அரட்டை உரைசெய்தி போல் இல்லாமல் ஹேங்கிங் அவுட் போல் தோன்றுமாறு நாங்கள் அரட்டையை வடிவமைத்தோம். அதனால் தான் ஒரு நண்பர் அரட்டையைத் திறக்கும்போது அவரின் Bitmoji "நான் இங்கு இருக்கிறேன்!" என்று கூறி பாப்-அப் ஆகிறது. — மேலும் அதனால் தான் உங்கள் அரட்டை உரையாடல்கள் இயல்புநிலையில் எல்லா காலத்திற்கும் சேமிக்கப்படுவதில்லை.
இன்று அரட்டையினை நாங்கள் இன்னும் குதுகலமாக்குகிறோம் இப்போது நீங்கள் ஒரே நேரத்தில் உங்கள் 16 நண்பர்களுடன் வீடியோ அரட்டை செய்யலாம். உங்கள் நண்பர்களை ஒன்றிணைக்கக் குழு உரையாடலில் வீடியோ கேமரா படவுருவைத் தட்டவும்! குழு உரையாடலில் உள்ள நண்பர்கள் அவர்களைச் சேர அழைக்கும் அறிவிப்பைப் பெறுவார்கள்.
உங்களை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது. நீங்கள் லென்ஸஸைப் பயன்படுத்தலாம், உங்கள் குரல் வழியில் மட்டும் இணையலாம், அல்லது மற்றவர்கள் பேசும்போது படிக்கக்கூடிய செய்திகளை மட்டும் வெறுமனே அனுப்பலாம். ஒவ்வொரு உரையாடலும் தனித்துவமானது!
குழு வீடியோ உரையாடல் இந்த வாரம் உலகளவில் Snapchat பயனர்களுக்கு வெளிவரத் தொடங்கும்.
மகிழ்வாக அரட்டை செய்யுங்கள்!