இன்று, Microsoft மற்றும் Snap ஒவ்வொரு மாதமும் கூட்டுச்செயல்பாட்டுத் தளத்தைப் பயன்படுத்தும் 280 மில்லியன் மக்களுக்காக, Teams-க்கான Snapchat லென்ஸஸ் ஒருங்கிணைப்பை அறிவிப்பதில் உற்சாகமாக உள்ளன. லென்ஸஸ் பங்கேற்பது மற்றும் ஒன்றாக இணைந்துப் பணியாற்ற தனிப்பட்ட, ஈடுபடுத்தும் வழிகளை வழங்குகிறது, அதே சமயம் இணைப்பு நிஜமாக்கம் மூலம் அனைவருடைய நாளிற்கும் ஒளியூட்ட நகச்சுவை மற்றும் ஊடாட்டும் தன்மையை வழங்குகிறது. (cue the AR sunglasses!). இந்த ஒருங்கிணைப்பு Snap-இன் SDK கேமரா தொகுப்பு மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது, இது கூட்டாளர்களை தங்கள் சொந்த பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களில் Snap-இன் AR தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது.
Teams கூடங்களின் போது, அறிவார்ந்ததில் இருந்து புத்தாக்கம் வரையான 26 பிரபலமான லென்ஸஸின் சுழலும் தொகுப்பு கிடைக்கும். உங்களை ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமாக மாற்றும் லென்ஸஸ், உங்கள் வீடியோவில் வேடிக்கையான பின்னணியைச் சேர்ப்பவை மற்றும் உங்கள் அலுவலகத்தில் பனித்துளி விழுவது போல் உருவாக்கும் லென்ஸஸ் கூட. ஒருவருடன் ஒருவர் அறிமுகமாக புதிய வழிகள் மூலம் உங்கள் கூட்டங்களைத் தனித்துவமாக்குங்கள் மற்றும் AR மூலம் உங்களின் அடுத்த செயல்திட்டம் தொடங்கும் போது ஊக்கம் பெறுங்கள். உங்கள் ஆளுமை மற்றும் நகைச்சுவை உணர்வுக்குப் பொருந்தும் லென்ஸசை கண்டுபிடிக்க கூடுதல் பதிவிறக்கங்கள் எதுவும் தேவையில்லை. தொடங்குவதற்கு, வீடியோ எஃபக்ட்ஸ்' மீது கிளிக் செய்து ஆராயத் தொடங்க 'Snapchat' தாவலைத் தேர்ந்தெடுங்கள்.
இது கேமரா தொகுப்புடன் Microsoft இன் இரண்டாவது ஒருங்கிணைப்பாகும். Microsoft-இன் வீடியோ கற்றல் தளமான Flip-உடன் Snap AR ஐ ஒருங்கிணைக்க அவர்கள் கேமரா தொகுப்பைப் பயன்படுத்தினர், அங்கு கல்வியாளர்கள் மாணவர்களிடையே வீடியோ விவாதங்களைத் தூண்டுவதற்கு தலைப்பை இடுகையிடலாம். அவர்களது Flip வலை அனுபவத்தில் Snap AR ஐ சேர்த்துப் பிறகு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடியோக்களை உருவாக்குவது 60% அதிகரித்துள்ளது.
கேமரா தொகுப்பை ஒருங்கிணைக்கவும், ARக்கான புதிய பயன்பாட்டு அம்சங்களை உருவாக்கவும் புதிய கூட்டாளர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். கூட்டாளர்கள் மற்றும் உருவாக்குநர்கள் தொடங்குவதற்குத் அணுகலாம்: https://ar.snap.com/camera-kit.