இன்று, நாம் நம் நண்பர்களுடன் பேசும் முறையை மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை மாற்றுகிறது. Snapchat-இல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லென்ஸஸ் உள்ளன, மேலும் ஒவ்வொரு நாளும் எங்கள் தினசரிச் செயல்நிலை பயனர்களில் 75%-க்கும் மேற்பட்டோர் AR உடன் இடைவினை புரிகின்றனர். ஆனால், முற்றிலும் புதிய வழிகளில் உலகத்தைக் காண AR ஐப் பயன்படுத்தும் ஒரு எதிர்காலத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்.
கடந்த ஆண்டு நாங்கள் Landmarkerகளை அறிமுகம் செய்தோம், இவை தனிக் கட்டிடங்களைப் புரிந்துகொள்ள Snapchat கேமராவுக்கு உதவியதுடன் உலகின் மிகச் சிறந்த அடையாளங்கள் சிலவற்றுடன் ஊடாட லென்ஸஸை அனுமதித்தது. பக்கிங்ஹாம் அரண்மனை முதல், நியூயார்க்கில் உள்ள ஃப்ளாட்டிரான் கட்டிடம், தாஜ் மஹால் வரையிலும், இந்த இடங்கள் உலகின் மிகவும் படைப்பாற்றல் மிக்க மக்களின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் புதிய வழிகளில் உயிரோட்டம் பெற்றன, இது நம் இயல்நிலை மற்றும் டிஜிட்டல் உலகை நெருக்கமாகப் பிணைக்கிறது.
இன்று நாங்கள் லோக்கல் லென்ஸஸுடன் அடுத்த படியை எடுத்து வைக்கிறோம், இது இந்தத் தொழினுட்பத்தை மேம்படுத்தி, நகரத் தொகுதிகள் உள்ளிட்ட பெரிய பகுதிகளை மிகைப்படுத்துவதைச் சாத்தியமாக்குகிறது. 360-டிகிரி படங்கள் மற்றும் சமூக Snapகளிலிருந்து தகவல்களை எடுப்பதன் மூலம், இயல்நிலை உலகின் டிஜிட்டல் உருமாதிரியை எங்களால் உருவாக்க முடிகிறது, மேலும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் மிகைப்படுத்தப்பட்ட அனுபவத்தைக் காண முடிகிறது. இதனை 3D மறுகட்டமைப்பு, இயந்திரக் கற்றல் மற்றும் பகிரப்பட்ட மேகக் கணிமையுடன் இணைத்து, இப்போது முழு நகரத் தொகுதிகளையும் எங்களால் வரைபடமாக்க முடியும்.
இந்த வாரம், சிட்டி பெயிண்டர் என்று அழைக்கப்படும் எங்கள் முதல் லோக்கல் லென்ஸை இலண்டனில் உள்ள கார்னாபி தெருவில் உங்களால் காண முடியும். இயல்நிலை உலகின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான, பகிரப்பட்ட AR உலகில் Snapchat பயனர்கள் சேர்வதுடன், தங்களைச் சுற்றியுள்ள இடத்தை வண்ணந் தீட்டவதற்காக ஒன்றிணைய முடியும். நீங்கள் எப்போது நெருங்குகிறீர்கள் என்பதைக் காண Snap வரைபடத்தில் படவுருவைப் பாருங்கள். ஒன்றிணைந்து அதை மிகவும் வண்ணமயமான உலகமாக மாற்றுவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என நாங்கள் அறிந்துள்ளோம்!