25 செப்டம்பர், 2019
25 செப்டம்பர், 2019

A New Slate of Snap Originals

Today, we announced our new slate of Snap Originals, premium, made-for-mobile shows created exclusively for Snapchat. These new shows will begin airing this fall on Snapchat’s Discover page.

இன்று, நாங்கள் Snap மூலங்களின் புதிய ஸ்லேட்டை அறிவித்தோம். இது Snapchat-இற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் காட்சிகளுக்குத் தயாரிக்கப்பட்ட பிரீமியம் ஆகும். இந்த புதிய ஷோக்கள் Snapchat-இன் Discover பக்கத்தில் வரும் இலையுதிர்காலத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கும்.

Snap மூலங்கள் Snapchat சமூகத்தின் மாறுபட்ட குரல்கள், அனுபவங்கள் மற்றும் பேரார்வங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சிரீதியான மற்றும் சமூக நல்வாழ்வுக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. புதிய தொடர்களில் கதாபாத்திரத்தால் இயக்கப்படும் ஆவணத்தொடர்கள், ஸ்கிரிப்ட் செய்யப்படாத காட்சிகள் மற்றும் தொடராக்கப்பட்ட ஸ்கிர்ப்ட் செய்யப்பட்ட நாடகங்கள், த்ரில்லர்கள், நகைச்சுவைகள் மற்றும் பல வகைகள் அடங்கும். பால் ஃபெய்கின் பவுடர்கெக், காம்ப்ளக்ஸ், சைரன்ஸ் மீடியா மற்றும் லெஃப்ட்ஃபீல்ட் பிக்சர்ஸ் உள்ளிட்ட மொபைல் கதைசொல்லலை தொடர்ந்து வரையறுக்க, தொழில்துறையின் அடுத்த மற்றும் சிறந்த படைப்பாளர்களுடன் நாங்கள் கூட்டு சேர உள்ளோம். கூடுதலாக, இசைக்கலைஞர் பீட் வென்ட்ஸ் (ஃபால் அவுட் பாய்) புதிய ஸ்கிரிப்ட் தொடரான "எவ்ரிதிங் இஸ் ஃபைன் ” இல் புதிய இசையை கொண்டு வருவதன் மூலம் தயாரிப்பாளராகவும் இசை மேற்பார்வையாளராகவும் பணியாற்றுவார்,

இன்று அறிவிக்கப்பட்ட Snap இன் புதிய ஸ்லேட்டில் உள்ளடக்கப்பட்டவை:

  • Tekashi69 VS The World -(காம்ப்ளெக்ஸ் சீசன்; season 1) புரூக்ளினில் வளர்ந்த சர்ச்சைக்குரிய ராப்பரான டெகாஷி 6ix9ine இன் ஆரம்ப நாட்களிலிருந்து, அவர் பிரபலமானது வரை, எஃப்.பி.ஐ உடனான அவரது சிக்கல் மற்றும் இறுதியில் சிறைவாசம் வரை, aஅவராது எழுச்சி மற்றும் வீழ்ச்சியை இந்த அப்-டு-தி -மினிட் ஆவணத்தொடர் காட்சிப்படுத்துகிறது.. இலையுதிர்காலம் 2019 ஆவணத்தொடர்கள் தொடக்கங்கள் Snap இன் புதிய ஃப்ரான்சைஸ் “விஎஸ். தி வேர்ல்ட்” இன் ஒவ்வொரு பருவமும் ஹிப் ஹாப், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் மிகப் பிரபலமானவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை பிரத்தியேக காட்சிகள், வர்ணனை மற்றும் முற்றிலும் அசல் கண்ணோட்டத்துடன் ஆராயும்.

  • நிகிடா Unfiltered (Sirens Media) -இந்த நெருக்கமான ஆவணத்தொடர் திருநங்கை மொகுல் நிகிதா டிராகனைப் பற்றியதாகும், இதில் இதுவரை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்திராத தன் பாதிக்கப்பட்ட பக்கத்தை வெளிப்படுத்துகிறார், குளிர்காலம் 2020 ஆவணத்தொடர்கள் பிரீமியர்கள்

  • தி ஹனீபீஸ் (லெஃப்ட்ஃபீல்ட் பிக்சர்ஸ்) - நடனம் அனைவருக்குமானது என்பதை நிரூபிக்க அலபாமா மாநிலத்தின் பிளஸ்-சைஸ் நடனக் குழுவான ஹனிபீஸ் இங்கே உள்ளது. இந்த இளம், எழுச்சியூட்டும் எச்.பி.சி.யு நடனக் கலைஞர்கள் வெறுப்பாளர்களை அவர்களின் ஊக்கமளிப்பவர்களாக இருக்க அனுமதிக்கிறார்கள். மேலும் அவர்கள் மிகப் பெரிய கல்லூரி மேடைகளில் தங்கள் குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். குளிர்காலம் 2020 ஆவணத்தொடர்கள் பிரீமியர்கள்

  • டிரிவன்- (பிக் ஃபிஷ் என்டர்டெயின்மென்ட், ஒரு எம்ஜிஎம் நிறுவனம்) - பி.டி.ஜி 365 இல் உள்ள இளம் தொழில்முனைவோர் குழு பிரகாசமான தனிப்பயன் கார்களை அவர்களின் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தொலைபேசிகளை மட்டுமே பயன்படுத்தி வழங்குகிறார்கள். விலை மதிப்புமிக்க கவர்ச்சிகரமான கார் தொழில்துறை இனிமேலும் இதே போல் இருக்காது. குளிர்காலம் 2020 ஆவணத்தொடர்கள் பிரீமியர்கள்

  • மைண்ட் யுவர்செல்ப் (பார்கிராஃப்ட் ஸ்டுடியோஸ்) - இந்த ஆந்தாலஜி தொடரில், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு இளைஞனின் மனநல பிரச்சினையில் அவதிப்படும் அல்லது அதிலிருந்து மீண்டு வரும் ஒரு நேர்மையான மற்றும் நெருக்கமான உருவப்படத்தை சித்தரிக்கிறது. ஒ.சி.டி மற்றும் பாடி டிஸ்மார்பியாவிலிருந்து மனச்சோர்வு மற்றும் பி.டி.எஸ்.டி வரை, இந்தத் தொடர் ஒரு மனித உணர்வை- மற்றும் நம்பிக்கையை - இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு அளிக்கிறது. ஸ்கிரிப்ட் செய்யப்படாத தொடர் பிரீமியர்கள் குளிர்காலம் 2020

  • எவ்ரிதிங் இஸ் ஃஃபைன்- (பவுடர்கெக்) - ஜெம்மா ஒரு கல்லூரி மாணவி, இவளுக்கு பைபோலார் நோய் இருப்பது கண்டறியப்பட்டு அதை கையாளும் அதே சமயம் இசைத் துறையில் பிரபலமாகும் திட்டங்கள் அவளுக்கு உள்ளது. எவ்ரிதிங் இஸ் ஃபைன்

    மன நோயைக் கையாள என்ன தேவை என்பதைப் பற்றிய ஒரு தைரியமானக் கண்ணோட்டத்தைக் கொண்ட நகைச்சுவை (சில நேரங்களில் நன்மை , சில நேரங்களில் பேரழிவு ) அதே சமயம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக வழங்க முயற்சிக்கிறது. ஸ்கிரிப்ட் செய்யப்பட தொடர்கள் போரீமியர்கள் ஸ்பிரிங் 2020 வொர்கிங் டைட்டில்.

  • பிளேயர்ஸ்- ( லௌட் லேப்ஸ் மீடியா மற்றும் ஒன் புஷ்) - புகழ்பெற்ற என்.பி.ஏ வீரர் ஆஸ்கார் ப்ரூக்ஸின் மகனும், வளர்ந்து வரும் நட்சத்திரமுமான நாஷ் ப்ரூக்ஸ், தனது தந்தை டிரெட் செய்யப்படும்போது இந்தியானாவிலிருந்து எல்.ஏ க்கு இடம் பெயர்கிறார். இனிமேலும் தன் சிறிய ஊரில் முக்கியாமான நபராக கருதப்பட முடியாத , அவர் கூடைப்பந்து அணியில் ஒரு தொடக்க இடத்திற்கு கூட உத்தரவாதம் அளிக்கப்படாத ஒரு ஆடம்பரமான மேற்கு எல்.ஏ தனியார் பள்ளியில் தனது நன்மதிப்பை நிரூபிக்க வேண்டும். ஸ்கிரிப்ட் செய்யப்பட தொடர் பிரீமியர்கள் இலையுதிகாலம் 2019

  • சேவ் மீ  ( லௌட் லேப்ஸ் மீடியா மற்றும் ஒன் புஷ்) -அவரது ஆன்லைன் வகுப்புத் தோழர் மற்றும் காதலி காணாமல் போகும்போது, ​தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுப்பள்ளியில படிக்கும்் ஜேசன் அவளைக் கண்டுபிடித்து காப்பாற்றும் வேலையை கையில் எடுக்கிறான். ஆனால் அவனது தேடல் அவனை டிஜிட்டல் சாதனங்களுக்கு மேலாக மனித இணைப்பை ஊக்குவிக்கும் சமூகத்தைச் சாராத ஒரு "கான்சியஸ் சமூகத்திற்கு" வழிநடத்தும் போது, ஜேசனின் குணம் நிஜ வாழ்க்கையில் சோதிக்கப்படுகிறது. ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட தொடர்கள் பிரீமியர்கள் குளிர்காலம் 2020

கூடுதலாக, நாங்கள் பின்வரும் மூலங்ககளை விமர்சனம் செய்வோம்: இன்வெண்ட் டிவியின் பிரிங்கிங் அப் பாபி (ஆவணத்தொடர்), நியூ ஃபார்மின் டூ சைட்ஸ் (ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகம்) மற்றும் இண்டிகோ டெவலப்மெண்ட் அண்ட் என்டர்டெயின்மேண்ட் ஆர்ட்ஸின் கப்பா கிரிப்டோ (ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நகைச்சுவை). Discover பக்கத்தில் கேமராவுக்கு வலதுபுறம் இன்னும் கூடுதல் Snap மூலங்கள் வருடம் முழுவதும் ஒளிபரப்பப்படும்.

நம்பகமான ஊடக நிறுவனங்கள் மற்றும் கதைசொல்லிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிலிருந்து பிரீமியம் உள்ளடக்கத்தை ஆராய Snapchat பயனர்களுக்கான இடமாக 2015 ஜனவரியில் Discover ஐத்தொடங்கினோம். அதன் சமூகத்தின் படைப்பாற்றலில் வேரூன்றி, Snapchat கேமராவின் தனித்துவமான சக்தியால் vவழங்கப்படும் Discover முதல் கதை வடிவமைப்பை உருவாக்கியது, பின்னர் விரைவில் மற்ற தளங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் செங்குத்து வீடியோ உள்ளடக்க நோக்குநிலைக்குத் முன்னோக்கிச் சென்றது... இன்று, Discover மொபைல் பத்திரிக்கைகள் (பதிப்பாளர் கதைகள் என்று அழைப்படுகின்றன), எங்கள் கதைகள் (செய்தி, நேரடி நிகழ்வுகள் மற்றும் பொதுவில் சமர்ப்பிக்கப்பட்ட Snap களில் இருந்து பெறப்பட்ட பிரபலமானவை) மற்றும் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான படைப்பாற்றல்மிக்க கூட்டாளர்களிடமிருந்து காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Snap ஜனவரி 2016 இல் தனது முதல் மூல காட்சியான குட் லக் அமெரிக்காவையும் தனது தொடரக்கப்பட்ட Snap மூலங்களின் முதல் ஸ்லேட்டை அக்டோபர் 2018 இலும் வெளியிட்டது.

கடந்த ஆண்டில், காட்சிகளைப் பார்ப்பதற்கான நேரம் மூன்று மடங்கிற்கும் அதிகமாகியுள்ளது, மேலும் Discover பார்ப்பதற்கு Snapchat பயனர்கள் செலவுசெய்த மொத்த தினசரி நேரம் 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் snapchat 13-24 வயதுடையவர்களில் 90 சதவீதத்தையும், 13-34 வயதுடையவர்களில் 75 சதவீதத்தையும் அடைந்துள்ளது Snap மூலங்கள் பற்றி மேலும் அறிய https://snaporiginals.snapchat.com/ க்கு வருகை புரியவும்.

Back To News