தலைமை

நிர்வாகக் குழு

கிரேஸ் காவோ

தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி

20 ஆண்டுகளுக்கு அதிகமான சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத்துறை அனுபவத்தின் மூலம் Snapஇன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கிரேஸ், Snapஇன் 850+ மில்லியன் மாதாந்திரப் பயனர்களை அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள வகையில் தொடர்புகொள்ள உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு உதவுகிறார். Pepsi, PlayStation, Crate&Barrel, Apple போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுக்காக விருது வென்ற பரப்புரைகளை அவர் வழிநடத்தியுள்ளார். மிகச் சமீபத்தில் Spotify Advertisingஇன் ‘Spreadbeats’ B2B பரப்புரையை அவர் வழிநடத்தினார், இது 2024ஆம் ஆண்டில் கேன்ஸில் நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கான பல்வேறு வகைகளில் கிராண்ட் பிரிக்ஸ் உள்ளிட்ட விருதுகளை வென்று மிக அதிக விருதுகளைப் பெற்ற பரப்புரைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. Adweekஇன் முதல் 50 தவிர்க்க முடியாத வணிகத் தலைவர்கள் பட்டியலிலும் கிரேஸ் இடம்பெற்றார். Snapஇல் சேருவதற்கு முன் அவர் Spotify மற்றும் Instagramக்கான உலகளாவிய வணிக சந்தைப்படுத்தலின் தலைவராக வணிகங்கள் மற்றும் படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

கிரேஸ் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல்தொடர்புகள் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார், கலிஃபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணி பூனையுடன் வசிக்கிறார்.

நிர்வாகிகள் பக்கத்திற்குத் திரும்பச் செல்க