13 நவம்பர், 2018
13 நவம்பர், 2018

நட்பைக் கொண்டாடுதல்

இன்று Snapchat-இல் உங்கள் நட்பைக் கொண்டாட ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் நட்பு சுயவிவரத்தைக் கண்டறிய, நண்பரின் Bitmoji-ஐத் தட்டவும்.

Snapchat இல் உங்கள் நட்புகளைக் கொண்டாட ஒரு புதிய வழியை இன்று அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் நட்புத் தகவல் பக்கத்தைக் காண நண்பரின் Bitmoji ஐத் தட்டுங்கள்.

நட்புத் தகவல் பக்கம் ஒவ்வொன்றிலும், நீங்களும் உங்கள் நண்பர்களும் அரட்டையில் சேமித்த படங்கள், வீடியோக்கள், செய்திகள், இணைப்புகள், இன்னும் பலவற்றை ஒரே இடத்தில் காணலாம். நட்புத் தகவல் பக்கங்கள் உங்களுக்குப் பிடித்த நினைவுகளையும், இதுவரையில் நீங்கள் சேமித்த முக்கியத் தகவல்களையும் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இது உங்கள் நட்பின் முதன்மைகளைக் கண்டறியும் விரைவான வழி.

நட்புத் தகவல் பக்கங்கள் உங்கள் உறவுகளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுகின்றன--ஒவ்வொரு நட்பும் உங்களுக்கும் உங்கள் Snapchat நண்பருக்கும் (அல்லது குழுவிற்கு!) மட்டுமே தெரியும்.

நட்புத் தகவல் பக்கங்கள் வரவிருக்கும் வாரங்களில் உலகளவில் Snapchat பயனர்களுக்குப் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

Snap செய்து மகிழ்க!

செய்திகளுக்குத் திரும்பு