850 மில்லியனுக்கும் அதிகமான எங்கள் சமூகம் 1 Snapchat பயன்படுத்தவும், அவர்கள் இனிமையான நினைவுகளை பதிவு செய்யவும், அவர்களின் நெருங்கிய நண்பர்களுடன் தொடர்புகொள்ளவும் விரும்புகிறது. இன்று, எங்கள் கேமராவை எளிதில் அணுக நாங்கள் புதிய அம்சங்களை உருவாக்கியுள்ளோம், புதிய லென்ஸகள் மற்றும் பிட்மோஜியுடன் ஹாலோவீனை கொண்டாட ஆக்கப்பூர்வமான வழிகள், மேலும் பல.
ஐபோனில் Snapகளை இன்னும் வேகமாக எடுங்கள்
Snapchat பயனர்கள் இப்போது நிகழ்வுகள் மறைவதற்க்கு முன் விரைவாக படமெடுக்க முடியும். பயனர்கள் ஐபோன் 16 இல் கேமரா கட்டுப்பாட்டை தனிப்பயனாக்கலாம் மற்றும் iOS 18இல் இயங்கும் எந்த ஐபோனிலும் லாக் ஸ்கிரீன் கட்டுப்பாடுகளை மாற்றலாம், Snapchat ஆப்-ஐ தொடங்கலாம், மற்றும் ஐபோன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.
ஸ்பூக்கி பருவத்தை கொண்டாடுங்கள்
ஹாலோவீன் உற்ச்சாகத்துடன் கலந்துக் கொண்டு கிலௌன் மற்றும் ஹாலோவீன் காஸ்டியூம் போன்ற புதிய AI இயங்கும் லென்ஸ்களுடன் உங்கள் குழுவிற்கு ஒரு ஸ்பூக்கி Snap அனுப்புங்கள்.
விட்ச், பிரின்சஸ், பண்டிகை உடை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய ஆடைகளுடன் உங்கள் பிட்மோஜியும் வேடிக்கையாக இருக்கும். அல்லது உங்கள் பிட்மோஜியை உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களாக அலங்கரியுங்கள், அதாவது மீன் கர்ல்ஸ், அல்லது யெல்லோஸ்டோன் இவைகள் பாரமவுன்டுடன் இணைந்து.
ஒரு ஸ்டிக்கருடன் இதைச் சொல்லுங்கள்
Snapchat பயனர்கள் பிட்மோஜி ஸ்டிக்கர்களை நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஒரு ஆக்கபூர்வமான வழியாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள், மேலும் அவை 210 பில்லியன் முறைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளன. இப்போது, பிரபலம் இல்லாத Gen-Z இதயத்தில் இருந்து புதிய போக்குகள் மற்றும் மொழிகளுடன் கூடிய ஸ்டிக்கர்களை நாங்கள் வழங்குகிறோம், நீங்கள் அவர்களை விரும்புகிறீங்கள் என்று குழு உரையாடலில் சொல்லவும், உங்கள் நெருங்கிய நண்பரிடம் “ஸ்லை” என்று சொல்லி ஊக்கபடுத்தலாம்.
தடங்கள் மூலம் உங்கள் சாகசங்களை திரும்பி பாருங்கள்.
Snap வரைபடத்தில் ஃபூட்ஸ்டெப்ஸ் உங்கள் சாகசங்களை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் சொந்த ஊரிலும், பயண இடங்களிலும் நீங்கள் மூடப்பட்ட தரையை பார்க்க முடியும், இது உங்களுக்குக் மட்டும் தான் தெரியும். IOS மற்றும் ஆண்டிராய்ட்-இல் Snapchat பயனர்களுக்கான இது கிடைக்கும்.