New Conversation Settings Offering More Flexibility and Control
தொடக்கதிலிருந்தே, மக்கள் தங்களது மிகச் சரியான உள்ளடக்கத்தை மட்டுமே பதிவிட அழுத்தமாக உணரும் பாரம்பரிய சமூக ஊடகங்களுக்கு மாற்று ஒன்றை வழங்கவே Snapchat வடிவமைக்கப்பட்டது.
அதனால்தான் Snapchat பயனர்கள் பயன்பாட்டை திறக்கும்போதே, அவர்களது கண்ணோட்டத்தைப் படம்பிடிக்கத் தயாராக ஒரு கேமராவால் வரவேற்கப்படுகிந்த்ர்னர் மற்றும் நாம் நிஜ வாழ்வில் எவ்வாறு அந்தக் கணத்தில் தோன்றுவதை நண்பர்களுடன் உரையாடுகிறோம் அது போல் செய்திகள் இயல்பாகவே நீக்கப்படுகின்றன.
எங்களின் முதல் பயன்பாடானது (எப்பொழுதும்) செய்தியிடல், இன்று, 25க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 13-24 வயதுடைய நான்கு பேரில் மூன்று பேர் ஒவ்வொரு நாளும் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வதற்கான இடமாக இருக்கிறோம்.
இன்று வரை, Snapchat பயனர்கள் தங்கள் Snapகளைத் தக்க வைக்கும் அல்லது அவை பார்க்கப்பட்டவுடன் உடனடியாகவோ அல்லது 24 மணி நேரம் கழித்தோ நீக்கும் விருப்பதக்தைக் கொண்டுள்ளனர் - நிஜ வாழ்க்கை உரையாடல்களைப் போலவே. Snapchat பயனர்கள் தக்கவைக்க விரும்பும் செய்திகளை தனிப்பட்ட முறையில் சேமிக்க வேண்டும்.
நிலையற்றவை என்பது எப்போதும் எங்கள் வடிவமைப்பில் முக்கியமானதாகும் மற்றும் இந்த இயல்புநிலை அமைப்புகள் எங்கள் சமூகத்தின் அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து சட்ட அமலாக்கத்தின் சரியான கோரிக்கைகளை ஆதரிக்கும் போது தரவைத் தக்கவைத்துக்கொள்வதைத் தடுக்காது.
நாங்கள் Snapchat பயனர்கள் சொல்வதைத் தொடர்ந்து கேட்டு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம், மேலும் அவர்களின் தேவைக்கு ஏற்ப சிந்தைனையுடன் புதுமையாகக் கண்டுபிடிக்கிறோம். எங்கள் சமூகத்தின் பின்னோட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், நமக்கு முக்கியமானவர்களுடனான உரையாட்களில் அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குவதாக நாங்கள் நம்பும் புதிய அமைப்பை அரட்டையில் வழங்குகிறோம்.
பரிசோதனையில் இருக்கும் இந்த புதிய விருப்பம் Snapchat பயனர்கள் iMessage அல்லது SMS-இல் செய்திகள் எவ்வாறு சேமிக்கப் படுகின்றனவோ, தங்கள் உரையாடல்களை அதே போல காலவரையின்றி தக்க வைக்க அனுமதிக்கும். Snapchat பயனர்கள் உரையாடல் அடிப்படையில் இந்த அமைப்பைத் தேர்வுசெய்ய முடியும் - அதாவது, எடுத்துக்காட்டாக, அவர்கள் தங்கள் நெருங்கிய நண்பருடனான தங்கள் உரையாடலை காலவரையின்றித் தக்கவைத்துக்கொள்வதைத் தேர்வுசெய்யலாம், மேலும் மற்றவர்கள் அதை பார்த்த பிறகு நீக்குவதையும் தொடரலாம். உரையாடலில் உள்ள பங்கேற்பாளர்கள் எந்த நேரத்திலும் அமைப்புகளை புதுப்பிக்கலாம் மற்றும் அரட்டையில் உள்ள அறிவிப்புகள் சமீபத்திய தேர்வுகள் நீக்கப்படுவதை உறுதிசெய்யும்.
உரையாடல்கள் இயல்பாகவே நீக்குவதால், இந்த புதிய விருப்பம் எங்கள் சமூயகம் தங்கள் நண்பர்களுடன் அவர்கள் இணைவதை தனிப்பயமாக்கும் அதிக வழிகளை வழங்குகிறது.
உங்கள் அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த அதிகத் தகவல்களுக்கு எங்கள் ஆதரவு பக்கத்தைப் பார்க்கவும் [லிங்க்].
