தனியுரிமையைப் பாதுகாப்பது எங்கள் குறிக்கோளை அடைவதன் மிக முக்கியப் பகுதியாகும்:மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அதிகாரமாளிப்பது, அக்கணத்தில் வாழ்வது, உலகைப் பற்றி அறிவது மற்றும் ஒன்றிணைந்து மகிழ்வது. எங்களைப் பொறுத்தவரையில் அது— நீங்கள் யார், நீங்கள் யாராக இருந்துவருகிறீர்கள், அல்லது நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் நீங்களாக இருப்பதற்கான சுதந்திரத்தைப் பற்றியது
இதனால்தான் நிஜ வாழ்க்கையைப் போலவே, உங்கள் பதிவு எப்போதும் இணையத்தில் இல்லை என்ற அனுமானத்தை அமைக்க Snapchat உடன் குறுகிய கால ஊடகத்தின் யோசனையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். இது தனியுரிமை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை செயல்படுத்துகிறது. நீங்கள் புதிதாக ஒருவரை சந்திக்கும்போது, உங்கள் வாழ்க்கையின் கடந்த ஐந்து வருடங்களின் தனிப்பட்ட பதிவுகளை சல்லடையிட்டு அவர்களைத் தேடி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று கவலைப் படத்தேவையில்லை.
தனியுரிமை மற்றும் நீங்கள் பகிரும் தகவல்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் உரிமை நாங்கள் செய்யும் எல்லாவற்றின் மையமாக உள்ளது. அதனால்தான் பொது தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜிடிபிஆர்) கொள்கைகளை ஏற்றுக்கொள்வது Snap-இற்கு இயல்பாகவே வந்தது: தரவுக் குறைத்தல், குறுகிய தக்கவைப்பு காலம், அநாமதேயமாக்கல் மற்றும் பாதுகாப்பு.
எடுத்துக்காட்டாக, நாங்கள் ஒரு புதிய Snapchat அம்சத்தை உருவாக்கத் தொடங்குவதற்கு முன்பே தனியுரிமை வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்களின் ஒரு பிரத்யேக குழு எங்கள் வடிவமைப்பாளர்களுடன் பின்வருவதைக் கோடிட்டுக் காட்ட நெருக்கமாகப் பணியாற்றிவருகிறது:
How long we retain data
How Snapchatters can view, access, and exercise rights to their data
How to minimize the data collected
How to ensure the data collected isn’t used for anything other than what it’s intended for
நாங்கள் தகவல்களைச் சேகரிக்கும் போது, நாங்கள் பயன்படுத்தும் தரவைப் பற்றிய சிந்தனையுடன் இருக்க முயற்சிக்கிறோம். எடுத்துக்காட்டாக, உங்கள் இனம், பாலினப் பண்பு அல்லது அரசியல் விசுவாசம் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்க மாட்டோம், உங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை விளம்பரதாரர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.
நாங்கள் சேகரிக்கும் சில தகவல்களில் நீங்கள் Snapchat-ஐ எங்கு திறக்கிறீர்கள் மற்றும் Discover-இல் நீங்கள் பார்ப்பது போன்ற விஷயங்கள் அடங்கும். இருப்பிடம் சார்ந்த அனுபவங்களை உங்களுக்கு வழங்கவும், “வாழ்க்கை முறை வகைகள்” அல்லது “உள்ளடக்க ஆர்வக் குறிச்சொற்களை” வழங்கவும் இது எங்களுக்கு உதவுகிறது. இந்த ஆர்வ வகைகள் எங்களுக்கு மற்றும் எங்கள் விளம்பரதாரர்கள் உங்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்க உதவுகிறது.
மிக முக்கியமாக, நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்வ வகைகளின் மீது உங்களுக்கு முழு கட்டுப்பாடு உள்ளது - இவை அனைத்திலிருந்தும் வெளியேறுவதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் இருப்பிடத் தரவை நாங்கள் பயன்படுத்துவதை நீங்கள் விரும்பவில்லை எனில், உங்கள் இருப்பிட அனுமதிகளை முடக்கலாம். கடைசியாக, எங்கள் சேவைகளுக்கு வெளியே முதல் மற்றும் மூன்றாம் தரப்பு பார்வையாளர்களின் தரவு மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் குறிவைக்கும் அனைத்து விளம்பரங்களில் இருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளலாம். இந்த அனைத்து அனுமதிகளையும் நீங்கள் Snapchat அமைப்புக்களில் பார்க்கலாம்.
உங்கள் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதன் முழுமையான புரிதல் என்று வரும் போது, ஒரு வலைப்பதிவு இடுகையானது ஒருபோதும் அந்தப் புரிதலை வழங்கப் போவதில்லை என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எனவே, சிக்கலற்றது மற்றும் புரிந்துகொள்ள எளிதானது என்று நாங்கள் நம்பும் மொழியில், உங்களுக்கு ஒரு விரிவான விளக்கத்தை அளிக்க நாங்கள் சமீபத்தில் எங்கள் தனியுரிமை மையத்தைப் புதுப்பித்துள்ளோம். உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், இங்கே இந்த இணைப்பில் எங்களை அணுகத் தயங்க வேண்டாம்.
ஹேப்பி ஸ்னாப்பிங்!