உலகளவில் 750 மில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் Snapchat ஐப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தங்களை வெளிப்படுத்தி மற்றும் உலகைப் பற்றி தெரிந்துகொள்ளும் இடம் அது. அதனால் தான் எங்கள் சமூகம் வளர்ந்து வருகிறது - மற்றும் ஆஸ்திரேலியாவில் 8 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் இருப்பதை இன்று அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!
எங்கள் ஆஸ்திரேலியச் சமூகம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உறவுகளை மேம்படுத்தவும் Snapchat ஐப் பயன்படுத்துவதைத் தோயர்கிறது.
இந்த மைல்கல்லை கொண்டாட நாங்கள் ஆஸ்திரேலிய Snapchat பயனர்கள் பற்றி சில வேடிக்கையான உண்மைகளை பகிர்கிறோம்:
Snapchat தற்போது ஆஸ்திரேலியாவில் 13-24 வயதுடையவர்களில் 80% ஐயும் 113-34 வயதுடையவர்களில் 75%-ஐயும் அடைகிறது.
Snpachat-ஐ ஜெனரேஷன் Z விரும்பும் அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 45% Snapchat பயனர்கள் 25வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 2.
ஆஸ்திரேலிய Snapchat பயனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 40 முறை செயலியைத் திறக்கிறார்கள் - நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அரட்டையடிக்க, தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளின் ஹைலைட்டுகளைப் பார்க்க அல்லது தங்கள் வாழ்க்கையிலிருந்து தருணங்களைப் பகிர்ந்து கொள்ள 3.
எங்கள் ஆஸ்திரேலிய சமூகத்தில் 60 சதவீதம் பேர் தினமும் Snapchat-இல் தங்களைத் தாங்களே ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்திக்கொள்ளவும், மகிழ்ச்சியுடன் இருக்கவும், தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளை வாங்கவும் இணைப்பு நிஜமாக்கம் (AR) லென்ஸசுடன் தொடர்புகொள்கிறார்கள் 4.
அவர்கள் அனைவரையும் ஒரு முக்கிய விஷயம் ஒன்றிணைக்கிறது - வேடிக்கையான, அழுத்தமில்லாத, நண்பர்கள், குடும்பம் மற்றும் உலகம் ஆகியவற்றுக்கு இடையே உண்மையான இணைப்புகளை குறிக்கும் தளத்தின் மீதான அன்பு.
எங்களுடன் ஸ்னாப்பிங் செய்வதற்கு எங்கள் ஆக்திரேலிய சமூகத்திற்கு நன்றி!