17 செப்டம்பர், 2014
17 செப்டம்பர், 2014

Introducing Snapcash

Today is a big day for us - we are launching our first product created in partnership with another company. We’re huge fans of the folks at Square and have been big admirers of Square Cash since it launched – just type a dollar amount into the subject line of an email and send cash to friends. Genius!

இன்று எங்களுக்கு முக்கியமான நாளாகும் - மற்றொரு நிறுவனத்துடன் கூட்டிணைந்து உருவாக்கப்பட்ட எங்கள் முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் Square இல் பணியாற்றுபவர்களின் பெரும் இரசிகர்கள், Square Cash அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் சுவைஞர்களாக உள்ளோம் – நண்பர்களுக்கு பணம் அனுப்ப மின்னஞ்சலின் தலைப்பு வரியில் டாலரில் தொகையைத் தட்டச்சு செய்தால் போதுமானது. புத்திசாலித்தனமானது!

அது மிகவும் பிடித்ததால் அவர்களுடன் Snapchat உணர்வுடன் ஏதாவது ஒன்றை உருவாக்க விரும்பினோம். எனவே Snapcash மூலமாதிரியை உருவாக்கி, அதை Square இன் குழுவுடன் பகிர்ந்துகொண்டோம். நல்லவேளை அவர்களும் எங்களைப் போல் உற்சாகத்துடன் இருந்தனர், ஒன்றிணைந்து அதை உருவாக்க விரும்பினர்.

இன்று நீங்கள் பார்க்கும் தயாரிப்பு விரைவானது, வேடிக்கையானது, நம்பவியலாத எளிமையானது. உங்கள் டெபிட் அட்டையை உள்ளிட்ட பின், அது Square ஆல் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகிறது, அவர்கள் உங்கள் பணம்செலுத்தலை விரைவாகச் செயலாக்கி உங்கள் நண்பர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணத்தை அனுப்புகிறார்கள். ஸ்வைப் செய்து அரட்டைக்குச் செல்லுங்கள், டாலர் குறி, தொகையைத் தட்டச்சு செய்யுங்கள் (எ.கா. $11.25), பச்சை பொத்தானை அழுத்துங்கள்.

பணம் செலுத்தலை விரைவாகவும் இன்னும் வேடிக்கையாகவும் மாற்ற நாங்கள் முற்பட்டுள்ளோம், ஆனால் பணத்தைக் கையாளும்போது பாதுகாப்பு அவசியம் என்பதையும் அறிந்துள்ளோம். இப்பகுதியில் டன் கணக்கான அனுபவத்தை Square கொண்டுள்ளது, Snapcash ஐ அனைவருக்கும் சிறந்த அனுபவமாக மாற்ற எங்கள் குழுக்கள் கடினமாக உழைத்துக் கொண்டுள்ளன. இப்போதைக்கு 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட டெபிட் அட்டை வைத்திருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் Snapchat பயனர்களுக்கு மட்டுமே Snapcash கிடைக்கிறது.

எங்களைப் போல் Snapcash ஐ நீங்களும் விரும்புவீர்கள் என நம்புகிறோம்.

Snapcash ஐப் பயன்படுத்தி மகிழ்க!

Back To News