நாங்கள் முதலில் அரட்டையைத் தொடங்கும்போது, நேருக்கு நேர் உரையாடலின் சிறந்த பகுதிகளைப் பின்பற்றுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. அரட்டை 1.0 என்பது இங்கு இருப்பதன் மகிழ்ச்சியைப் பற்றியது - பெரும்பாலான செயலிகள் உங்கள் நண்பர் டைப் செய்துகொண்டிருக்கிறார் என்று உங்களிடம் சொன்னபோது, உங்கள் நண்பர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அரட்டை உங்களுக்குத் தெரிவிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என்பது பற்றி நிறையக் கற்றுக்கொண்டோம், ஆனால் எங்கள் இலக்கு மாற்றமடையாமல் உள்ளது. அரட்டை என்பது தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் - இது நேருக்கு நேர் சந்தித்து நேரத்தைச் செலவிடுவதற்கு அடுத்தபடியாக மட்டுமே இருக்க வேண்டும்.
இன்று, அரட்டை 2.0 -ஐ அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சில அரட்டைகளை அனுப்புவதன் மூலம் நீங்கள் ஆரம்பிக்கலாம், பின்னர் உங்கள் நண்பர் வந்ததும், ஒரே தட்டில் உடனடியாகப் பேசவோ அல்லது வீடியோ அரட்டையடிக்கவோ தொடங்கலாம். நீங்கள் ஒரு பாடலைப் பாட விரும்பினால் உங்கள் நண்பர் வெறுமனே அதைக் கேட்டு ரசிக்கலாம், அல்லது அவர்களுக்கு ஒரு புதிய நாய்க்குட்டியைக் காட்ட இருக்கிறீர்கள் என்றால் அவர்கள் அதைப் பார்க்கலாம். அவர்கள் அங்கு இல்லையென்றால், நீங்கள் சொல்ல வருவதை ஆடியோ குறிப்பு மூலம் சொல்லி விரைவாக அனுப்பலாம். மேலும் சில நேரங்களில், ஒரு ஸ்டிக்கர் அதைச் சிறப்பாகச் சொல்கிறது :)
புதிய அரட்டையைப் பற்றி எங்களுக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், தொடர்புகொள்வதற்கான இந்த எல்லா வழிகளுக்கும் இடையில் உங்களால் எவ்வளவு எளிதாக மாற முடிகிறது என்பதாகும் - அதுவும் நீங்கள் நேரில் தொடர்புகொள்ளும் போது செய்வது போல. அது சாத்தியமானால், நீங்கள் குறுஞ்செய்தி அனுப்புவதோ, குரல் வழி அழைப்பை மேற்கொள்ளுவதோ அல்லது வீடியோ அரட்டையடிப்பதோ இல்லை… நீங்கள் வெறுமனே பேசுகிறீர்கள். இந்த மறுவடிவமைப்பில் நாங்கள் சிறிது காலமாகப் பணியாற்றி வருகிறோம் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்!
ஆட்டோ அட்வான்ஸ் கதைகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம், இது உங்கள் நண்பர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கான மிக விரைவான வழியாகும். நீங்கள் ஒரு கதையை முடிக்கும்போது, அடுத்தது தானாகவே தொடங்கிவிடும் - தற்போதைய கதையைத் தவிர்த்துவிட்டு அடுத்ததிற்குச் செல்ல ஸ்வைப் செய்யவும் அல்லது வெளியேறக் கீழே இழுக்கவும்!
இறுதியாக, நாங்கள் எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்து, சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறோம், மேலும் வரவிருக்கும் அற்புதமான புதிய தயாரிப்புகளுக்கான அடித்தளங்களை உருவாக்குகிறோம். அதைப் பற்றி மேலும் அறிய எங்கள் புதிய தனியுரிமை மையத்தைப் பாருங்கள்!