Snapchat இன் புதிய குடும்ப மையம் அம்சங்கள் மூலம் பெற்றோர்களுக்கு ஆழமான கண்ணோட்டத்தை வழங்குவது

எங்கள் தளத்தில் உள்ள பதின்ம வயதினரைப் பாதுகாக்க நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செய்யலாற்றுகிறோம். அதே நேரத்தில் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு Snapchat இல் தங்கள் பதின்ம வயதினர் அனுபவத்தில் முக்கியப் பங்காற்றுவதற்கான கருவிகளை வழங்குகிறோம். பெற்றோர்களுக்கு தங்கள் பதின்ம வயதினரை பாதுகாப்பான மற்றும் நேர்மறையான இணையதள அனுபவத்தை நோக்கி வழிநடத்த உதவும் வகையில் நாங்கள் 2022 ஆம் ஆண்டில் குடும்ப மையத்தைத்தொடங்கினோம் - இது கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இன்று, பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயதினர் Snapchat ஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை வழங்கும் புதிய அம்சங்களுடன் நாங்கள் குடும்ப மையத்தை பயன்படுத்துவதை எளிதாக்குகிறோம்.

Snapchat இல் பதின்ம வயதினர் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பது பற்றிய சிந்தனைகள்
எங்கள் குடும்ப மையத்தில், பெற்றோர்கள் இப்போது முந்தைய வாரத்தில் ஒவ்வொரு நாளும் Snapchat இல் தங்கள் பதின்ம வயது பிள்ளை செலவழித்த சராசரி நேரத்தைப் பார்க்கலாம். அந்த நேரம் வெவ்வேறு அம்சங்களாக எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதையும் அவர்கள் பார்க்கலாம் – தங்கள் பதின்ம வயது குழந்தை நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலோ அல்லது Snap செய்வதிலோ அல்லது கேமராவை பயன்படுத்தி உருவாக்குவதிலோ, Snap Map உடன் ஆராய்ச்சி செய்வதிலோ அல்லது ஸ்பாட்லைட் மற்றும் கதைகளில் உள்ளடக்கத்தைப் பார்ப்பதிலோ - என எந்தெந்த அம்சங்களில் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை அவர்களால் விரிவாகப் பார்க்க முடியும். இந்த நுண்ணறிவு ஆரோக்கியமான திரை நேரம் மற்றும் இணையப் பழக்கவழக்கங்கள் பற்றிய உரையாடலைத் தூண்ட உதவும், மேலும் உரையாடலை சரியான முறையில் வழிநடத்தத் தேவையான ஆதாரங்களையும் பெற்றோர்களுக்கு வழங்கும்.

புதிய நண்பர் இணைப்புகள் பற்றிய விவரங்கள்
குடும்ப மையம் ஏற்கனவே Snapchat இல் தங்கள் பதின்ம வயது பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்பதை பெற்றோர்களுக்கு காட்டுகிறது, இது தற்போதுள்ள நண்பர்கள் மற்றும் கடந்த வாரத்தில் சேர்க்கப்பட்ட புதிய நண்பர்களின் முழுமையான பட்டியலைக் காட்டும்.
இப்போது, ஒரு பதின்ம வயது நபர் Snapchat இல் ஒரு புதிய நண்பரைச் சேர்க்கும்போது, பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயது பிள்ளை அந்த நபரை எவ்வாறு அறிந்திருக்கக்கூடும் என்பதைப் பார்க்கலாம் - அவர்களுக்கு பரஸ்பர நண்பர்கள் இருக்கிறார்களா, அவர்களின் தொடர்பு புத்தகத்தில் சேமிக்கப்பட்டுள்ளார்களா, அவர்கள் எந்த சமூகங்களில் உள்ளவர் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
இந்த நம்பிக்கை அறிகுறிகள் பெற்றோர்கள் புதிய இணைப்புகளை எளிதாகப் புரிந்துகொள்வதற்கும், தங்கள் பதின்ம வயது பிள்ளை நிஜ வாழ்க்கையில் தனக்குத் தெரிந்த ஒருவருடன் அரட்டையடிக்கிறார் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்களுக்கு தெரியாத ஒரு புதிய நண்பரைப் பார்த்தால், ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடங்குவதற்குத் தேவையான தகவல்கள் அவர்களிடம் உள்ளன.

புதிய பாதுகாப்பு மற்றும் கல்வி ஆதாரங்கள்
எங்கள் குடும்ப மையக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்காக, எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எவ்வாறு தொடங்குவது என்பதை விளக்கும் ஒரு புதிய காணொளியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
Snapchat இன் இணையப் பாதுகாப்புத் திட்டமான தி கீஸ்: டிஜிட்டல் பாதுகாப்புக்கான வழிகாட்டியை நேரடியாக குடும்ப மையத்தில் சேர்த்துள்ளோம், இதன் மூலம் கண்டுபிடிப்பதற்கும் அணுகுவதற்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் அதை நாங்கள் நேரடியாக இணைத்துள்ளோம். தி கீஸ் என்பது இணையவழி அபாயங்கள் குறித்தும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பதின்ம வயதினர் மற்றும் குடும்பங்களுக்கு கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர்புகொள்ளத்தக்க பாடநெறி ஆகும். இது டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து பதின்ம வயதினர் மற்றும் பராமரிப்பாளர்கள் இடையே தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு கற்றல் அனுபவமாக இருக்கும்.
குடும்ப மையம் பதின்ம வயதினர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய பார்வையை வழங்குவதன் மூலமும், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட உரையாடல்களின் உள்ளடக்கத்தைக் காட்டாமல் முக்கிய அமைப்புகளை சரிசெய்ய அனுமதிப்பதன் மூலமும் நிஜ உலக உறவுகளின் இயக்கவியலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்ப மையம் மூலம், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் கூடுதலாக, பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயது பிள்ளைகளின் நண்பர்கள் பட்டியலையும் அவர்கள் சமீபத்தில் யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்பதையும் பார்க்கலாம்; உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைக்கலாம்; எங்கள் My AI சாட்பாட் மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள AI மூலம் இயங்கும் தேடுபொறியான பெர்ப்ளக்சிட்டி ஆகியவற்றின் அணுகலை தடை செய்யலாம்; ஒரு குடும்பமாக தங்கள் இருக்கும் இடத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்; கொள்ளலாம்; மேலும், தங்கள் பதின்ம வயது நபர் சார்பாக சாத்தியமான கவலைதரும் கணக்குகள் குறித்து புகாரளிக்கலாம்.
குடும்ப மையம் மற்றும் எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி மேலும் அறிய, parents.snapchat.com ஐப் பார்வையிடவும்
தொடர்பு கொள்ளுங்கள்
பத்திரிகை கோரிக்கைகளுக்கு, இமெயில் செய்யவும் press@snap.com.
மற்ற அனைத்து விசாரணைகளுக்கும், எங்கள் ஆதரவு தளத்தைப் பார்வையிடவும்.