இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஒருவரையொருவர் இணைப்பதில் டிஜிட்டல் கருவிகளின் முக்கியத்துவத்துவம் அத்துடன் இந்தக் கருவிகளால் உருவாகக்கூடிய சில இடர்கள் பற்றியும் நாம் உணர்ந்திருக்கிறோம்.
டிஜிட்டல் தளங்களில் இடருக்கான ஓர் மூலமாக இருப்பது -- சில நேரங்களில் தளத்தின் வெளிப்படையான தூண்டுதலால் -- நிஜ வாழ்க்கையில் நமக்குத் தெரியாத நபர்களுடனும் பொய்த்தகவலைப் பரப்புதல், தொந்தரவளித்தல், அல்லது விரும்பத்தகாத சூழல்கள் போன்ற எதிர்மறை அனுபவங்களுக்கு நம்மை ஆட்படுத்துபவர்களுடனும் உருவாகக்கூடிய தொடர்புகளாகும்.
Snapchat இல் அந்த ஆபத்துகளை மனதில் கொண்டே எங்கள் செயலியை உருவாக்கியுள்ளோம். எங்கள் தளத்தின் கட்டமைப்பு உண்மையான நண்பர்களிடையே இணைப்பையும் தகவல் தொடர்பையும் ஊக்குவிக்கும் அதே நேரத்தில் அந்நியர்கள் Snapchat பயனர்களைக் கண்டறிவதையும் நட்பாக்குவதையும் மிகவும் கடினமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக Snapchat இல்:
18 வயதிற்கு உட்பட்ட Snapchat பயனர்களுக்கு உலாவக்கூடிய பொதுத் தகவல் பக்கங்கள் எதுவும் இல்லை;
இயல்பாக, நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நண்பர்களாகச் சேர்த்திருக்காவிட்டால், நீங்கள் ஒருவருடன் நேரடியாக அரட்டை செய்யவோ தொடர்பு கொள்ளவோ முடியாது;
எங்கள் பல அம்சங்கள் இயல்பாக தனிப்பட்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன, இது Snapchat பயனர்கள் அவர்களை அறியாமலேயே இருப்பிடம் போன்ற தகவல்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது;
சில நேரங்களில் குழு உரையாடல்கள் பிற சூழ்நிலைகளில் பயங்கரவாத உள்ளடக்கமாகவோ ஆட்சேர்ப்பதாகவோ மாறும் வகையில் ‘வைரலாவதற்கான’ வாய்ப்பை நாங்கள் வழங்குவதில்லை. குழு உரையாடல்கள் உண்மையான நண்பர் குழுக்களிடையேயான உரையாடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே தான் அவற்றின் அளவை 64 நண்பர்கள் என வரம்பிட்டுள்ளோம். குழுக்களை அரட்டை கீற்றுக்கு வெளியே தேடவோ பரிந்துரைக்கவோ இயலாது, அவை செயலியில் வேறு எங்கும் வெளித்தோன்றுவதும் இல்லை.
பாதுகாப்பான இணைய நாளான இன்று “நட்புச் சோதனை” என்ற புதிய அம்சத்தை அறிவிப்பதன் மூலம் ஒரு படி முன்னே செல்கிறோம், இது இன்னமும் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்கள் தாம் நண்பர் பட்டியலில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்த நண்பர் பட்டியலை மீளாய்வு செய்யுமாறு Snapchat பயனர்களைக் கேட்கிறது. இந்த எளிய கருவிக்குறிப்பு Snapchat பயனர்களுக்கு அவர்களின் தகவல் பக்கத்தில் அறிவிப்பாக வழங்கப்படும். உலகளவில் நட்புச் சோதனையானது Android சாதனங்களுக்கு எதிர்வரும் வாரங்களிலும், iOS சாதனங்களுக்கு எதிர்வரும் மாதங்களிலும் அறிமுகமாகும்.
Snapchat பயனர்கள் எங்கள் செயலி வழியாக இனி தொடர்பு கொள்ள விரும்பாத ஒருவரை நண்பர் பட்டியலில் சேர்த்திருக்கக்கூடும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவதற்கு நட்புச் சோதனை உதவும். விரைவான, தனிப்பட்ட, வசதியான செயல்முறையுடன், அதில் இடம்பெற்றிருக்கத் தேவையில்லாதவர்களை அல்லது தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பவர்களை எளிமையாக நீக்கவும், நண்பர் பட்டியலைச் சுத்தம் செய்யவும் நட்புச் சோதனை Snapchat பயனர்களுக்கு வழிசெய்கிறது.
இந்தப் புதிய அம்சம், எங்கள் மொபைல் முதல் தலைமுறையினரிடம் எதிரொலிக்க உதவும் வழிகளில் Snapchat இல் இணையப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் கல்வியை மேலும் ஒருங்கிணைக்கும் இலக்குடன் கடந்த மாதம் நாங்கள் தொடங்கிய ஒரு விரிவான பரப்புரையின் ஒரு பகுதியாகும். செயலியினுள் கருவிகளுடன் கூடுதலாக, இன்று நாங்கள் அறிவிப்பவை உள்ளிட்ட புதிய கூட்டாண்மைகளுக்கும் வளங்களுக்கும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கிறது.
பாதுகாப்பான இணைய நாளிற்காக செயலியினுள் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் வடிகட்டிகளில் மேலே ஸ்வைப் செய்யக்கூடிய கூடுதல் பாதுகாப்பு வளங்களை வழங்குவதற்காக அமெரிக்காவில் Connect Safely உடனும், இங்கிலாந்தில் ChildNet உடனும் கூட்டிணைந்துள்ளோம். Crisis Text Line உடனான எங்கள் கூட்டணியை விரிவுபடுத்துகிறோம், அவர்கள் Snapchat பயனர்களுக்கு தேவைப்படும் ஆதரவைப் பெறுவதை இன்னும் எளிதாக்குவார்கள், மேலும் அமெரிக்காவிலுள்ள சமூகத்தினருக்கு வழங்குவதைப் போல் இங்கிலாந்தில் Shout இணைந்து உள்ளூர் Snapchat பயனர்களுக்கான அவசர கால உதவியை அறிமுகப்படுத்துவோம்.
LGBTQ இளைஞர்களுக்கான தொடர் மன நல முன்னெடுப்புகளுக்காக The Trevor Project உடன் இணைந்துள்ளோம், இதில் புதிய செயலியினுள் வளங்களும் அடங்கும் மேலும் பதின் பருவத்தினரின் நல்வாழ்விற்கு உதவும் அடிப்படைக் கருவிகள் மற்றும் உத்திகளை வழங்கும் இணையவழி பெற்றோர் பாடநெறிக்காக, Mind Up| A Goldie Hawn Foundation உடன் இணைகிறோம். அண்மையில் இதுபோன்ற பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நாங்கள் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட பெற்றோர் வழிகாட்டியை நிறைவு செய்வதாக இப்பாடநெறி அமையும்.
இந்தக் கருவிகள் Snapchat பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். குழந்தைகளின் உதவி அமைப்புகளான -- பெற்றோர்கள், அன்புக்குரியவர்கள், ஆசிரியர்கள் -- எங்கள் புதிய வளங்களைப் பார்வையிடவும் நண்பர் பட்டியலைப் பார்வையிடுவதன் முக்கியத்துவத்தைக் குறித்து அவர்கள் குழந்தைகளுடன் பேசவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.