இன்று மேரிலேண்ட் சட்டத்தலைமை அலுவலரின் அலுவலகத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டோம்—கூட்டாட்சி வர்த்தக ஆணையத்துடனான எங்கள் சமீபத்திய ஒப்பந்தங்களைப் போல் இதுவும், பயனர்களின் தனியுரிமைக்கு Snapchat ஏற்கனவே வழங்கியிருக்கும் உறுதிப்பாட்டிற்கு வலுவூட்டுகிறது. இரண்டு ஒப்பந்தங்களிலும் பொதுவானவை பல உள்ளன. தங்கள் Snapகளின் பெறுநர்கள் அந்த Snapகளைச் சேமிக்கக்கூடும் என்பதைப் பயனர்கள் எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு முடிவடைந்த விசாரணைகளும் வெளிக்கொணர்ந்தன. எந்தவொரு கூட்டாட்சி, மாகாண, அல்லது உள்ளூர் சட்டங்களையும் Snapchat மீறவில்லை என்பதை ஒப்புக்கொண்டு ஒவ்வொரு ஒப்பந்தமும் நிறைவடைந்தது.
ஆனால் இரண்டு ஒப்பந்தங்களிலும் பொதுவான ஒன்று இருந்தது: Snapchat தனது பயனர்களின் Snapகளைத் தொடர்ந்து வைத்திருக்கிறது என்று அவை ஒருபோதும் குற்றஞ்சாட்டவோ, கண்டுபிடிக்கவோ, பரிந்துரைக்கவோ இல்லை. அதுதான் முக்கியம். அனைத்துப் பெறுநர்களாலும் பயனர்களின் Snapகள் பார்க்கப்பட்ட பின் அவற்றை எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கிவிடுகிறோம் என எங்கள் பயனர்களுக்கு முதல் நாளிலிருந்தே உறுதியளித்துள்ளோம். அது நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் வாக்குறுதியாகும், அதனை FTC யோ மேரிலேண்ட் AG யோ இதுவரை கேள்விக்குட்படுத்தியதில்லை.
பதிலாக, ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதன் மூலமோ வேறு ஏதேனும் நுட்பத்தைப் பயன்படுத்தியோ பெறுநர்களால் தங்களின் Snapகளைச் சேமிக்க முடியும் என்பதை எங்கள் பயனர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கமாட்டார்கள் என இரண்டு முகமைகளும் நினைத்தன. அந்தக் குறைபாட்டின் தகுதி எதுவாயினும், அது இப்போது பழங்கதையாகிவிட்டது. நாங்கள் விளக்கியது போல, அந்த ஒப்பந்தத்தில் நுழைந்ததிலிருந்து—Snapchat தனது சேவையகங்களிலிருந்து எல்லா பார்க்கப்பட்ட Snapகளை நீக்கினாலும் பெறுநர்களால் எப்போதும் அதைச் சேமிக்க முடியும்— என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக நாங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையையும் பிற பொது அறிக்கைகளையும் திருத்திவிட்டோம்.
13 வயதிற்குட்பட்ட பயனர்கள் செயலியைப் பயன்படுத்தக்கூடாது என்ற மேரிலேண்ட் AG இன் குறையையும் இந்த ஒப்பந்தம் சரிசெய்கிறது. குறிப்பாக, இச்செயலி "13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் பயன்படுத்தப்பட வேண்டும்" என்பதை Snapchat இன் சேவை நிபந்தனைகள் எப்போதும் தெரிவித்துள்ளன என்பதை இந்த ஒப்பந்தத்தில் மேரிலேண்ட் AG அங்கீகரிக்கிறார். இந்த வரம்பு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த Snapchat பல கட்டுப்பாடுகளை நிறுவியுள்ளது. இன்றைய ஒப்பந்தம் அக்கட்டுப்பாடுகளை முறைப்படி அங்கீகரிக்கிறது.
FTC உடனான ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது நாங்கள் கூறியதுபோல, பயனர்களின் தனியுரிமையை ஊக்குவிப்பதற்கும், எப்படி யாருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாட்டை Snapchat பயனர்களுக்கு வழங்குவதற்கும் Snapchat உறுதியேற்றுள்ளது—எப்போதும் உறுதியாக இருக்கும்.