பாரிசை சார்ந்த Snapchat AR ஸ்டுடியோ வெள்ளிக்கிழமை, மே 12 அன்று ராண்டம் ஆக்சஸ் மெமரீஸ் 10வது ஆண்டுவிழா பதிப்பின் சிறப்பு வெளியீட்டைக் கொண்டாட Daft Punk--இன் கிரியேட்டிவ் குழுவுடன் கைகோர்க்கிறது. AR ஸ்டுடியோ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு முன்னெப்போதும் பார்த்திராத இணைப்பு நிஜமாக்கம் அனுபவங்கள் தொடரான “Daft Punk: நினைவுகள் திறக்கப்பட்டன,” என்பதற்கு உயிர்க்கொடுக்கும்.
“Daft Punkநினைவுகள் திறக்கப்பட்டன"
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டுவிழா பதிப்பைக் கொண்டாட AR ஸ்டுடியோ மூன்று AR அனுபவங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் Snapchat இல் பிரத்தியேகமாக கிடைக்கும் மூழ்கடிக்கும் இசை அனுபவங்களை ரசிகர்கள் மற்றும் Snapchat பயனர்களுக்கு வழங்கும்.
AR அனுபவம் #1 - 10 ஆண்டுகளாக பார்வைகளில் இருந்து மறைக்கப்பட்ட ஒரு தடம்?
புதன்கிழமை, மே 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு CET, ஆண்டுவிழா பதிப்பு வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரங்களுக்கு முன்பு, ஆல்பத்தின் 2013 ஜப்பானிய பதிப்பில் முதலில் இடம்பெற்ற "ஹொரைசன்" என்ற பாடல், Snapchat இன் இணைப்பு நிஜமாக்கம் லென்ஸ்கள் மூலம் உலகின் பிற பகுதிகளுக்கு வெளியிடப்படும். ஒரு புதிய கிரிஸ்டல் ஹெல்மெட் AR லென்ஸ்களை வெளிப்படுத்தவும் வெள்ளி மற்றும் தங்க ஹெல்மெட்டுக்குள் மறைந்திருக்கும் "Horizon"-ஐக் கேட்பதற்கும் அசல் ரேண்டம் ஆக்சஸ் மெமரீசை ஸ்கேன் செய்ய ரசிகர்கள் Snapchat கேமராவைப் பயன்படுத்தலாம். பாட்டைக் கேட்கும் போது கிரிஸ்டல் ஹெல்மெட்டை Snapchat பயனர்கள் அணிவதை கேமராவை ஃபிளிப் செய்வது அனுமதிக்கும்.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Snapchat பயனர்கள் மற்றும் ரசிகர்கள் மே 10, 2023 அன்று இந்த அனுபவத்தைத் தூண்டலாம்.
Snapchat கேமராவைத் திறக்கவும்
உங்கள் ஸ்மார்ட்ஃபோனைக் காட்டி அசல் ரேண்டம் ஆக்சஸ் மெமரீஸ் ஆல்பம் ஆர்ட்வோர்க்கின் (வினைல் CD அல்லது ஸ்ட்ரீமிங் தளம்) மீதுள்ள வெள்ளி மற்றும் தங்க ஹெல்மெட்டை ஸ்கேன் செய்யவும்
புதிய கிரிஸ்டல் ஹெல்மெட் முழு அளவிலும் ஆல்பத்தின் மேல் AR-இலும் தோன்றும், மேலும் "Horizon" டிராக் பிளே ஆகத் தொடங்கும்.
ஹெல்மெட்டை அணிய Snapchat கேமராவை உங்கள் முகத்தை நோக்கித் திருப்புங்கள்
ஒரு ஸ்னாப் எடுத்து உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் பகிர உங்கள் கதை அல்லது ஸ்பாட்லைட்டில் இடுகையிடுங்கள்.
AR அனுபவம் #2: உலகம் முழுவதும் 10 நகரங்களில் புதையல் வேட்டை
வியாழக்கிழமை, மே 11 அன்று உலகம் முழுவதும் 10 பிரபலமான இடங்களில் ஒரு புதையல் வேட்டை தொடங்கும். Snap AR ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்ட இந்த 10 பிரத்யேக புதிய AR அனுபவங்களை உலகம் முழுவதிலும் எங்கு சென்று கண்டுபிட்டுக்க வேண்டும் என்பதை பற்றிய உதவிக் குறிப்புக்களை ரசிகர்களுக்கு வழங்க duo-இன் சமூக ஊடக சேனல்களில் GPS கோஆர்டிநேட்டுகள் வழங்கப்படும்.
பின்வரும் 10 நகரங்கள் இந்த தனித்துவமான அனுபவத்தை ஹோஸ்ட் செய்யும்: பாரிஸ் (பிரான்ஸ்), நியூயார்க் (அமெரிக்கா), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), லண்டன் (இங்கிலாந்து), பெர்லின் (ஜெர்மனி), மெக்ஸிகோ சிட்டி (மெக்ஸிகோ), டோக்கியோ (ஜப்பான்), சிட்னி (ஆஸ்திரேலியா), சா பவுலோ (பிரேசில்) மற்றும் பியூனஸ் ஏர்ஸ் (அர்ஜென்டீனா).
இது எவ்வாறு வேலை செய்கிறது?
கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Snapchat பயனர்கள் மற்றும் ரசிகர்கள் மே 11, 2023 அன்று இந்த அனுபவத்தைத் தூண்டலாம்.
பேண்டின் சமூக ஊடக சேனல்களைப் பின்தொடர்க
உங்களுக்கு அருகில் உள்ள GPS கோஆர்டிநேட்டுகள் மூலம் அறிவிக்கப்பட்ட இடத்தில் மே 11 உள்ளூர் நேரம் காலை மணிக்குச் சந்திக்கவும்
Snapchat கேமராவைத் திறந்து Snapchat geolocation செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்.
உங்கள் லென்ஸ் கரோசல்-இல் தோன்றும் "Daft Punk" லென்ஸை திறக்கவும்!
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அனுபவத்துடன் ஈடுபட்டு உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு Snapchat மெசேஜிங் மூலம் பகிருங்கள் மற்றும்/அல்லது உங்கள் கதை அல்லது ஸ்பாட்லைட்டில் இடுகையிடுங்கள்
AR அனுபவம் #3 - Billboards Augmented: புதிய இணைப்பு நிஜமாக்கம் ஹெல்மெட் வெளிப்படுத்தப்படுகிறது
உலகம் முழுவதும் உள்ள 6 நாடுகளில் 2023, மே 11-28 வரை மக்கள் duo-ந புதிய 10வது ஆண்டுவிழா கிரிஸ்டல் ஹெல்மெட்டை ஒரு விரிவான பில்போர்டு பிரச்சாரத்தின் மூலம் கண்டறிய முடியும். பில்போர்டில் உள்ள QRகுறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், ரசிகர்கள் மற்றும் Snapchat பயனர்கள் உட்பொதிக்கப்பட்ட "Horizon" டிராக் மூலம் புதிய AR லென்ஸை அணுக முடியும்.
பாரிஸ், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்ஸிகோ சிட்டி, சிட்னி, லண்டன், லிவர்பூல் மற்றும் பெர்லின் ஆகிய இடங்களில் புதிய ஹெல்மெட்களை அனுபவிக்கும் வாய்ப்பு 6 நாடுகளுக்கு கிடைக்கும்.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
விளம்பரப்படுத்தப்பட்ட இடங்களுக்குச் செல்க
உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவைத் திறக்கவும்
குறியீட்டின் மீதுள்ள QR கோடை ஸ்கேன் செய்க
உங்கள் Snapchat கேமராவிற்கு திருப்பி விடப்படுவீர்கள்
புதிய கிரிஸ்டல் ஹெல்மெட் மிகப் பெரிய அளவிலும் ஆல்பத்தின் மீது இணைப்பு நிஜமாக்கத்திலும் தோன்றும், மேலும் "Horizon" ட்ராக் பிளே ஆகத் தொடங்கும்.
ஹெல்மெட்டை முயற்சிக்க Snapchat கேமராவை உங்கள் முகத்தை நோக்கித் திருப்புங்கள்
உங்கள் நண்பர்களுக்கு Snapchat மெசேஜிங் மூலம் பகிருங்கள் மற்றும்/அல்லது உங்கள் கதை அல்ல்து ஸ்பாட்லைட்டில் இடுகையிடுங்கள்