11 பிப்ரவரி, 2020
11 பிப்ரவரி, 2020

இதோ உங்களுக்காக அறிமுகப்படுத்துகிறோம்

வரவிருக்கும் மாதங்களில் வெளியிடப்படும் இதோ உங்களுக்காக, Snapchat பயனர்கள் கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம், துக்கம், தற்கொலை எண்ணங்கள் மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பான சில தலைப்புகளைத் தேடும்போது உள்ளூர் நிபுணர்களிடமிருந்து பாதுகாப்பு ஆதாரங்களைக் காண்பிக்கும்.

நமது உண்மை நண்பர்களுடன் புகைப்படங்கள், வீடியோக்களில் பேசுவது உரைச்செய்தியை விட தனிப்பட்டதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் Snapchat நிறுவப்பட்டது. அதன் பின் நாங்கள் எங்கள் தளத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்தாலும், நெருங்கிய நண்பர்கள் தங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாக இருக்கவும் உதவும் எங்கள் மைய இலக்கிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை - அவர்கள் அதனைப் பாதுகாப்பாகச் செய்வதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

தனியுரிமை, பாதுகாப்பு, எங்கள் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்துவது ஆகியன எங்கள் விழுமியங்களிலும் தயாரிப்புத் தத்துவங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளன. குறுகிய காலத்தன்மையில் தொடங்கி மற்றவர்களால் மதிப்பிடப்படும் அழுத்தமின்றி மக்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துவது வரையில் - Snapchat தனியுரிமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வடிவமைப்பிலேயே தனியுரிமையும் பாதுகாப்பும் என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தி நாங்கள் புதிய தயாரிப்புகளையும் அம்சங்களையும் உருவாக்குகிறோம், Snapchat பயனர்களின் தரவைக் கவனத்துடன் இரகசியமாகக் கையாளுகிறோம், பொய்ச்செய்தியிலிருந்தும் தவறான தகவல்களிலிருந்தும் எங்கள் தளத்தைப் பாதுகாப்பதில் முன்முனைப்புடன் செயல்படுகிறோம்.

இவையனைத்தும் எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்வில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த உதவும் எங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன. இன்று பாதுகாப்பான இணைய தினத்தை முன்னிட்டு இப்பொறுப்பினை நிலைநாட்ட உதவும் வளங்கள் பலவற்றை நாங்கள் அறிவிக்கிறோம். அதில் ஒன்று தான் புதிய அம்சமான ஹியர் ஃபார் யூ, இது மனநல அல்லது உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ளும், அல்லது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் நண்பர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் மேலும் அறிய ஆர்வமுள்ள Snapchat பயனர்களுக்கு முனைப்பான செயலியில் ஆதரவை வழங்குகிறது.

வரவிருக்கும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் ஹியர் ஃபார் யூ, Snapchat பயனர்கள் கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம், துக்கம், தற்கொலை எண்ணங்கள், பகடிவதை போன்ற சில குறிப்பிட்ட தலைப்புகளைத் தேடும்போது உள்ளூர் நிபுணர்களின் பாதுகாப்பு வளங்களைக் காட்டுகிறது.

Snapchat பயனர்கள் இன்று முதல் தனியுரிமை, பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஆக்கப்பூர்வக் கருவிகளையும் லென்ஸஸையும் பயன்படுத்த முடியும், இதில் புதிய வடிகட்டிகளும் எங்களின் முதலாவது Snappable வினாடி வினாவும் அடங்கும்.

இந்தப் புதிய வடிகட்டிகள், வினாடி வினாவைப் பார்க்கவும் பாதுகாப்பான இணையத்தை உருவாக்குவதில் எங்களுடன் இணையவும் அனைத்து Snapchat பயனர்களையும் ஊக்குவிக்கிறோம்!

செய்திகளுக்குத் திரும்பு