இன்று நாங்கள் அடுத்த தலைமுறை Spectacles-ஐ அதாவது மிகை யதார்த்தத்தை நனவாக்கும் எங்கள் முதல் ஜோடி கண்ணாடிகளை அறிமுகம் செய்கிறோம். அவை உருவாக்குபவர்கள் நேரடியாக தங்கள் லென்ஸஸை உலகின் மீது கவிக்க உருவாக்கப்பட்ட இலேசான எடையுள்ள டிஸ்பிளே கண்ணாடிகளாகும். இதன் மூலம் அவர்கள் அதிவேக AR-இன் மூலம் கேளிக்கையையும் பயன்பாட்டையும் இணைக்க புதிய வழிகளை கண்டறியலாம்.
பல ஆண்டுகளாக, உருவாக்குபவர்கள் சமூகத்துடன் இணைந்த எங்கள் Spectacles-ஐ வடிவமைக்கும் எங்கள் பயணமானது புதுப்பொருள் தேடல், கற்றல் மற்றும் வேடிக்கைகள் மிகுந்ததாக இருந்துவருகிறது. ஒவ்வொரு மீள்செய்கையையும் AR-க்கான முற்றிலும் புதிய கண்ணோட்டத்திற்கான கட்டமைக்கும் படியாக நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.
Spectacles விற்பனைக்கு அல்ல - அவை Lens Studio-இல் கட்டமைக்கப்பட்ட AR அனுபவங்களின் வாயிலாக நாம் தொடர்புகொள்ளும், வாழும் மற்றும் ஒன்றுசேர்ந்து உலகை கண்டறியும் வழியை மிகை யதார்த்த உருவாக்குபவர்கள் மீண்டும் கற்பனை செய்வதற்காகும்.
அம்சங்கள்
லென்ஸஸுக்கு உயிர் கொடுக்க Spectacles மனித உணர்வுகளான தொடுதல், பார்வை மற்றும் ஒலியைப் பயன்படுத்துகிறது. இரட்டை 3D வேவ்கைட் காட்சிகள் மற்றும் 26.3 டிகிரி காட்சிப் புலம் உங்கள் கண்களுக்கு முன்பு லென்ஸசை உலகின் மீது கவிக்கிறது. சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் ஃப்ரீடம் மற்றும் ஹேண்ட், மார்க்கர் மற்றும் சர்ஃபேஸ் டிராக்கிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எங்கள் புதிய Snapஸ்பேஷியல் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டு Spectacles உருவாக்குபவர்களின் கற்பனைகளை உலகின் மீது புதிய வழியில் விரிக்கிறது.
லென்ஸஸ் விரைவாக எதிர்வினைபுரிந்து 15 மில்லிசெகண்ட் மோஷன் டு ஃபோட்டான் தாமதத்துடன் உங்கள் காட்சிப்புலத்தில் துல்லியமாகத் தோன்றும். மேலும் வீட்டிற்குள்ளும் வெளியிலும் AR ஐ ஆராய்வதற்காக காட்சித்திரை 2000 நிட்ஸ் வரை சூழலுக்கு ஏற்ப ஒளிர்வை மாற்றியமைத்துக்கொள்ளும். பல-உணர்வு அனுபவத்தை வழங்குவதற்காக 2 RGB கேமராக்கள், 4 உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன்கள், 2 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு டச்பேட் ஆகியவற்றை Spectacles கொண்டுள்ளது.
Spectacles-இன் எடை வெறும் 134 கிராம் மட்டுமே. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் AR ஐ சுமார் 30 நிமிடங்களுக்கு உருவாக்குபவர்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து வரலாம் Qualcomm Snapdragon XR1 தளம் Spectacles குறைந்த எடை அணியக்கூடிய வடிவமைப்பினுள் அதிகபட்ச செயலாக்க சக்தியை வெளிக்கொணர்கிறது..
செயல்பாடு
Spectacles எங்கள் Snap AR தளத்தில் லென்ஸஸ் உருவாக்க மற்றும் வெளியிட உருவாக்குபவர்கள் மற்றும் வடிவமைப்பவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட எங்கள் சக்திவாய்ந்த டெஸ்க்டாப் செயலியான Lens Studio-உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. Lens Studio மூலம், நிகழ்ை நேரத்தில், விரைவான சோதனை மற்றும் மீள்செய்கைக்காக உருவாக்குபவர்கள் கம்பியில்லாமல் லென்ஸசை Spectacles-க்கு நகர்த்த முடியும்.
The temple’s touchpad helps creators interact with the Spectacles display and launches the Lens Carousel. வலது பொத்தான் ஸ்கேனை செயல்படுத்துகிறது, காட்சிப் புலத்தில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் அடிப்படையில் தொடர்புடைய லென்ஸசை பரிந்துரைக்கிறது. குரல் ஸ்கேன் உருவாக்குபவர்களுக்கு லென்ஸஸைத் தொடங்க கைகளைப் பயன்படுத்தாமலேயே கட்டளையிட அதிகாரமளிக்கிறது. இடது பொத்தான் லென்ஸசின் 10 நொடி படங்களைப் படம்பிடிக்கும். அதனால் உருவாக்குபவர்கள் Spectacles-இல் இருந்தே Snapகளை நேரடியாக அனுப்பலாம்.
Spectacles உருவாக்குபவர்கள்
எங்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்வதற்கும், AR இன் எல்லைகளைத் விரிவாக்குவதற்கும் உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உருவாக்குபவர்கள் குழுவுக்கு புதிய Spectacles-ஐ நாங்கள் வழங்கியுள்ளோம். Spectacles மற்றும் Lens Studio மூலம், இந்த உருவாக்குபவர்கள் ஏற்கனவே தங்கள் கற்பனைகளை உயிர்ப்பித்திருக்கிறார்கள், உலகத்தை அவர்களின் வரைதிரையாகக் கொண்டுள்ளனர்:
டான் அலென் ஸ்டீவென்சன்| XR வடிவமைப்பாளர் | வைப் கிவேஸ்ட் AR
லாரென் கேசன்| கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ்ட்| தாவோஸ், கால்டெரா மற்றும் அனிதா
கேட் வி ஹாரிஸ்.|தொழில்நுட்ப வடிவமைப்பாளர் | நடன உதவியாளர்
சாக் லிபர்மேன் |கலைஞர்| கவிதை உலகம் (சாண்டல் மார்ட்டினுடன்)
மேத்யூ ஹால்பெர்க் | AR வடிவமைப்பாளர்|ஸ்கெட்ச்ஃப்ளோ
கிளே வீஷர்| AR உருவாக்கி | மெட்டாஸ்கேப்ஸ்
லெய்டன் மெக்டொனால்ட் | VR/AR உருவாக்குபவர்| பிளாக்சோல் கேலரி
நீங்கள் Spectacles வைத்து சோதனை செய்ய ஆர்வமுள்ள AR உருவாக்கியாக இருந்தால் http://spectacles.com/creatorsஐப் பார்க்கவும்.