Design a Custom Geofilter from Your Phone
Each day, Snapchatters submit tens of thousands of Geofilter designs for their engagements and weddings, parties, vacations, graduations, and so much more.
Starting today, we’re making it easier to design a custom Snapchat filter! Snapchatters can now create filters right in the Snapchat app, and customize them with many of the same Creative Tools available to decorate Snaps!

ஒவ்வொரு நாளும் Sanchat பயனர்கள் தங்கள் திருமண நிச்சயதார்த்தங்கள் மற்றும் திருமணங்கள், விருந்துகள், விடுமுறைகள், பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் பலவற்றுக்கான ஆயிரக்கணக்கான ஜியோஃபில்டர் வடிவமைப்புகளை சமர்ப்பிக்கிறார்கள்.
இன்று முதல், சொந்த Snapchat வடிகட்டியை வடிவமைப்பதை நாங்கள் எளிதாக்குகிறோம்! Snapchat பயனர்கள் இப்போது Snapchat செயலியில் வடிகட்டியை உருவாக்கலாம், மேலும் Snap -களை அலங்கரிக்கக் கிடைக்கும் பல ஆக்கப்பூர்வக் கருவிகளைக் கொண்டு அவற்றைத் தனிப்பயனாக்கலாம்!
தொடங்குவதற்கு, எங்களது முற்றிலும் புதிய மொபைல் கிரியேட்டிவ் ஸ்டுடியோவைப் பார்க்க, அமைப்புகளில் உள்ள “ஆன்-டிமாண்ட் Geofilters-ஐ” தட்டவும். அங்கிருந்து, உங்கள் வடிகட்டிக்கு ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து உரை, Bitmoji -கள் மற்றும் ஸ்டிக்கர்கள் மூலம் தனிப்பட்ட நேர்த்தியைச் சேர்க்கலாம்.
உங்கள் தலைசிறந்த படைப்பு முடிவடைந்ததும், உங்கள் வடிகட்டி எங்கு, எப்போது தோன்ற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள். உங்கள் ஜியோஃபில்டரால் ஒரு நிகழ்ச்சி அல்லது முழுத் தொகுதியையும் ஒரு மணி நேரம் அல்லது தொண்ணூறு நாட்கள் வரை உள்ளடக்க முடியும். விலை $5.99 -இல் இருந்து ஆரம்பிக்கிறது. உங்கள் ஜியோஃபில்டர் அங்கீகரிக்கப்பட்டதும், கட்டணம் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்த Snapchat -இல் இருந்து நீங்கள் தொடர்புகொள்ளப் படுவீர்கள்.
மேலும் அறிய எங்கள் ஜியோஃபில்டர்கள் ஆதரவு மையத்தைப் பாருங்கள்!