உலகின் மிகச் சிறந்த ஆக்கப்பூர்வ ஊடகங்களின் உயர் தர உள்ளடக்கங்களை எங்கள் சமூகத்தினர் அனுபவிப்பதற்கான புதிய வழியாகப் பதிப்பாளர் கதைகளை Snapchat இல் அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
கல்வி நிலையச் செய்தித்தாள்களையும் சேர்ப்பதற்காக பதிப்பாளர் கதைகளை இன்று விரிவுபடுத்துகிறோம். தகவல் தெரிவிப்பதிலும் தங்கள் வளாகச் சமூகங்களை மகிழ்விப்பதிலும் கல்வி நிலையச் செய்தித்தாள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, மேலும் நாங்கள் உடன் பணியாற்றும் முன்னணி பத்திரிக்கையாளர்களும் செய்தியாசிரியர்களும் அவர்களின் தொடக்கத்தைப் பெற்ற இடங்களாக பெரும்பாலும் அவை தான் உள்ளன.
டஜன் கணக்கான கல்லூரிகளுடனும் பல்கலைக்கழகங்களுடனும் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம், அதன் தலையங்கக் குழுக்கள் வாராந்திரப் பதிப்பாளர் கதைகளை உருவாக்கி அவற்றை Snapchat இல் பகிரத் தொடங்குவார்கள். வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தின் மூலமாக பணம் ஈட்டவும் தங்கள் செய்தித்தாள்களை வளர்க்கவும் ஒவ்வொரு கல்வி நிலையத்திற்கும் உதவுவதற்காக இந்தக் கதைகள் Snap விளம்பரங்களைக் கொண்டிருக்கும்.
அடுத்த தலைமுறைப் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகாரமளிப்பதற்காக நாடு முழுவதுமுள்ள திறமையான மாணவர்களுடன் கூட்டணியமைப்பதில் நாங்கள் பெருமடைகிறோம், அவர்கள் உருவாக்குபவற்றைக் காணக் காத்திருக்கிறோம்!