கலாச்சாரம், வயது, தொழினுட்பம் ஆகியன நட்பைச் சுற்றியுள்ள விருப்பங்களையும் மனப்பான்மையையும் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராய்வதற்காக, ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவிலுள்ள 10,000 நபர்களிடம் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வை இன்று வெளியிடுகிறோம். தரவைச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கும் அறிக்கைக்கு உலகெங்கிலுமுள்ள நட்பிற்கான பத்து வல்லுநர்கள் பங்களித்தனர்.
"Snapchat ஆரம்பத்தில் இருந்தே உங்கள் உண்மையான நண்பர்களுடனான சுய வெளிப்பாடு மற்றும் ஆழமான உறவுகளை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நட்பு மற்றும் கலாச்சாரங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுற்றியுள்ள சிக்கல்களில் எங்கள் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது" என்று Snap Inc நுகர்வோர் சிந்தனைகளின் தலைவர் ஆமி மௌசவி கூறினார். . "உலகெங்கிலும் நட்பு மிகவும் வேறுபட்டுத் தெரிந்தாலும், இது எங்கள் மகிழ்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் அதை Snapchat மூலம் கொண்டாடவும் உயர்த்தவும் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்."
கருத்தாய்வு செய்யப்பட்ட அனைத்து சந்தைகளிலும், மக்களின் சராசரி சமூக வட்டத்தில் 4.3 சிறந்த நண்பர்கள், 7.2 நல்ல நண்பர்கள் மற்றும் 20.4 அறிமுகமானவர்கள் உள்ளனர். உலகளவில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உடனிருக்கும் சிறந்த நண்பரை 21 வயதில் சந்திக்கிறார்கள். பதிலளித்தவர்கள் “நேர்மை” மற்றும் “நம்பகத்தன்மை” ஒரு சிறந்த நண்பரின் மிக முக்கியமான குணங்கள் என்றும் “பயன்படுதிக்கொள்ள ஒரு பெரிய சமூக நெட்வொர்க் இருப்பது” நட்பில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறுப்பிட்டனர்.
நட்பு அறிக்கை நட்பின் தன்மை குறித்து புதிய பார்வையை வழ்ங்குகிறது, அதில் உட்பட்டவை:
நட்பின் வெவ்வேறு கலாச்சாரங்களின் விளக்கம் நட்பு வட்டங்களையும் விழுமியங்களையும் எவ்வாறு பாதிக்கிறது.
நட்பு மகிழ்ச்சியுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் நாம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களின் நுணுக்கங்கள் மற்றும் நண்பர்களுடன் பேசும்போது நாம் எப்படி உணருகிறோம் என்பது நமது வட்டத்தின் அளவு, பாலினம், தலைமுறை மற்றும் பலவற்றின் அடிப்படையில் பெருமளவு மாறுபடும்.
நாம் எந்தத் தலைமுறையில் பிறந்தோம் என்பது நட்பைப் பற்றிய நமது அணுகுமுறைகளில் பெரிதும் தாக்கத்தை உண்டாக்குகிறது. மேலும் Gen Z அவர்களின் அணுகுமுறையை ஒரு சிறிய குழுவின் நெருக்கத்திற்கு ஆதரவாக பரவலான நெட்வொர்க்குகளுக்கான மில்லினியலில் பிறந்தவர்களின் விருப்பத்திலிருந்து தள்ளி அமைக்கின்றனர்.
“மற்ற உறவுகளிலிருந்து நட்பை வேறுபடுத்துகின்ற பெரிய விஷயம், நட்பு தன்னிச்சையானது என்பது தான்” என்று சிகிச்சையாளரும் நட்பு ஆராய்ச்சியாளருமான மிரியம் கிர்மேயர் கூறினார். “நம் துணை மற்றும் குழந்தைகளுடனான உறவுகளைப் போலன்றி,நம் நண்பர்களிடம் அடுத்தவர் வாழ்க்கையில் நாம் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. நாம் தொடர்ந்து நம் நட்பிற்கு நேரம் ஒதுக்கவேண்டும் - ஈடுபாட்டுடன் இருக்கவும், நட்பை வெளிப்படுத்தவும். இது ஒரு தொடர்ச்சியான மறைமுகமான தேர்வாகும், இந்தத் தேர்வு நம் மகிழ்ச்சி மற்றும் நம் சுயமரியாதையின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”
இந்த உலகளாவிய கருத்தாய்வின் சிந்தனைகளின் மாதிரியில் உள்ளடக்கப்பட்டவை:
கலாச்சார தாக்கம்
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை விட மூன்று மடங்கு சிறந்த நண்பர்களைக் கொண்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சிறந்த நண்பர்களின் சராசரி எண்ணிக்கை 6.6 இல் சவுதி அரேபியாவில் மிக அதிகமாகவும், யு.கே வில் மிகக் குறைவாக 2.6 இலும் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ளவர்கள் சிறந்த நண்பர்களில் இரண்டாவது மிகக் குறைந்த சராசரி எண்ணிக்கையாக 3.1 ஐக் கொண்டுள்ளனர், மேலும் ஒரு சிறந்த நண்பரை மட்டுமே கொண்டிருப்பதாக தெரிவிக்கும் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக உள்ளனர்.
"அறிவார்ந்த மற்றும் பண்பட்ட" நண்பர்களைக் கொண்டிருப்பது இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ளவர்களிடையில் அதிக மதிப்பு கொண்டுள்ளது, அதேசமயம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு "எடை போடாதநண்பர்களைக் கொண்டிருப்பது" முக்கியமானது.
ஒரு சிறந்த நண்பரைக் கொண்டிருக்க மிகப் பெரிய சமூக நெட்வொர்க் தேவை என்று கூறுபவர்கள் மற்ற பிராந்தியங்களை விட இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறார்கள், உண்மையில், உலகளவில் சராசரியாக, “ஒரு பெரிய nநெட்வொர்க் வைத்திருப்பது” ஒரு சிறந்த நண்பரிடம் மக்கள் தேடும் மிக முக்கியமான பண்பு.
நட்பு வட்டங்கள் மற்றும் தகவல்தொடர்பு
உலகளவில் 88% பேருக்கு தன் நண்பர்களுடன் ஆன்லைனில் பேசுவது மகிழ்ச்சி தருகிறது. எங்களுக்கு பதிலளித்தவர்கள் ஆன்லைன் தகவல்தொடர்பு பற்றி aஅவர்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்பதை விளக்க பல விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது, மேலும் நன்மைகள் குறித்து உடன்பாடு உள்ளது. எல்லா பிராந்தியங்களிலும், 32% மக்கள் தங்களுக்கு விருப்பமான விளக்கமாக “தங்கள் நண்பர்களுடன் வேகமாகவும் எளிதாகவும் பேசும்” திறனைத் தேர்ந்தெடுத்தனர்.
நண்பர்களுடனோ அல்லது ஆன்லைனிலோ தொடர்புகொள்வது, ஆட்கொள்ளத்தக்க நேர்மறையான உணர்ச்சிகளை உணர வைக்கிறது: “மகிழ்ச்சியாக,” “நேசத்துடன்” மற்றும் “ஆதரவாக” ஆகியவை உலகளவில் அதிகம் தெரிவிக்கப்பட்ட மூன்று உணர்ச்சிகளாக்கும். எனினும் ஆன்லைனில் தொடர்புகொள்ளும் ஆண்களை விட பெங்களுக்கே அந்த உணர்வுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படும் சாத்தியம் உள்ளது
நண்பர்களின் சராசரி எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அதிகமான பொது தளங்களைப் பயன்படுத்துபவர்கள் பெரிய அளவிலான தொடர்புகளைக் கொண்டுள்ளனர், ஆனால் தனிப்பட்ட தகவல்தொடர்பு தளங்களை விரும்புபவர்களைக் காட்டிலும் குறைவான உண்மையான நண்பர்களைக் கொண்டுள்ளனர். Snapchat பயனர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான “சிறந்த நண்பர்கள்” மற்றும் “நெருங்கிய நண்பர்கள்” மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான “அறிமுகமானவர்கள்” உள்ளனர், அதே நேரத்தில் Facebook பயனர்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான “சிறந்த நண்பர்கள்”; மற்றும் Instagram பயனர்கள் அதிக எண்ணிக்கையிலான “அறிமுகமானவர்கள்” உள்ளனர்.
தலைமுறை ரீதியான செல்வாக்கு
உலகளவில், Gen Z மற்றும் மில்லினியல்கள் ஆன்லைனில் நண்பர்களுடன் பேசுவதற்கான vவிருப்பத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் உறுதியுடன் உள்ளனர் 13% ஜெனரல் எக்ஸ் மற்றும் 26% பேபி பூமர்களுடன் ஒப்பிடும்போது.முறையே 7% மற்றும் 6% மட்டுமே அவர்கள் அது பிடிப்பதில்லை என்று கூறினர், இளம் தலைமுறையினர் விஷுவல் கம்யூனிகேஷனின் மதிப்பையும் உணர்ந்துள்ளனர். 61% பேர் தங்களால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதவற்றை வீடியோ மற்றும் புகைப்படங்கள்வெளிப்படுத்த உதவுகின்றன என்று நம்புகிறார்கள்.
ஆராய்ச்சி முழுவதும், உலகளவில் மில்லினியல்கள் தலைமுறையினரின் அதிகம்"மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்பவர்களாக அறியப்பட்டார்கள்". கருத்தாய்வு செய்யப்பட்ட அனைத்து வகைகளிலும் “நான் அதைப் பகிரமாட்டேன்” என்று மில்லினியல்கள் தான் மிகக் குறைவாகக் கூறும் சாத்தியம் உள்ளது.. மில்லினியல்கள் வேறு எந்த தலைமுறையினரை விடவும் Instagram அல்லது Facebook போன்ற தளங்கள் வழியாக பொதுவில் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், விரிவான சமூக நெட்வொர்க்கை கொண்ட ஒரு சிறந்த நண்பரை அவர்கள் விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். மில்லினியல்கள் வேறு எந்த தலைமுறையையும் விட “முடிந்தவரை அதிகமான நண்பர்களை” விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Gen Z மில்லினியல்களின் தடங்களை பின்பற்றுவதாகத் தெரியவில்லை, மாறாக அவர்கள் தங்கள் நட்பில் நெருக்கத்தை ஏற்படுத்த விழைகிறார்கள், மேலும் வெளிப்படையான மற்றும் நேர்மையான உறவுகளை வேறு எந்த தலைமுறையினரையும் விட அதிகமாக விரும்புகிறார்கள்.
பூமர்கள் தங்கள் சிறந்த நண்பர்களுடன் விவாதிக்கும் தலைப்புகளைப் பொறுத்தவரை மிகவும் பழமைவாதிகள், மில்லினியல்கள் இதிலும் மிகவும் வேறுபடுகிறார்கள். பூமர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலானவர்கள் தங்கள் சிறந்த நண்பருடன் தங்கள் காதல் வாழ்க்கை (45%), மனநலம் (40%) அல்லது பானப்பிரச்சினைகள் (39%) பற்றி பேச மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். வெறும் 16%, 21%, மற்றும் 23% மில்லினியல்கல்கள் மட்டுமே தங்கள் நெருங்கிய நண்பர்களிடம் முறையே இதே தலைப்புகளைப் பற்றி பேசமாட்டார்கள்.
Snap உலகளாவிய நட்பு அறிக்கை முழுவதையும் படிக்க இங்கே கிளிக் செய்க.
அறிக்கையைப் பற்றி
புரோட்டீன் ஏஜென்சியுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த நட்பு அறிக்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யு.கே மற்றும் அமெரிக்காவில் 13 முதல் 75 வயது வரையிலான 10,000 நாடு அளவிலான பிரதிநிதிகளிடம் வாக்களிப்பு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் 2004 பதிலளிப்பவர்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தக் கருத்தாய்வில் பங்கேற்றார்கள். பதிலளித்தவர்கள் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர்கள் ஆவார்கள்., மேலும் அவர்கள் Snapchat ஐப் பயன்படுத்தும் காரணத்தால் தேர்வு செய்யப்படவில்லை; அவர்கள் Gen Z, மில்லினியல்கள், Gen X மற்றும் பேபி பூமர்கள் ஆகிய நான்கு முக்கிய தலைமுறை குழுக்களாக பிரிக்கப்பட்டனர், மேலும் நட்பு குறித்த அவர்களின் எண்ணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டனர். நட்பு அறிக்கை உலகம் முழுவதும் மற்றும் பல தலைமுறையினர் நடுவில் நண்பர்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை வழங்குகிறது, அதே நேரத்தில் நம் வாழ்க்கையின் மீது தோநுட்பத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.