13 ஜனவரி, 2025
13 ஜனவரி, 2025

அன்புள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், ஐ லவ் யு.

பசிபிக் பாலிசேட்சில் உள்ள டாட்ஸ் டைனிங் ரூம் என்றழைக்கப்படும் அசல் Snapchat தலைமையகம்



அன்புள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஐ லவ் யு. 

நான் பசிபிக் பாலிசேட்சில் வளர்ந்தேன். நான் என்னுடைய ரேசர் ஸ்கூட்டரில் தெருத் தெருவாகச் சுற்றினேன். எனக்கு உயரமான பழைய மரங்கள் பரிச்சியமானவை, அதில் எனக்குப் பிடித்தவையும் இருந்தன. என் அம்மா அல்மா ரியலிலும், என் அப்பா டொயோபாவிலும் வசித்தனர். அம்மாவின் வீடு சாம்பலில் மூழ்கி வியக்கத்தக்க வகையில் இன்னும் அங்குள்ளது. அப்பாவின் வீடு எரிந்து தரைமட்டமாகிவிட்டது. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். 

150 க்கும் மேற்பட்ட Snap குழு உறுப்பினர்கள் அங்கிருந்து இடம் பெயர்க்கப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கையில் அவர்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் சேர்க்கப்படவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸை பூர்வீகமாகக் கொண்ட எண்ணிலடங்காத மக்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். சிலர் உயிரிழந்து விட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், உன்னை நினைத்து என் இதயம் நொறுங்குகிறது, ஆனாலும் உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன். படைப்பாற்றல், புதுமை மற்றும் கதைகூறுபவர்கள் நிறைந்த இந்த நகரம் உருகுகிறது. புகைக்கரி சூழந்துள்ள இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஏற்கனவே உயிர்ப்பிக்கத் தொடங்கிவிட்டது.

அங்கு திருடும் ஒவ்வொருவருக்கும், ஆயிரக்கணக்கானோர் அவர்களின் நேரத்தையும் பொக்கிஷங்களையும் பிரார்தனைகளையும் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கோழைக்கும் மனோதிடத்தை வழங்குபவர்கள் இருக்கிறார்கள். குற்றம் சுமத்தும் ஒவ்வொருவருக்கும் ஆறுதலாளித்து நம்பிக்கை வழங்கும் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்.

இது போன்ற பேரும் தீயை எதிர்கொள்ளும் முதல் சமூகம் நாம் இல்லை. கடைசி சமூகமாகவும் நாம் இருக்க மாட்டோம். ஆனால் நாம் நம் வலு, நம் கூர்மதி மற்றும் நேயத்தை மீண்டும் மீண்டும் புதியதை உருவாக்கப் பயன்படுத்துவோம். நம் நகரின் கலைஞர்கள் நம்முடைய இல்லமான இந்த புதிய திரையில் புதிய வண்ணத்தைச் சேர்ப்பார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ், ஐ லவ் யு. நாடு முழுவதிலிருந்தும் எங்கள் அலுவலக பார்க்கிங்கில் குவிந்துள்ள அவசரகால சேவைப் பணியாளர்களைப் பார்க்கும்போது பல கோடி மக்களும் உன்னை நேசிக்கிறார்கள் என்பது புரிகிறது. 

லாஸ் ஏஞ்சல்ஸ், நீண்ட தூர பயணத்திற்கு நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். மீண்டும் கட்டமைக்கவும் அதற்குப் பிறகு எது வந்தாலும் எதிர்கொள்ளவும். உனக்கு உதவவே நாங்கள் இங்கு இருக்கிறோம். Snap, பாபி மற்றும் நான் உடனடி உதவிக்கு $5 மில்லியனை விநியோகித்துள்ளோம், மேலும் விநியோகிப்போம். நகரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் அவசரகால சேவைப் பணியாளர்களுக்கு உணவும் இலவச வசிப்பிடமும் வழங்குகிறோம். பேரும் தே மீட்பு நிபுணர்களின் பரிந்துரைகளைக் கேட்டு மேலும் என்ன செய்ய முடியும், சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என ஒவ்வொரு நாளும் கற்கிறோம். உங்களுடன் இணைந்து ஒன்றாகக் கட்டமைக்க விரும்புகிறோம். 

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொல்ல நினைப்பது, சில நிமிடங்களில் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது தான்.  இன்னும் செய்வதற்கான வேலை இருக்கிறது, கற்பிக்க குழந்தைகள் இருக்கிறார்கள், பராமரிப்பு தேவைப்படும் குடும்பங்கள் இருக்கின்றன மற்றும் வரவேற்க புதிய நாள் பிறக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ், நான் உன்னை நேசிக்கிறேன், முன்னேறிச் செல்லும்போது உனக்காக நாங்கள் எங்கள் நேரம், வளங்கள் மற்றும் உதவியை கொடுப்போம். நான் சத்தியம் செய்கிறேன்.

இவான்

செய்திகளுக்குத் திரும்புக