14 நவம்பர், 2024
14 நவம்பர், 2024

Snapchat ஃபேமிலி சென்டர்-க்கு இருப்பிட பகிர்வைக் கொண்டுவருகிறது

நாங்கள் பெற்றோருக்கான கருவிகள் மற்றும் வளங்களை வழங்கும் எங்களின் ஆப் மையமாக ஃபேமிலி சென்டர்-இல்,புதிய இருப்பிடப் பகிர்வு அம்சங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

Snapchat ஏற்கனவே மொபைலில் மிகவும் பிரபலமான வரைபடங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. 350 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு மாதமும் எங்கள் Snap Map-ஐ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளவும், வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்கவும், அருகில் உள்ள சிறந்த இடங்களைப் பார்ப்பதற்கும், உலகம் முழுவதும் இருந்து Snapகளின் மூலம் உலகை அறியவும் பயன்படுத்துகின்றனர். விரைவில், ஃபேமிலி சென்டர்-இல் புதிய Snap Map இருப்பிட பகிர்வு அம்சங்கள் வெளியிலும் மட்ற்றும் வெளியே இருக்கும்போது குடும்பங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதை முன்பை விட எளிதாக்கும். 

ஃபேமிலி சென்டர் மூலம் இருப்பிடத்தை பகிரவும் 

இது எளிதானது. ஃபேமிலி சென்டர்-இல் இப்போது கிடைக்ககூடிய புதிய பொத்தானின் மூலம், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்கள் பதின்ம வயதினரிடம் நேரடி இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வேண்டுகோளை அனுப்பலாம். பெற்றோர்களும் தங்கள் இருப்பிடத்தை திரும்ப பகிர்வது எளிது - இதன் மூலம் அவர்கள் தேர்வு செய்தவுடன் குடும்ப உறுப்பினர்களின் போக்கு மற்றும் வரவை பற்றிய தகவல்களை ஒரே பக்கத்தில் வைக்கலாம்! 

மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் தெளிவுத்தன்மை

ஃபேமிலி சென்டரில் ஏற்கனவே பெற்றோர்கள், தங்கள் டீன் பற்றிய தனியுரிமை மற்றும் அமைப்புகளை பார்க்க முடியும், விரைவில் அவர்கள் இருப்பிட-பகிர்வு தேர்வுகளையும் காண முடியும். இதன் மூலம் பெற்றோர்கள், Snap Map-இல் தங்கள் டீன்-கள் தங்கள் இருப்பிடத்தை எந்த நண்பர்களுடன் பகிர்கிறார்கள் என்பதை பார்க்க அனுமதிக்கும், மேலும் குடும்பங்கள் தங்களுக்கு எந்த பகிர்வு தேர்வுகள் சிறப்பாக வேலை செய்யும் என்பது பற்றிய உரையாடல்களை தெரிவிக்க உதவுகிறது.

பயண அறிவிப்புகள்

குடும்ப உறுப்பினர்கள் விரைவில் Snap Map-இல் வீடு பள்ளி அல்லது ஜிம் போன்ற மூன்று குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்வு செய்ய முடியும், மேலும் அந்த நியமிக்கப்பட்ட இடங்களிலிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்கள் புறப்படும்போது அல்லது வரும்போது பெற்றோர்கள், அறிவிப்புகளை பெறுவார்கள். டீன் ஏஜர்களின் பெற்றோர் அவர்கள் வகுப்பிற்கு வந்துவிட்டார்கள், சரியான நேரத்தில் விளையாட்டுப் பயிற்சியை முடித்துவிட்டார்கள், அல்லது நண்பர்களுடன் ஒரு இரவுக்குப் பிறகு வீடு திரும்பினார் என்பதை தெரிந்துகொள்வதற்காக, ஃபேமிலி சென்டரில் பயண அறிவுப்புகளைச் சேர்த்துள்ளோம்.

இந்த அம்சங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும்.

கூடுதல் பாதுகாப்பு நினைவூட்டல்கள்

Snapchat இல், இருப்பிடப் பகிர்வு எப்போதும் இயல்பாகவே முடக்கப்படும் மேலும் அனுமதிக்கப்பட்ட நண்பராக இல்லாத ஒருவருடன் இருப்பிடத்தை பகிர்வதற்கான எந்த விருப்பமும் இல்லை. தங்கள் அனைத்து Snapchat நண்பர்களுடனும் இருப்பிடத்தை பகிரும் நபர்களுக்கு, தங்கள் தேர்வுகளை மதிப்பாய்வு செய்வதற்க்காக புதிய இன்-ஆப் நினைவூட்டல்களை நாங்கள் சேர்க்கிறோம். Snapchat பயனர்கள் தங்கள் நிஜ உலகக் நெட்வொர்க்குக்கு வெளியே இருக்கும் ஒரு புதிய நண்பரை சேர்க்கும்போது அவர்களுக்கு ஒரு பாப்-அப் தோன்றும் இது அவர்களின் அமைப்புகளைப் பற்றி கூடுதல் கவனம் செலுத்தும்படி அவர்களைத் தூண்டும். 

ஃபேமிலி சென்டரில் இந்தப் புதிய அம்சங்களை கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்கள் கருத்தைக் கேட்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ஹேப்பி ஸ்னாபிங்!

செய்திகளுக்குத் திரும்புக