நீங்களும் உங்கள் நண்பர்களும் உலகைப் பார்க்கும் விதத்தை Snapchat எப்போதும் கொண்டாடி வருகிறது. Snapகள், கதைகள், எங்கள் கதை மூலம் வெவ்வேறு கண்ணோட்டங்களை அனுபவிப்பது வேடிக்கையானது.
இன்று Discover ஐ அறிமுகப்படுத்துகிறோம்.
Snapchat Discover வெவ்வேறு வெளியீட்டுக் குழுக்களின் கதைகளை ஆராயச் சிறந்த வழியாகும். இது விளக்கிக்கூறுவதை முதன்மையாகக் கொண்ட கதைசொல்லும் வடிவத்தை உருவாக்குவதற்கு உலகளாவிய ஊடகத் தலைவர்களுடனான கூட்டுழைப்பினால் விளைந்தது. இது சமூக ஊடகம் அல்ல.
சமூக ஊடக நிறுவனங்கள் மிகச் சமீபத்தியவை அல்லது மிகப் பிரபலமானவை அடிப்படையில் எதைப் படிக்க வேண்டும் என்று நமக்குக் கூறுகின்றன. நாங்கள் அதை வேறுவகையில் பார்க்கிறோம். நாங்கள் முக்கியமானது எது என்பதைத் தீர்மானிக்க, கிளிக்குகளையோ பகிர்வுகளையோ கணக்கில் எடுப்பதில்லை, தொகுப்பாளர்களையும் கலைஞர்களையுமே கணக்கில் எடுக்கிறோம்.
Discover வேறுபட்டது, ஏனெனில் இது ஆக்குநர்களுக்காக உருவாக்கப்பட்டது. கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வழங்குவதற்காக புதிய நுட்பங்களுக்கு இடமளிக்க வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலும் உள்ளனர். இம்முறை கலைக்குச் சேவையாற்றும் நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்: ஒவ்வொரு பதிப்பும் முழுத் திரைப் புகைப்படங்கள் வீடியோக்கள், அற்புதமான நீண்ட வடிவ லேஅவுட்கள், கவர்ச்சியான விளம்பரங்களைக் கொண்டுள்ளன.
Discover புதியது, பழக்கமானது. ஏனெனில் இதன் மையமாகக் கதைகள் உள்ளன - தொடக்கம், நடுப்பகுதி, இறுதி என இருப்பதால் தொகுப்பாளர்கள் அனைத்தையும் ஒழுங்குற வைக்க முடியும். ஒவ்வொரு பதிப்பும் 24 மணிநேரங்களுக்குப் பின் புதுப்பிக்கப்படுகின்றன - ஏனெனில் இன்றைய செய்தி நாளைய வரலாறு.
Discover வேடிக்கையானது பயன்படுத்த எளிதானது. பதிப்பைத் திறக்கத் தட்டுங்கள், Snapகளை உலாவ இடப்புறம் ஸ்வைப் செய்யுங்கள், அல்லது கூடுதல் Snapக்கு மேலே ஸ்வைப் செய்யுங்கள். ஒவ்வொரு சேனலும் தனித்துவத்தை கொண்டு வருகின்றன – தினசரி ஆச்சரியங்கள்!