இன்று Snapchat இன் உள்ளே இருக்கும் புதிய விளையாட்டான Bitmoji பெயிண்டை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம், இதில் ஒரு பெரிய இணையொட்டுப் படத்திற்குப் பங்களிப்பதற்காக மில்லியன் கணக்கான ஆட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூட முடியும்.
Snap கேம்ஸ் ஸ்டூடியோவால் உருவாக்கப்பட்ட Bitmoji பெயிண்ட், Snapchat இன் உள்ளே இருக்கும் விளையாட்டு என்ற முற்றிலும் புதிய வகையை அறிமுகப்படுத்துகிறது. Snapchat பயனர்களின் Bitmojis உலகெங்கிலும் பயணிக்கலாம், நண்பர்களுடன் இணையலாம் மற்றும் ஒரு பகிரப்பட்ட கேன்வாஸில் அவர்களின் கற்பனையைக் கட்டவிழ்த்து விடலாம். சாதாரண கிறுக்கல்கள், வேடிக்கையான செய்திகள் அல்லது பெரிய இயற்கைக்காட்சிகள் என Bitmoji பெயிண்டில் அனைத்தும் சாத்தியமாகும்.
இது எப்படி வேலை செய்கிறது என்பது இதோ:
அரட்டை (ராக்கெட் படவுருவுக்குப் பின்னால்) அல்லது தேடல் மூலம் விளையாட்டினுள் நுழையும் ஆட்டக்காரர்கள், வெளியில் மிதக்கும் பல தீவுகளுடன்கூடிய ஒரு கிரகத்தை எதிர்கொள்வர்.
ஒவ்வொரு தீவும் நூற்றுக்கணக்கான பிற நிஜ ஆட்டக்காரர்களுடன் ஆட்டக்காரர்கள் இணைவதற்கான ஒரு சேவையகம் ஆகும். ஆட்டக்காரர்கள் சேர்வதற்காக ஒரு தீவைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் நேரலையில் திருத்தியமைக்கக்கூடிய கேன்வாஸில் வைக்கப்படுவர்.
நகர்தல், பெயிண்ட் செய்தல் மற்றும் வரைபடம் என்ற 3 இயக்கமுறைகளுக்கு இடையே மாறுவதன் மூலம் ஆட்டக்காரர்களால் பெயிண்ட் செய்ய, ஆராய மற்றும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியும்.
ஆட்டத்தில் நீங்கள் மற்ற Snapchat பயனர்களை இயல்பாகச் சந்தித்து, அவர்களுடன் எமோட்களின் மெனு மூலம் உரையாடலாம்.
அங்கு இருக்கக்கூடாத எதையோ பார்க்கிறீர்களா? எங்கள் செயலியினுள் புகாரளித்தல் விருப்பத்தைப் பயன்படுத்தி அதனை விரைந்து புகாரளியுங்கள்.
Android பயனர்களுக்கு Bitmoji பெயிண்ட் அனுபவத்தைத் தனிப்பயனாக்குவதற்காக Snap டோக்கன்களையும் அறிமுகப்படுத்துகிறோம். Snap டோக்கன்கள் என்பன வாங்கி உங்கள் Snapchat கணக்குடன் பிணைக்கப்பட்ட மெய்நிகர் வேலட்டில் சேமித்து வைக்ககூடிய டிஜிட்டல் பொருட்களாகும். Android இல் Bitmoji பெயிண்டில், விளையாட்டில் அதிக விரைவாக நகர்வதற்காக ரோலர் ஸ்கேட்டுகளையோ ஹோவர்போர்டுகளையோ வாங்குவதற்கு அல்லது பெரிய படைப்புகளை உருவாக்குவதற்காக இங்க் பெயிண்டரையோ பெயிண்ட் ரோலரையோ வாங்குவதற்கு Snap டோக்கன்களைப் பயன்படுத்த முடியும்.
Bitmoji பெயிண்ட் இன்று முதல் உலகளவில் வெளியிடப்படுகிறது. இந்தப் புதிய கலை உலகின் எதிர்காலத்தை வடிவமைக்க எங்கள் சமூகம் எதை உருவாக்குகிறது என்பதைக் காண நாங்கள் மிக்க ஆர்வமாய் உள்ளோம்.