இன்று நாங்கள் புதிய மேம்பட்ட Snapchat ஐ அறிவிக்கிறோம் - உங்கள் உறவுகளைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டு உங்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்டது!
இப்போது வரை பதிப்பாளர்கள், உருவாக்கியவர்களின் உள்ளடக்கத்துடன் உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்கள் எப்போதும் கலந்து விடுகின்றன. தொழில்முறை உள்ளடக்க உருவாக்குபவர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் குறைப்பது ஓர் ஆர்வத்துக்குரிய இணையச் சோதனை என்றாலும் அது சில வித்தியாசமான பக்க விளைவுகளையும் உருவாக்கியுள்ளது (போலிச்செய்தி போன்றவை), நம்மை நாமே வெளிப்படுத்துவதை விடுத்து நமது நண்பர்களுக்காகச் செயல்பட வேண்டுமென நம்மை உணரச் செய்கிறது.
ஊடகத்திலிருந்து சமூகத்தைப் புதிய Snapchat பிரிக்கிறது. இதன் பொருள் உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் அரட்டைகளும் கதைகளும் Snapchat இன் இடப்பக்கம் தோன்றுகின்றன, பதிப்பாளர்கள், உருவாக்கியவர்கள், சமூகத்திடமிருந்து வரும் கதைகள் வலப்புறம் தோன்றுகின்றன.
Snapchat ஐ இன்னும் தனிப்பட்டதாக உணரச் செய்ய புதிதாக ஒன்றையும் கண்டுபிடித்துள்ளோம்: மாறுநிலை நண்பர்கள் பக்கம். கேமராவின் இடப்புறமுள்ள புதிய நண்பர்கள் பக்கம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தொடர்புகொள்வதன் அடிப்படையில் உங்கள் நண்பர்களைக் காட்டுகிறது.
நீங்கள் பேச விரும்பும் நண்பர்களை, பேச விரும்பும்போது கண்டறிவதை எளிதாக்கும் அதிநவீன சிறந்த நண்பர்கள் அல்காரிதங்களாக அவற்றை நீங்கள் எண்ணலாம். சரியான நபரைக் கண்டுபிடிப்பதற்காக நமது அரட்டைகளை முடிவில்லாமல் ஸ்கிரோல் செய்த எரிச்சலூட்டும் அனுபவம் நாம் அனைவருக்கும் இருந்திருக்கும்- இப்போது உங்கள் நண்பர்கள் நீங்கள் பேச விரும்பும் வரிசையில் பட்டியலிடப்படுவார்கள். உங்கள் நண்பர்களைக் காட்டுவதற்கான சிறந்த வழியைக் கற்றுக் கொள்ள நண்பர்கள் பக்கத்திற்குச் சிறிது நேரம் எடுக்கலாம், ஆனால் அம்முடிவுகள் மதிப்பிற்குரியன!
கேமராவின் வலப்புறமுள்ள புதிய Discover பக்கத்தில் பதிப்பாளர்கள், உருவாக்குபவர்கள், சமூகத்தின் கதைகள் உள்ளன. உங்கள் சந்தாக்கள் மேல்புறத்தில் உள்ளன, அதைத் தொடர்ந்து நீங்கள் பார்க்க விரும்பும் பிற கதைகள் உள்ளன. காலப்போக்கில், Discover உங்களுக்காகத் தனித்துவமாகத் தனிப்பயனாகும். Discover இலுள்ள கதைகள் அல்காரிதத்தின் படி தனிப்பயனாக்கப்பட்டாலும், பக்கங்களில் முன்னிறுத்திக் காட்டப்படும் அனைத்தையும் எங்கள் தொகுதேர்வர்கள் மீளாய்வு செய்து ஒப்புதலளிக்கிறார்கள். மனித மீளாய்வு, இயந்திரத் தனிப்பயனாக்கத்தின் இந்தச் சமநிலை மொபைலில் சிறந்த உள்ளடக்க அனுபவத்தை வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம்.
எப்போதும் போல் Snapchat கேமராவில் திறக்கிறது, நண்பர்களுடன் ஒரு தருணத்தைப் பகிர்வதற்கான விரைவான வழியாகிறது.
இன்று இணையத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது - நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அற்புதமான உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கும் சிறந்த வழியை உருவாக்குவதற்கு ஊடகத்திலிருந்து சமூகத்தைப் பிரித்தது எங்களுக்கு உதவியுள்ளது.
எங்களைப் போல் நீங்களும் இந்த மாற்றங்களை விரும்புவீர்கள் என நம்புகிறோம் - இது புத்தம் புதிய Snapchat!
Snap செய்து மகிழ்க!