17 அக்டோபர், 2014
17 அக்டோபர், 2014

எங்கள் வளாகக் கதை

எங்கள் வளாகக் கதை என்பது இந்த ஆண்டு EDC-யில் நாங்கள் அறிமுகப்படுத்திய எங்கள் கதை தயாரிப்பின் இயல்பான பரிணாம வளர்ச்சியாகும். கல்லூரி வளாகங்களில் எங்கள் கதைக்காக எங்கள் குழுவிற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன - எனவே நாங்கள் அதை நிகழ்த்த வேண்டியிருந்தது.

புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும்போது நாங்கள் எப்போதும் சிறிது பதட்டமாக இருப்போம் - எங்கள் வளாகக் கதையை அறிமுகப்படுத்திய நேற்றைய தினமும் விதிவிலக்கல்ல – ஆனால் Snapchat சமூகம் எங்களை முற்றிலும் ஆச்சரியப்படுத்தியது! பென் ஸ்டேட், யு.சி.எல்.ஏ, யு.எஸ்.சி, யு.டியில் அதற்கான மறுமொழியைக் கண்டது உற்சாகமூட்டுவதாக இருந்தது.

எங்கள் வளாகக் கதை என்பது இந்த ஆண்டு ஈ.டி.சியில் நாங்கள் அறிமுகப்படுத்திய எங்கள் கதை தயாரிப்பின் இயல்பான படிமலர்ச்சியாகும். கல்லூரி வளாகங்களில் எங்கள் கதைக்கான பற்பல கோரிக்கைகளை எங்கள் குழு கேட்டது - நாங்கள் அதனைச் செயல்படுத்தினோம்.

எங்கள் வளாகக் கதையை அணுகுவது எப்படி என சிலர் வியப்புறுகின்றனர். நீங்கள் உங்கள் இருப்பிடச் சேவைகளை இயக்க வேண்டும், இதன்மூலம் Snapchat உங்கள் தகுதியைத் தீர்மானிக்கும். இப்போதைக்கு வளாகத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ளனர் என தொலைபேசி குறிப்பிடும் Snapchat பயனர்கள் மட்டுமே அவர்களின் வளாகக் கதையைப் பார்க்கவும் பதிவிடவும் இயலும். இயங்குதளம், பிற செயலிகளினால் எந்தவொரு சாதன இருப்பிடத் தகவலின் துல்லியமும் பாதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உலகெங்கிலும் கூடுதல் பாடசாலைகளில் எங்கள் வளாகக் கதையை வெளியிடுவதற்கு நாங்கள் அணியமாய் உள்ளோம்! Snapchat இல் உங்கள் வளாகத்தையும் காண விரும்பினால் @Snapchat என்பதற்கு டிவிட் செய்யுங்கள் அல்லது எங்களுக்குச் செய்தி அனுப்புங்கள்!

செய்திகளுக்குத் திரும்பு