம்! அருமையான சமூக மேலாளரான தேனாவையும் நாங்கள் பணியமர்த்தியுள்ளோம், அவர் ஏற்கனவே மிக அதிகமான மின்னஞ்சல் பேக்லாகில் இருந்து நாங்கள் வெளிவர உதவுகிறார். நீங்கள் இன்னும் உதவிக்காகக் காத்துக்கொண்டிருந்தால் (மன்னிக்கவும்!) உங்களுக்கு உதவி வந்துகொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நாங்கள் தற்போது மிக விரைவான மற்றும் வேடிக்கையான புதுப்பிப்பை சோதித்து வருகிறோம், அது மாத இறுதிக்குள் வெளிவரும் என நினைக்கிறோம். கடவுச்சொல் மீட்பு, பிழை திருத்தங்கள், விரைவான கேமரா மற்றும் வரைதல் ஆகியவை உங்களுக்கு அருகிலுள்ள iOS சாதனத்திற்கு விரைவில் வரும்! சில மிக இரகசிய பணிகளையும் செய்து வருகிறோம்.
எங்கள் Android ரசிகர்களுக்காக - உங்கள் எல்லா சாதனங்களுக்கும் சிறந்த Snapchat அனுபவத்தை உருவாக்க நாங்கள் கடினமாக உழைக்கிறோம்! இது எளிதானது அல்ல, ஆனால் இது ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பைச் சோதிக்க நீங்கள் விரும்பினால் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
கடைசியாக - Snapchat-ஐ நீங்கள் தொடர்ந்து ஆதரித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் சேவையின் மூலம் 110 மில்லியனுக்கும் அதிகமான படங்கள் அனுப்பப்பட்டுள்ளன! வெற்றி! வெற்றி!! உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் அதை செய்திருக்க முடியாது.