09 டிசம்பர், 2024
09 டிசம்பர், 2024

2024 ஆம் ஆண்டின் Snap

ஒவ்வொரு நாளும், நமது சமூகத்தின் 850 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் 1 தங்களை வெளிப்படுத்துவதற்காகவும், அத்தருணத்தில் வாழ்வதற்காகவும், தங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பதற்காகவும் Snapchatக்கு வருகிறார்கள். மற்றொரு சிறப்பான ஆண்டு முடிவுக்கு வரும் இத்தருணத்தில் “2024 ஆம் ஆண்டின் Snap” உடன் Snapchat பயனர்களின் செயல்பாடுகளின் சிறந்த அம்சங்களைத் திரும்பிப் பார்க்கிறோம்.

இந்த ஆண்டில் Snapchat பயனர்களின் பங்கேற்பு எப்படி இருந்தது, அவர்கள் எதை உருவாக்கினர், இந்தச் செயலியை எப்படிப் பயன்படுத்தினர் என்ற நினைவுகளை “2024 ஆம் ஆண்டின் Snap” வழங்குகிறது. தினசரி வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்வதில் இருந்து உலகளாவிய டிரெண்டுகளை உருவாக்குவது வரை, நமது சமூகத்தில் மிகவும் எதிரொலித்த கலாச்சாரத் தருணங்கள் மற்றும் பேஷன் பாயின்ட்கள் குறித்த பார்வையை இந்தப் புள்ளிவிவரங்கள் வழங்குகின்றன.


விளையாட்டு ரசிகர்களுக்கு ஊக்கமூட்டுதல்

ரசிக அனுபவத்தை மாற்றுவதிலும் Snapchat பயனர்களை ஒன்றிணைப்பதிலும் விளையாட்டு தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது, சராசரியாக, உலகளவில் ஸ்பாட்லைட்டின் ஸ்போர்ட்ஸ் உள்ளடக்கங்களில் 25 மில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் செலவழிக்கப்பட்டுள்ளன. 2 ரசிகர்கள் இத்தளத்தை நேரடித் தருணங்களைக் கொண்டாடுவதற்கு, எதிர்வினைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அல்லது தங்களின் விருப்பமான வீரர்களைப் பின்தொடர்வதற்கு என எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தினாலும், நமது சமூகம் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கவும், தங்களுக்குப் பிடித்த லீகுகள், அணிகள், விளையாட்டுப் பிரபலங்கள், உள்ளடக்கப் படைப்பாளர்களுடன் இணைந்திருக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

  • சமூக ஊடகங்களில் தங்களுக்குப் பிடித்த அணி அல்லது விளையாட்டு வீரர்களைப் பின்தொடர்வதன் மூலம் அவர்களுடன் நெருக்கமான தொடர்பை உணர்வதாக அமெரிக்காவில் உள்ள Snapchat பயனர்களில் 93% பேர் கூறுகின்றனர் 3

  • இந்த ஆண்டின் மிக அதிகம் பயன்படுத்தப்பட்ட "ஜெர்சி டிரை ஆன்" லென்ஸ்களில் ஒன்றாக NBA இருந்தது, இந்த லென்ஸைப் பயன்படுத்தி 800K+ ஸ்னாப்கள் உருவாக்கப்பட்டுள்ளன 4

AR பகிர்வு அன்பின் ஓர் வெளிப்பாடு

உலகளவில் பிற சமூக ஊடகத் தளங்களுடன் ஒப்பிடும்போது 5x அதிகமான கவன ஈர்ப்பை Snap விளம்பரங்கள் மற்றும் AR லென்ஸஸ் போன்ற Snapchat வணிக விளம்பரங்கள் வழங்குவதற்குக் காரணம் உள்ளது. 5 டிரை ஆன் லென்ஸஸிலிருந்து பிராண்ட் கதைகளை மெய்நிகர்மை மூலம் கூறுவது வரை, AR தொழினுட்பம் Snapchat பயனர்களுக்கு முன்னுரிமையளித்து அன்றாடத் தருணங்களுக்கும் புத்தாக்கத்திற்குமான இடைவெளியைக் குறைத்து அவற்றிற்கிடையே பாலம் அமைக்கிறது. 2024 ஆம் ஆண்டில், குறிப்பாக Snapchat பயனர்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் உணவு ஆகியவை லென்ஸஸில் வந்த தருணம் அவர்களுக்கு உற்சாகமளிப்பதாக அமைந்தது.

  • அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் அதிகம் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பான்சர் செய்யப்படாத லென்ஸஸில் பின்வருன அடங்கும்: Pink Dog, Soft Filter, Scribble World 2

  • அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட லென்ஸஸில் Venom, Bojangles / Tri-Arc Food Systems, Inc. போன்றவை அடங்கும் 2

  • உலகளவில் மிக அதிகம் பகிரப்பட்ட Bitmoji லென்ஸஸில் இவையும் அடங்கும்: Applebee’s மற்றும் Pepsi 2

புதிய தோற்றம், யார் இது?

AR முயன்றுபார்த்தல் மூலம் Snapchat-இல் அழகு தொடர்ந்து அதிகரிக்கிறது, இது உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் புதிய தோற்றம் மற்றும் வழக்கங்களைப் பகிர்ந்து கொள்வதை இன்னும் மகிழ்ச்சியாதானதாக மாற்றுகிறது. புதிய உதட்டுச் சாய நிறம் குறித்த குழு உரையாடல் வாக்கெடுப்பானாலும் சமீபத்திய ஐ லைனர் டிரெண்டு குறித்த பரிசோதனையாலும், சராசரி லென்ஸஸ் உடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் பியூட்டி லென்ஸஸ் அதிக பங்கேற்பிற்கான காரணியாக அமைந்தன. 6

  • 2024 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 113 மில்லியன் Snapchat பயனர்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஸ்பான்சர் செய்யப்பட்ட பியூட்டி லென்ஸைப் பயன்படுத்தியுள்ளனர் 2

  • அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட பியூட்டி லென்ஸஸில் இவையும் அடங்கும்: Ulta Beauty மற்றும் gott2b Metallic 2

  • 2024 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் 262 மில்லியன் மணிநேரங்களுக்கும் அதிகமாக ஸ்பாட்லைட்டில் பியூட்டி உள்ளடக்கத்தை Snapchat பயனர்கள் பார்த்துள்ளனர் 2

  • லென்ஸஸில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், அமெரிக்காவில் லிப்ஸ்டிக் டிரை-ஆன்கள் 16% அதிக பிளேடைமிற்கும் ஐலைனர் டிரை-ஆன்கள் 14% அதிக பிளேடைமிற்கும் காரணமாக அமைந்தன 7

ஃபேஷனை முன்னெடுத்துச் செல்லுதல்

ஃபேஷன் என்பது முற்றிலும் சுய வெளிப்பாடு தொடர்பானதாகும், எங்கள் சமூகம் AR முயன்றுபார்த்தல் லென்ஸஸ், Bitmoji Fashion மற்றும் பலவற்றின் மூலம் தங்களின் பாணியை எக்ஸ்ப்ளோர் செய்வதை Snapchat இன்னும் எளிதாக்குகிறது. இந்த ஆண்டில், Snapchat பயனர்கள் பிரபலமான பேக்கி தோற்றம் மூலம் தங்கள் Bitmojiக்குப் பிடித்த ஒப்பனைகள் செய்தனர், ஸ்டோரில் கால் வைக்காமலேயே தங்களுக்குப் பிடித்த ஆடம்பர ஆக்சஸரிகளை முயன்று பார்த்து மகிழ்ந்தனர், இவை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆடம்பரத்திற்கு அணுகல் வழங்குகின்றன.

  • 2024 ஆம் ஆண்டின் அதிகம் வாங்கப்பட்ட Bitmoji Fashion ஆடைகளாவன: பேக்கி ஸ்வெட்பேண்ட்கள், பேக்கி ஸ்கேட்டர் ஜார்ட்கள், பேக்கி கேமோ, கார்கோக் கால்சட்டைகள், பிளஷ் பம்கின் ஸ்லிப்பர்கள், பிளஷ் கேட் ஸ்லிப்பர்கள் 8

  • தயாரிப்பு வகைகளின் அடிப்படையில் உலகளவில் ரீடெயில் ஆடம்பரத்தில் அதிகம் பகிரப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட லென்ஸஸில் இவையும் அடங்கும்: Dior மற்றும் Stone Island, Chopard - நகை, Cartier - வாட்ச் 2

  • விளம்பரதாரர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட லென்ஸஸ் உருவாக்கிய மிகவும் பிரபலமான ஆடை மற்றும் ஆக்சஸரி தயாரிப்புப் பிரிவுகள்: கண்ணாடி, ஆடை, காலணி, நகை, வாட்ச்கள் 2

இசை வழியாக இணைப்பு

Snapchatஇல் இசை என்பது பொழுதுபோக்குக்கு மட்டுமானது அல்ல - அது குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை பிணைப்பதாகும். Snapchat பயனர்கள் Charli XCX’s 360 லென்ஸ் உடன் தங்கள் தோற்றத்தை மெருகேற்றி, மிக அதிகம் பகிரப்பட்ட இசை லென்ஸஸ் பட்டியலில் ஒன்றாக அதை இடம்பெறச் செய்தனர், தி கியூரின் “Friday, I’m in Love” போன்ற பழைய பாடல்களும் டாமி ரிச்மேனின் “MILLION DOLLAR BABY” போன்ற சமீபத்திய ஹிட் பாடல்களும் ஸ்னாப்கள் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பாடல்களில் மேல் நிலையில் இடம்பெற்றிருந்தன. 

  • அமெரிக்காவில் 79% Snapchat பயனர்கள் இசை குறித்த ஆர்வத்துடன் உள்ளனர் 3

  • அமெரிக்காவில் அதிகம் பகிரப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட லென்ஸஸில் இடம் பெற்றிருந்த கலைஞர்களில் ஒருவர்: Charli XCX 2

  • அமெரிக்காவில் உள்ளடக்க உருவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிலை பாடல்களில் சில: தி கியூரின் “Friday I'm in Love,” ஆர்டமாஸின் “I like the way you kiss me,” டாமி ரிச்மேனின் “MILLION DOLLAR BABY,” தி வீக்கெண்ட் மற்றும் மடோனாவின் “Popular

உலகச் சுற்றுலாக்களில் ஸ்னாப்

தங்களின் விருப்பமான சுற்றுலாத் தலத்தின் சிறு தோற்றத்தை ஸ்பாட்லைட்டில் பார்ப்பதில் இருந்து, தங்கள் சுற்றுலாப் பயணம் குறித்து நிகழ்நேரத்தில் ஸ்னாப் எடுப்பது வரை, சுற்றுலா குறித்த பல்வேறு செயல்பாடுகள் Snapchat-இல் நிகழ்கின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் ஸ்பாட்லைட்டில் 73 மில்லியன் மணிநேரங்களுக்கும் அதிகமான பயண உள்ளடக்கத்தை Snapchat பயனர்கள் பார்த்துள்ளனர், மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் VisitScotland மற்றும் Las Vegas போன்ற பிராண்டுகளின் ஸ்பான்சர் செய்யப்பட்ட AR லென்ஸஸைப் பகிர்ந்துள்ளனர், இவை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் டிஜிட்டல் பயண ஊக்கமூட்டிகளாக அமைந்தன! 2

  • அமெரிக்காவில் பிரபலமான பூங்காக்களில் இவையும் அடங்கும்: கலிபோர்னியா மாகாண பூங்காக்கள், NYC பூங்காக்கள், சிகாகோ பூங்காக்கள் 2

  • அமெரிக்காவில் பிரபலமான தீம் பார்க்குகளில் இவையும் அடங்கும்: சிக்ஸ் ஃபிளாக்ஸ் மற்றும் சீடர் ஃபேர் பொழுதுபோக்குப் பூங்காக்கள் 2

  • அமெரிக்காவில் பிரபலமான ஹோட்டல்களில் இவையும் அடங்கும்: ஹில்டன், ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ், ஹில்டனின் ஹாம்ப்டன், மேரியட் ஹோட்டல்கள் 2

மூவி மேனியா

எங்கள் சமூகம் சமீபத்திய வெற்றிப்படங்கள் மற்றும் அவை தொடர்பான டிரெண்டுகள் குறித்து அறிவதில் ஆர்வத்துடன் இருந்தது - உண்மையில், அமெரிக்காவில் 88% Snapchat பயனர்கள் திரைப்படப் பார்வையாளர்களாக உள்ளனர். 9 பொழுதுபோக்கு நிறுவனங்கள் வழங்கிய ஊடாடும் AR லென்ஸஸ் உடன் 2024 ஆம் ஆண்டில் புதிய திரைப்பட வெளியீடுகள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் தொடர்பான உற்சாகத்தை ஏற்படுத்த நாங்கள் உதவினோம், மேலும் முன்னோட்டங்கள், பின்னணிக் காட்சிகள் மூலம் திரையரங்கிற்குச் செல்வதை ஊக்குவிக்க உதவினோம். 

  • 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகம் பகிரப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட பொழுதுபோக்கு லென்ஸஸில் இவையும் அடங்கும்: Venom: The Last Dance மற்றும் Nickelodeon’s Kids’ Choice Awards 2

உண்ணும் ஸ்னாப்கள்

Snap வரைபடத்தில் புதிய உணவகங்களைக் கண்டுபிடிப்பதில் தொடங்கி Applebees மற்றும் Bojangles போன்ற பிராண்டுகளின் வேடிக்கையான சாப்பிடக்கூடிய ஸ்பான்சர் செய்யப்பட்ட AR லென்ஸஸைப் பகிர்வது வரையில், Snapchat பயனர்கள் முழுமையான சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்தனர். 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உணவகங்களுக்குச் சென்றது தொடர்பான 896 மில்லியனுக்கும் அதிகமான வருகைகளையும் 75 மில்லியனுக்கும் அதிகமான செக்-இன்களையும் செயலியில் Snapchat பயனர்கள் பதிவு செய்துள்ளனர்!

  • 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிரபலமான உணவகங்களில் இவையும் அடங்கும்: டாகோ பெல், சிக்-ஃபில்-ஏ, சோனிக், வெண்டிஸ் 10

  • அமெரிக்காவில் உணவகங்களின் அதிகம் பகிரப்பட்ட ஸ்பான்சர் செய்யப்பட்ட லென்ஸஸில் இவையும் அடங்கும்: Applebee’s மற்றும் Bojangles 2

Snapchat உடன் வளர்தல்

இந்த ஆண்டில் எங்களுக்கு 13 வயதாகிறது, இத்தருணத்தில் நாங்கள் பல தலைமுறைகள் பங்கேற்கும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளோம். அமெரிக்காவில் 50%க்கும் அதிகமான Snapchat பயனர்கள் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர், 11 எங்களுடன் இணைந்து பயணிக்கும் ஜென் ஸி மற்றும் மில்லினியல்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகளை வளர்ப்பதற்கும், டிரெண்டுகளை எக்ஸ்ப்ளோர் செய்வதற்கும் எங்கள் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். எங்கள் சமூகத்தின் மைல்கற்கள் முழுவதிலும் அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!

  • ஒரு Snapchat பயனர் ஆண்டு முழுவதும் எங்களுடன் உள்ளார் எனில், அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களின் ஆண்டுத் தக்கவைப்பு விகிதம் சராசரியாக 90% ஆக உள்ளது 12

  • நீங்கள் ஜென் ஸி ஆக இருந்தாலும் அல்லது மில்லினியல் ஆக இருந்தாலும், தினசரி Snapchat பயனர்களில் குறைந்தபட்சம் 95% பேர் Snapchat-இல் ஒரே அமர்வில் பல கீற்றுகளைப் பயன்படுத்துகின்றனர் 13

  • 2024 ஆம் ஆண்டில், உலகளவில் 578 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் 118 மில்லியன் மணிநேரங்களுக்கும் மேல் பெற்றோர் உள்ளடக்கத்தைப் பார்த்துள்ளனர். 2

இது எங்களுக்கும் உலகளவில் Snapchat பயனர்களுக்கும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. உங்களுக்குப் பிடித்தமான நினைவுகள் அடங்கிய உங்கள் பிரத்தியேக ஆண்டு இறுதி மீள்பார்வையை டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை அன்று பாருங்கள்.

மகிழ்ச்சியாக Snap செய்யுங்கள், 2025 ஆம் ஆண்டில் உங்களைச் சந்திக்கிறோம்!

செய்திகளுக்குத் திரும்புக

1

Snap Inc. Q2 2024 வருவாய்

2

Snap Inc. உள்ளார்ந்த தரவு, 1 ஜனவரி - 13 நவம்பர் 2024

3

Snap Inc.-ஆல் நடத்தப்பட்ட பேஷன் பாயின்ட்ஸ் 2024 NRG ஆய்வு.

4

Snap Inc. உள்ளார்ந்த தரவு ஜன 1 - நவ 13, 2024, உருவாக்கப்பட்ட மொத்த ஸ்னாப்களின் எண்ணிக்கை 10% மாதிரிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது

5

Amplified Intelligence-இன் AR மற்றும் அட்டன்ஷன் 2023 ஆய்வு, Snap inc மற்றும் OMG சார்பாக நடத்தப்பட்டது

6

Snap Inc உள்ளார்ந்த தரவு 1 ஜூன் 2023, 1 ஆக 2024

7

செப்டம்பர் 13, 2024 நிலவரப்படி Snap Inc உள்ளார்ந்த தரவு

8

Snap Inc. உள்ளார்ந்த தரவு ஜனவரி 1, 2024 - நவம்பர் 17, 2024

9

NRG ஃபியூச்சர் ஆஃப் ஃபிலிம் ஆகஸ்ட் 2024 ஆராய்ச்சி

10

Snap Inc. உள்ளார்ந்த தரவு, 1 ஜனவரி - 31 அக்டோபர் 2024

11

Snap Inc. உள்ளார்ந்த தரவு மார்ச் 14, 2024

12

Snap Inc. உள்ளார்ந்த தரவு Q4 2016 - Q4 2022

13

Alter Agents-இன் ஹவ் வி Snap 2024 ஆராய்ச்சி, Snap Inc-ஆல் நடத்தப்பட்டது

1

Snap Inc. Q2 2024 வருவாய்

2

Snap Inc. உள்ளார்ந்த தரவு, 1 ஜனவரி - 13 நவம்பர் 2024

3

Snap Inc.-ஆல் நடத்தப்பட்ட பேஷன் பாயின்ட்ஸ் 2024 NRG ஆய்வு.

4

Snap Inc. உள்ளார்ந்த தரவு ஜன 1 - நவ 13, 2024, உருவாக்கப்பட்ட மொத்த ஸ்னாப்களின் எண்ணிக்கை 10% மாதிரிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது

5

Amplified Intelligence-இன் AR மற்றும் அட்டன்ஷன் 2023 ஆய்வு, Snap inc மற்றும் OMG சார்பாக நடத்தப்பட்டது

6

Snap Inc உள்ளார்ந்த தரவு 1 ஜூன் 2023, 1 ஆக 2024

7

செப்டம்பர் 13, 2024 நிலவரப்படி Snap Inc உள்ளார்ந்த தரவு

8

Snap Inc. உள்ளார்ந்த தரவு ஜனவரி 1, 2024 - நவம்பர் 17, 2024

9

NRG ஃபியூச்சர் ஆஃப் ஃபிலிம் ஆகஸ்ட் 2024 ஆராய்ச்சி

10

Snap Inc. உள்ளார்ந்த தரவு, 1 ஜனவரி - 31 அக்டோபர் 2024

11

Snap Inc. உள்ளார்ந்த தரவு மார்ச் 14, 2024

12

Snap Inc. உள்ளார்ந்த தரவு Q4 2016 - Q4 2022

13

Alter Agents-இன் ஹவ் வி Snap 2024 ஆராய்ச்சி, Snap Inc-ஆல் நடத்தப்பட்டது