
Introducing Spotlight on Snapchat
Today we’re introducing Spotlight to shine a light on the most entertaining Snaps created by the Snapchat community.
Snapchat சமூகத்தால் உருவாக்கப்பட்ட அதிகம் மகிழ்விக்கும் Snapகள் மீது கவனத்தைத் திருப்புவதற்கு இன்று நாங்கள் ஸ்பாட்லைட்டை அறிமுகம் செய்கிறோம்.
ஒவ்வொரு நாளும் படைப்பாளர்களுக்கு நாங்கள் பகிர்ந்தளிக்கும் $1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலரின் ஒரு பங்கைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற உங்கள் சிறந்த வீடியோவை ஸ்பாட்லைட்டுக்கு சமர்ப்பிக்கவும்!
அல்லது ஓய்வாக அமர்ந்து, பார்த்து உங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுங்கள்!
பணம் ஈட்டும் வாய்ப்பிற்கு, ஸ்பாட்லைட்டுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் Snap-கள் எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஈட்டுவதற்கு நீங்கள் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்கவேண்டும்.
எங்கள் சமூகத்தின் நல்வாழ்வை முன்னுரிமையாகக் கொண்டு Snapchat மதிப்புகளுக்கு ஏற்ப வாழும் அதே சமயத்தில் எங்கள் சமூகத்தை மகிழ்விக்க ஸ்பாட்லைட்டை நாங்கள் வடிவமைத்தோம். ஸ்பாட்லைட் உள்ளடக்கம் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இது பொதுக் கருத்துகளை அனுமதிக்காது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UK, அயர்லாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஸ்பாட்லைட் கிடைக்கிறது. இன்னும் பல நாடுகளில் விரைவில் வரவிருக்கிறது.
நிச்சயமாக, உங்கள் கருத்தின் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து ஸ்பாட்லைட்டை மேம்படுத்துவோம்.
உங்கள் படைப்புகளைக் காணக் காத்திருக்கிறோம்.
ஹேப்பி ஸ்னாப்பிங்!