ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நண்பர்க்ளுடன் நேரம் செலவுசெய்யவும், உலகெங்கிலும் உள்ள அற்புதமான கதைகளைப் பார்க்கவும் Snap வரைபடத்தைப் பயன்படுத்துகின்றனர். உங்கள் Snap வரைபடத்தில் நடப்பவற்றிற்கான உங்கள் சுற்றுலா வழிகாட்டியான — எக்ஸ்ப்ளோரை இன்று அறிமுகப்படுத்துகிறோம்! தொடங்குவதற்கு ‘புதிய புதுப்பிப்புகளைத்’ தட்டுங்கள்.
உங்கள் நண்பர்கள் சாலைப் பயணம் செல்லும்போது, புதிய இடத்திற்குப் பறக்கும்போது — சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது அல்லது பெரிய விழாக்களில் கலந்துகொள்வது போன்ற மேலும் பலவற்றின் போது எக்ஸ்ப்ளோர் புதுப்பிப்புகள் தானாகத் தோன்றுகின்றன. ஒரே தட்டில் புதிய உரையாடலைத் தொடங்கலாம். பரபரப்பான செய்திகள், நிகழ்ச்சிகள், போக்குகள் போன்ற நீங்கள் பார்க்க விரும்பும் பிற தருணங்களின் புதுப்பிப்புகளையும் பெறுவீர்கள்.
Snap வரைபடத்தில் உங்களுடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிரும் நண்பர்களின் புதுப்பிப்புகள் மட்டுமே எக்ஸ்ப்ளோரில் உள்ளது. Snap வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல் விருப்பத் தேர்வாகும் — நீங்கள் இதற்கு முன்பு Snap வரைபடத்தைப் பார்வையிடவில்லை அல்லது இன்று அரவமற்ற முறையில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் இருப்பிடத்தை உங்கள் நண்பர்களால் பார்க்க முடியாது.
அடுத்த சில வாரங்களில் உலகளவில் Snapchat பயனர்களுக்கு எக்ஸ்ப்ளோர் வெளியிடப்படும்.
ஆராய்ந்து மகிழ்க!