
அறிமுகப்படுத்துகிறோம், GenAI மூலம் இயக்கப்படுகின்ற புதிய AR அனுபவங்கள்
Snap-இன் GenAI முன்னேற்றங்கள், இணைப்பு நிஜமாக்கத்தில் சாத்தியமானவற்றை உருமாற்றுகின்றன
Snap-இல், எங்களின் உலகளாவிய சமூகம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், தங்களின் படைப்பாற்றலை உயிர்ப்பிக்கவும் அதிகாரமளிக்கின்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதனால், Snapchatterகள் மற்றும் AR வடிவமைப்பாளர் சமூகத்திற்காக GenAI மூலம் இயக்கப்படும் புதிய AR அனுபவங்களை இன்று அறிமுகப்படுத்துகிறோம்.
நிகழ்நேர GenAI-இல் உள்ள புதுமைகள், விரைவில் Snapchat-இலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன
AR-இல் உங்கள் கற்பனையை உடனடியாக உயிர்ப்பிக்கக்கூடிய Snap-இன் நிகழ்நேர பட மாதிரியை நாங்கள் முன்னோட்டமிடுகிறோம். இந்த ஆரம்பக்கால முன்மாதிரியானது, உருமாற்றத்திற்கான யோசனையை நடைமுறைப்படுத்துவதையும் நிகழ் நேரத்தில் தெளிவான AR அனுபவங்களை உருவாக்குவதையும் சாத்தியமாக்குகிறது.
மொபைல் சாதனங்களில் நிகழ்நேரத்தில் GenAI மாதிரிகளை இயக்குகின்ற இந்தச் சாதனையானது, அதிவேகமான, அதிக செயல்திறன் கொண்ட GenAI நுட்பங்களை மேம்படுத்த, எங்கள் குழுவின் புதுமைக் கண்டுபிடிப்புகளால் சாத்தியமானது. GenAI-ஐ வேகமாகவும் இலகுவாகவும் மாற்ற எங்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழு தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறது, இதன்மூலம் எங்கள் Snapchat சமூகம் பயணம் செய்யும் வேளையிலும் தங்கள் நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கி அவர்களுடன் தகவல்தொடர்பு கொள்ளலாம். எங்களின் GenAI நுட்பங்கள் Bitmoji பின்னணிகள், அரட்டை வால்பேப்பர்கள், கனவுகள், AI செல்லப்பிராணிகள், அதோடு எங்கள் AI லென்ஸஸ் ஆகியவற்றுக்கும் ஆற்றலூட்டுகின்றன.
எங்களின் AR படைப்பாளர் சமூகத்திற்கான புதிய GenAI கருவிகள்
எங்களின் AR ஆத்தரிங் டூல் லென்ஸ் ஸ்டுடியோவுக்கான புதிய GenAI Suite-ஐயும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம், இதன் மூலம் AR படைப்பாளர்கள் தங்கள் லென்ஸ்களுக்குச் சக்தியூட்ட தனிப்பயன் ML மாதிரிகளையும் சொத்துக்களையும் உருவாக்க முடியும். இந்தக் கருவிகளின் தொகுப்பானது, ஏற்கனவே உள்ளவற்றில் இருந்து புதிய மாதிரிகளை உருவாக்கி வாரங்கள் முதல் மாதங்கள் வரை நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் AR உருவாக்கத்தை சூப்பர்சார்ஜ் செய்கிறது, இதன்மூலம் முன்பை விட வேகமாக உயர்தர லென்ஸ்களைக் கட்டமைப்பதைச் சாத்தியமாக்குகிறது.
Lens Studio-வில் உள்ள கருவிகள் மூலம் எவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள நாங்கள் அதிகாரம் அளிக்க விரும்புகிறோம், மேலும் படைப்பாற்றலின் புதிய பரிமாணங்களை வெளிக்கொணர்வதற்கான புதிய திறன்களை GenAI Suite சேர்க்கிறது. கலைஞர்கள், படைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் லென்ஸுக்கு சரியான தோற்றத்தை உருவாக்குவதற்கு, கூடுதல் AR அம்சங்களுடன் தனிப்பயன் ML மாதிரிகளைக் கலக்கலாம்.
GenAI Suite-ஐப் பயன்படுத்தி புகழ்பெற்ற உருவப்பட பாணிகளால் ஈர்க்கப்பட்ட லென்ஸ்களை உருவாக்க லண்டனின் நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரியுடனும் நாங்கள் கூட்டிணைந்துள்ளோம். Snapchatterகள் உருவப்பட-பாணி லென்ஸ்களின் தொகுப்பிலிருந்து தேர்வு செய்து, ஸ்னாப் எடுத்து, அதை அருங்காட்சியகத்தின் "வாழும் உருவப்படம்" படங்காட்டிச் சுவருக்குச் சமர்ப்பிக்கலாம்.
GenAI Suite ஆனது கலை சார்ந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

GenAI Suite ஆனது எங்களின் புதிய Lens Studio 5.0 வெளியீட்டின் ஒரு பகுதியாகும், இது மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், கூறுநிலைமை மற்றும் வேகத்திற்கான அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதுப்பிப்பானது, AR படைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் குழுக்களுக்கு அவர்களின் மேம்பாட்டுப் பணிப்பாய்வுகளைத் தனிப்பயனாக்க புதிய கருவிகளை வழங்குவதன் மூலம் அதிகாரமளிக்கிறது, இதன்மூலம் அவர்கள் Lens Studio-வின் திறன்களை அதிகரித்து, மேலும் சிக்கலான திட்டப்பணிகளைக் கட்டமைக்க முடியும்.
எங்கள் சமூகம் இந்தப் புதிய கருவிகளை முயற்சித்து அவற்றின் ஆக்கப்பூர்வமான திறன்களை ஆராய்ந்து அறிவதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.