
2023 மகளிர் உலகக் கோப்பையைக் கொண்டாடுகிறோம்
Snapchat, மகளிர் உலகக் கோப்பை தேசிய அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன், புதிய ஆட்கொள்ளும் AR, ஆக்கப்பூர்வக் கருவிகள் மற்றும் உள்ளடக்கத்துடன் உங்களை நெருக்கமாக எடுத்துச் செல்கிறது.
2023 உலகக் கோப்பை இந்த வாரத்தில் தொடங்குகிறது, அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள Snapchat பயனர்கள் அழகான விளையாட்டை அனுபவிக்க, கொண்டாட மற்றும் ஈடுபட புதிய வழிகளும் தொடங்குகின்றன.
இந்த வாரம் தொடங்கி, 750 மில்லியனுக்கும் அதிகமான Snapchat-இன் உலகளாவிய சமூகத்தினர் மக்களின் கால்பந்திற்கான தங்களின் அன்பு மற்றும் ஆதரவை குதளம் முழுவதும் தொடர்ச்சியான வலிந்தீர்க்கும் அனுபவங்கள் மூலம்.காட்டலாம். அமெரிக்க மகளிர் தேசிய அணி (USWNT) உடன் தனித்துவமான AR அனுபவத்திலிருந்து மகளிர் லென்ஸஸ் படைப்பாளர்கள் உருவாக்கிய புதிய AR லென்ஸஸ் மற்றும் உற்சாகமூட்டும் ஆக்கப்பூர்வ கருவிகள் வரை, இந்த உலகக் கோப்பையை மரக்கமுடியாத நிகழ்வாக மாற்றுவதற்கு மகளிரை கொண்டாடுமாறு Snapchat சமூகத்தை ஊக்குவிக்கிறோம்.
"மகளிர் விளையாட்டுக்களை ஆதரிக்கும் எங்களது உறுதிப்பாட்டை நாங்கள் தொடரும்போது, Snapchat 2023 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறது, மேலும் உலகின் மிகப்பெரிய அரங்கில் வீரர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் போது ரசிகர்களுக்குப் பிடித்த தேசிய அணிகள் மற்றும் வீரர்களுடன் அவர்களை நெருக்கமாக்குகிறது. மூழ்கடிக்கும் உள்ளடக்க கவரேஜ் மூலம், படைப்பாளர்கள், கூட்டாண்மைகள் மற்றும் புதிய புதுமையான AR அனுபவம் மூலம் Snapchat பயனர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்களது கால்பந்து மீதான அன்பை வெளிப்படுத்த இணையற்ற வாய்ப்பைப் பெறுவார்கள்."— எம்மா வகிலே, ஸ்போர்ட்ஸ் பார்ட்னர்ஷிப்ஸ், Snap Inc.
AR அனுபவங்கள்
இந்த ஆண்டு, Snapchat அமெரிக்க சாக்கர் மற்றும் USWNT-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதுமையான AR லென்ஸை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதுமையான USWNT ‘Team Tracker’ லென்ஸஸ் USWNT ரோஸ்டரின் 3D Bitmoji அவதார்கள், புள்ளிவிவரங்கள், செய்தி, வேடிக்கையான தகவல்கள் மற்றும் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும் ஹைலைட்டுகள் ஆகியவற்றுடன் ரசிகர்களை அணிக்கு நெர்க்கமாக கொண்டுவர மேம்பட்ட AR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

உலகளாவிய AR லென்ஸஸ் பங்கேற்கும் ஒவ்வொரு உலகக் கோப்பை நாட்டிற்கும் கிடைக்கிறது, இதன்மூலம் Snapchat பயனர்கள் எங்கிருந்தும் தங்கள் நாட்டின் பெருமையைக் காட்டமுடியும்.
உலகளாவிய ரசிகர் செல்ஃபி அனுபவம்: Snapchat பயனர்கள் ஒவ்வொரு பங்கேற்கும் நாட்டிற்கான தனித்துவமான செல்ஃபி லென்ஸஸை பார்க்க 'உலகளாவிய லென்ஸ் முழுவதும்' என்பதை ஸ்குரோல் செய்துப் பார்க்கலாம். AR இல் நிபுணத்துவம் பெற்ற மகளிர் தலைமையிலான டச்சு XR டிசைன் ஸ்டுடியோவான வீடியோஆர்பிட் ஸ்டுடியோவில் இந்த லென்ஸ்கள் மகளிர் லென்ஸ் படைப்பாளர்களால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
FIFA லென்ஸஸ்: ஒரு புதிய AR லென்ஸ் FIFA ஃபேன்செஸ்டிரி வினாடி வினாவை உள்ளடக்கியுள்ளது, எனவே Snapchat பயனர்கள் ஆதரவளிக்க எந்த நாடுகள் நன்கு பொருந்தும் என்பதைக் கண்டறியலாம்!
USWNT ஜெர்சி முயன்று பார்த்தல் லென்ஸ்: Snap-இன் Live Garment Transfer (நேரலை ஆடைப் பரிமாற்றம்) தொழிநுட்பம் இயக்கும் அதிகாரப்பூர்வ 2023 USWNT ஜெர்சியில் அவர்கள் எப்படி தோன்றுவார்கள் என்பதை Snapchat பயனர்கள் பார்க்கலாம்.
Togethxr AR லென்ஸஸ்: Alex Morgan, Chloe Kim, Simone Manuel மற்றும் Sue Bird ஆகியோரால் நிறுவப்பட்ட Togethxr உடன் இணைந்து பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் மகளிர் விளையாட்டுகளில் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் முதலீட்டை ஆதரிக்கும் ஒரு புதிய லென்ஸ். Togethxrலென்ஸஸ் VideOrbit-ஆல் உருவாக்கப்பட்டது மற்றும் Snapchat பயனர்கள் மகளிர் விளையாட்டுகளுக்கு தங்கள் ஆதரவு மற்றும் பறிவைக் காட்டுவதை ஊக்குவிக்கிறது.
ஆக்கப்பூர்வக் கருவிகள்
ஆக்கப்பூர்வக் கருவிகளின் புத்தம் புதிய தொகுப்பு ஒருவர் போட்டி முழுவதும் தங்கள் ரசிகர் அனுபவத்தை மேம்படுத்துவதை அனுமதிக்கிறது!
Bitmoji : அடிடாஸ் உடன் இணைந்து, Snapchat பயனர்கள் தங்கள் தாய் அணிக்கு ஆதரவு தெரிவிக்க தேர்ந்தெட்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ கால்பந்து கிட்களில் தங்கள் Bitmoji அவதார்களுக்கு ஆடை அணிவிக்கலாம்.
இந்த நாடுகளுக்கு அடிடாஸ் ஃபேன் கியர் பிரிவில் அதிகாரப்பூர்வ குழு கருவிகள் கிடைக்கின்றன:கொலம்பியா, கோஸ்டா ரிகா, இத்தாலி, ஜமைக்கா, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின்.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், தென் கொரியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், அதிகாரப்பூர்வ குழு கருவிகள் கிடைக்கும்.
சீனா, டென்மார்க், அயர்லாந்து, ஹைட்டி, மொரோக்கோ, பனாமா, தென் ஆப்பிரிக்கா, சுவிச்சர்லாந்து, வியட்நாம் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கு Bitmoji ரசிகர் கியர் பிரிவில் கூடுதல் நாடு கருவிகள் கிடைக்கின்றன.
ஸ்டிக்கர்கள் மற்றும் வடிகட்டிகள்: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே, அமெரிக்கா, ஸ்வீடன், நைஜீரியா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ மகளிர் தேசிய அணி ஸ்டிக்கர்கள் மற்றும் வடிகட்டிகள் உட்பட, உங்கள் நண்பர்களுடன் அரட்டையடிக்கவும், பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஸ்டிக்கர்கள் மற்றும் வடிகட்டிகளுடன் உங்கள் புகைப்படங்களை அலங்கரிக்கவும்.
கேமியோக்கள்: Snapchat உரையாடல்களை மேலும் தனிப்பட்டதாகவும் வேடிக்கையாகவும் மாற்ற உங்கள் கேமியோவைச் சேர்க்கவும். கேமியோக்கள் ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கிறது மற்றும் அதிகாரப்பூர்வ தேசிய அணி தொகுப்புகள் அடிடாஸ் உடனான எங்கள் கூட்டாண்மை மூலம் அர்ஜென்டினா, கோஸ்டா ஜெர்மனி, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குக் கிடைக்கின்றன.
உள்ளடக்கம்
ஊடகக் கூட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளிகளிடமிருந்து அனைத்து கோல்கள், ஹைலைட்டுகள் மற்றும் பிஹைண்ட் தி சீன்ஸ் ஆகியவற்றைப் பெறுங்கள்.
அமெரிக்க கால்பந்து செயலி ஒருங்கிணைப்பு: ரசிகர்கள் தங்கள் Snapchat கதையில், புதிய லென்ஸைப் பயன்படுத்தி கட்டுரையை பிர்வ்யூ செய்து அவர்களின் எதிர்வினைகளைப் படம் பிடித்து அமெரிக்க கால்பந்து செயலியில் இருந்து நேரடியாக அமெரிக்க கால்பந்து செய்திகளைப் பதிவிடலாம்.
காட்சிகள்: Togethxr 'Offside Special' என்ற கதைகள் பக்கத்தில் புதிய, வாரத்த்கிற்கு இரண்டு காட்சிகளை தயாரிக்கும். ஆன் ஃபீல்டு மேஜிக்கில் இருந்து ஆஃப் ஃபீல்டு தருணங்கள் மற்றும் கதைவரிகள் வரை மகளிர் கால்பந்தின் அனைத்து விஷயங்களிலும் மூழ்கிடுங்கள்.
இங்கிலாந்தின் ITV மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆப்டஸ் ஸ்போர்ட் கதைகள் தாவலில் அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை ஹைலைட்டுகளை வழங்கும்.
Snap நட்சத்திரங்கள் மற்றும் படைப்பாளர்கள்: கதைகள் மற்றும் ஸ்பாட்லைட் முழுவதும் அலிஷா லேஹ்மான், அசிசத் ஓஷோலா, ஜோர்டின் ஹூடேமா, ஜூலியா க்ரோசோ, மேடிசன் ஹம்மண்ட், மேகன் ரெய்ஸ், ரியான் டோரெரோ மற்றும்அன்டோனியோ சாண்டியாகோ உட்பட தங்களுக்குப் பிடித்த கால்பந்து வீரர்கள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் படைப்பாளர்களைப் பின்தொடர்வதன் மூலம் Snapchat பயனர்கள் பிரத்தியேகமான, விளையாட்டு திடலில் நடக்கும் உள்ளடக்கத்தை அணுகலாம்.
அமெரிக்க கால்பந்து போட்டி முழுவதும் தங்கள் Snap நட்சத்திரம் தகவல் குறிப்பில் வழக்கமான புதுப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கத்தை இடுகையிடும்.
ஸ்பாட்லைட் சவால்கள்: அமெரிக்காவில் உள்ள Snapchat பயனர்கள் பின்வருவன உள்ளிட்ட மகளிர் கால்பந்து தீம் கொண்ட ஸ்பாட்லைட் சவால்களுக்கு தங்கள் சிறந்த Snapகளைச் சமர்ப்பிப்பதற்கு $30,000 வரை பரிசு வெல்லலாம்.
#TeamSpirit (ஜூலை 19-25) - உங்களுக்குப் பிடித்த மகளிர் கால்பந்து அணிக்கான உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்
#GoalCelebration (ஜூலை 31-ஆகஸ்ட் 6) - ஒரு சின்னமான பெண்கள் கால்பந்து கோல் கொண்டாட்டத்தை மீண்டும் உருவாக்க டைரக்டர் பயன்முறையைப் பயன்படுத்தவும்!
#SoccerWatchParty (ஆகஸ்ட் 17-21) – உங்கள் மகளிர் கால்பந்து வாட்ச் பார்ட்டியை பெருமையுடன் கட்ட ஒரு இடக் குறியைப் பயன்படுதுங்கள்!
Snap வரைபடம்: ஒவ்வொரு போட்டி, வாட்ச் பார்ட்டி, கொண்டாட்டம் மற்றும் பலவற்றுக்கு Snap வரைபடத்தில் க்யூரேட் செய்யப்பட்ட கதைகள்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஜிலாந்தில் சந்திப்போம்! 👻⚽