உங்கள் நண்பர்களுடன் விரைவாகவும் வேடிக்கையாகவும் பேச எட்டு ஆண்டுகளுக்கு முன் Snapchat ஐ உருவாக்கியுள்ளோம்.
நீங்கள் பேசும் விடயங்களையும் தாண்டியது நட்பு. நட்பு என்பது நீங்கள் ஒன்றிணைந்து அனுபவிப்பவற்றைப் பற்றியது — எனவே தான் நண்பர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதற்கு முற்றிலும் புதிய அனுபவத்தை உருவாக்க நாங்கள் கடினமாக உழைக்கிறோம்.
Snap விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறோம்: நண்பர்களுக்கான மொபைல் விளையாட்டுகள்!
அரட்டை பட்டியிலிருந்தே Snap விளையாட்டுகளைத் தொடங்கலாம், நீங்களும் உங்கள் நண்பர்களும் உடனடியாக ஒன்றிணைந்து விளையாட வழிசெய்கிறது — நிறுவல் தேவையில்லை. எந்தெந்த நண்பர்களுடன் விளையாடுகிறீர்கள் என்பதைப் பார்க்கலாம், அரட்டை அனுப்பலாம், குரல் அரட்டையில் நேரடியாகவும் பேசலாம். நீங்கள் அருகருகே அமர்ந்து ஒரே திரையைப் பார்த்து விளையாடுவதைப் போல் உணர்வீர்கள்.
Snap விளையாட்டுகள் ஆறு தலைப்புகளில் அறிமுகமாகிறது:
Bitmoji பார்ட்டி: Snap -இன் முதன்மையான, Snap விளையாட்டுகளுக்கான முதல் தரப்பு IP -இல் நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்கள் Bitmoji -களாக 3D வடிவில் இடம்பெறுவீர்கள், இதில் நீங்கள் வேகமான நான்கு சிறு விளையாட்டுகளில் போட்டியிடுவீர்கள்: பூல் பார்ட்டி, கிக் ஆஃப், ஸ்பின் செஷன் மற்றும் ஜாம்பி எஸ்கேப்.
ஆல்ஃபாபியர் ஹஸ்டில்: (ஸ்ப்ரி ஃபாக்ஸ்) - ஆல்ஃபாபியர் ஹஸ்டில் என்பது ஒரு திருப்பத்துடன் கூடிய வேகமான ஒத்துழைப்பு சார்ந்த சொல் விளையாட்டு ஆகும். சொற்களை உச்சரிக்கவும், அழகான கரடிகளைச் சேகரிக்கவும், தங்கள் சொந்தக் கரடி கிராமத்தை உருவாக்கவும் ஆட்டக்காரர்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.
C.A.T.S. (க்ராஷ் அரினா டர்போ ஸ்டார்ஸ்) ட்ரிஃப்ட் ரேஸ்: (செப்டோலாப்) - C.A.T.S. என்பது பல பேர் ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய ஒரு கார் பந்தய விளையாட்டாகும், இதில் 6 ஆட்டக்காரர்கள் வரை அழித்துப் பந்தயத் தடத்தில் சிதறிக்கிடக்கும் பூஸ்டர்களைப் பயன்படுத்திப் பந்தயத்தில் வேகமெடுக்கலாம் அல்லது எதிராளியின் வேகத்தைக் குறைக்கலாம். வழியில், C.A.T.S. உலகத்திலிருந்து புதிய வாகனங்களைச் சேகரியுங்கள்.
ஸ்னேக் ஸ்குவாடு: (கேம் க்ளோஷர்) - ஸ்னேக் ஸ்குவாடு என்பது பல பேர் ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய போர் விளையாட்டாகும். போருக்குச் செல்வதற்கு உங்களுக்குப் பிடித்த அவதாரைத் தேர்வுசெய்யவும், பின்னர் உங்கள் எதிர் போட்டியாளரை வெளியேறுவதற்காகப் பெரியதாக வளர உங்கள் அணியுடன் போர்க்களத்தைச் சுற்றி உங்கள் பாம்பை வழிநடத்தவும்.
டைனி ராயல்: (Zynga) - டைனி ராயல்™ என்பது வேகமான வேடிக்கை நிறைந்த போர் விளையாட்டாகும் - இது Snapchat இயங்குதளத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியப் போர் விளையாட்டு அனுபவமாகும். விரைவான 2-நிமிடச் சுற்றுகளில் கொள்ளையடிப்பதற்கும், ஒரே ஒரு ஆட்டக்காரர் - அல்லது அணி - மட்டும் எஞ்சியிருக்கும் வரை வெற்றிக்கான பாதையில் சுட்டுக்கொண்டே செல்வதற்கும் நண்பர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள் அல்லது தனியாகச் செல்லுங்கள்.
ஜாம்பி ரெஸ்க்யூ ஸ்குவாடு: (பிக்பாக்) - ஜாம்பி அபோகாலிப்ஸின் முன் வரிசையில் நுழைய உங்கள் சக ஜாம்பி ரெஸ்க்யூ ஸ்குவாடு நண்பர்களுடன் இணைந்திடுங்கள். பசியுடன் சுற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்களிடமிருந்து தப்பிப்பிழைத்தவர்களை மீட்டு, உங்களால் முடிந்த அளவு பொருட்களைச் சேகரிக்கவும். ஆனால் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும் ஹெலிகாப்டரை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் விட்டுச் செல்லப்படுவீர்கள்!
விளையாட்டை உருவாக்கும் எங்கள் கூட்டாளிகள் மற்றும் Snap ஆகியவற்றுக்கான பணமீட்டும் வாய்ப்புகளை Snap விளையாட்டுகள் கொண்டிருக்கும். Q3 2018 -இல் தொடங்கப்பட்ட Snap -இன் ஸ்கிப் செய்ய முடியாத, ஆறு விநாடி விளம்பரங்களைக் கொண்ட வீடியோ விளம்பரத்துடன் இந்தத் தளம் தொடங்கப்படும்.
Snap விளையாட்டுகள், வரவிருக்கும் மாதங்களில், Snapchat சமூகத்திற்குச் சிறந்த விளையாட்டு அனுபவங்களைக் கொண்டுவருவதற்காகப் பல்வேறு வகைகள் மற்றும் ஸ்டைல்களில் அதன் வடிவமைப்பாளர் கூட்டாளர்களை மெதுவாக விரிவுபடுத்துகிறது.
கேம் க்ளோஷர் பற்றி
கேம் க்ளோஷர், HTML5 செயலிகளை உருவாக்குவதற்கும் விநியோகிப்பதற்குமான தொழில்நுட்பத்தை உருவாக்கி, அவற்றை அதிக அளவிலான பார்வையாளர்களிடம் கொண்டுவருகிறது, இதில் அதன் வெற்றிகரமான சொந்த மெசஞ்சர் விளையாட்டான எவர்விங்கும் அடங்கும், இது நண்பர்களுடன் விளையாடுவதற்கான ஒரு கவர்ச்சிகரமான கற்பனை துப்பாக்கி சுடும் விளையாட்டாகும். 2011 -இல் இது நிறுவப்பட்டதிலிருந்து, கேம் க்ளோஷர் அதன் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான Michael Carter தலைமையில் செயல்பட்டு வருகிறது. கேம் க்ளோஷர் தொழில்நுட்பத் தளமானது உயர் செயல்திறன் கொண்ட மெசஞ்சர் விளையாட்டுகளை உருவாக்க, விநியோகிக்க, மேம்படுத்த மற்றும் செயல்படுத்தத் தேவையான நிரூபிக்கப்பட்ட கருவிகளை வழங்குகிறது.
பிக்பாக் பற்றி
பிக்பாக் என்பது, மொபைல், டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப்பில் சிறந்த விளையாட்டுகளை வெளியிடும் ஒரு முன்னணி வெளியீட்டாளராகும். அசலான, உரிமம் பெற்ற மற்றும் மூன்றாம் தரப்பால் உருவாக்கப்பட்ட சொத்துகளின் ஒரு போர்ட்ஃபோலியோவுடன், அனைத்து நுகர்வோருக்கும் பிக்-அப்-அண்டு-ப்ளே கேம் ப்ளே, உயர்தரம் வாய்ந்த கலை மற்றும் சிறந்த விளையாட்டு அனுபவங்களை வழங்கும் அற்புதமான ஒலி வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்ட விளையாட்டுகளைப் பிக்பாக் வழங்குகிறது. பிரபலமான ஃப்லிக் கிக்® தொடர், BAFTA விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சூப்பர் மான்ஸ்டர்ஸ் ஏட் மை காண்டோ™, இண்டூ தி டெட்®, ஷாட்டர்® மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல விமர்சன ரீதியாக மற்றும் வணிகரீதியாக வெற்றிபெற்ற விளையாட்டுகளைப் பிக்பாக் வெளியிட்டுள்ளது. சிறிது நேரத்தை ஒதுக்கிப் பிக்பாக்கிலிருந்து ஒரு விளையாட்டை விளையாடுங்கள்.
ஸ்ப்ரி ஃபாக்ஸ் பற்றி
ஸ்ப்ரி ஃபாக்ஸ் என்பது 18 பேரைக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது துவங்கப்பட்டுக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது, விருதுகளை வென்ற விளையாட்டான ஆல்ஃபாபியர், டிரிபிள் டவுன் மற்றும் ரெல்ம் ஆஃப் தி மாட் காட் உட்பட 15 தனித்துவமான விளையாட்டுகளை இது உருவாக்கியுள்ளது, மேலும் உலகை மகிழ்ச்சியான இடமாக மாற்றும் அசல், சமூகச் சார்பு விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
செப்டோலாப் பற்றி
செப்டோலாப் என்பது புதுமைகள் நிரப்பப்பட்டு அதன் தனித்துவமான தரத்தால் மெருகூட்டப்பட்ட வேடிக்கையான விளையாட்டுகளை உருவாக்கும் ஒரு உலகளாவிய நிறுவனமாகும். 1.2 பில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட அவர்களின் கட் தி ரோப் விளையாட்டுகளின் வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் கிங் ஆஃப் தீவ்ஸ் மற்றும் C.A.T.S.: க்ராஷ் அரினா டர்போ ஸ்டார்ஸ் ஆகியவற்றை வெளியிட்டது, இவை ஒருங்கிணைந்து 200 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட, பலரால் ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய மிகப்பெரிய மொபைல் விளையாட்டாகும். 2017 -இல், C.A.T.S. Google Play -யில் ஆண்டின் சிறந்த விளையாட்டு என்பதற்கான விருதை வென்றது மற்றும் Apple App Store -இல் சிறந்த விளையாட்டுகள் பட்டியலில் இடம்பெற்றது.
Zynga பற்றி
2007 -இல் இது நிறுவப்பட்டதிலிருந்து, Zynga-வின் நோக்கம் விளையாட்டுகளின் மூலம் உலகை இணைப்பதாகும். இன்று வரை 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இணையம் மற்றும் மொபைலில் ஃபார்ம்வில்™, ஜிங்கா போக்கர்™, வோர்ட்ஸ் வித் ஃப்ரெண்ட்ஸ்™, ஹிட் இட் ரிச்!™ ஸ்லாட்ஸ் மற்றும் CSR ரேசிங்™ உட்படப் பல Zynga விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். Zynga-வின் விளையாட்டுகள், Apple iOS, Google Android மற்றும் Facebook உட்படப் பல உலகளாவிய இயங்குதளங்களில் கிடைக்கின்றன. இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது, மேலும் அமெரிக்கா, கனடா, U.K., அயர்லாந்து, இந்தியா, துருக்கி மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் கூடுதல் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.