அமெரிக்காவில் நமக்குக் கிடைக்கும் சுய வெளிப்பாட்டு வடிவங்களில் மிக முக்கியமான ஒன்று வாக்களித்தல். இன்று தேசிய வாக்காளர் பதிவு தினத்தில் விரைவாகவும் எளிதாகவும் வாக்காளராகப் பதிவு செய்யும் புதிய வழியை எங்கள் சமூகத்திற்கு வழங்குகிறோம் — TurboVote உடன் அதுவும் Snapchat இலேயே!
நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் 18-வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் எனில், உங்கள் பயனர் தகவல் பக்கத்தில் பதிவு செய்வதற்கான இணைப்பை இன்று முதல் காண்பீர்கள். நீங்கள் ‘Snapchat குழுவிடமிருந்து’ வீடியோ செய்தியையும், உங்கள் நண்பர்களைப் பதிவுசெய்ய ஊக்குவிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய நாடுதழுவிய வடிகட்டிகள் போன்ற வேடிக்கையான புதிய ஆக்கப்பூர்வக் கருவிகளையும் காண்பீர்கள். அத்துடன் எங்கள் சமூகங்களில் நடைபெறும் இடைக்காலத் தேர்தல்கள், வாக்காளர் பதிவு முயற்சிகள் பற்றிய கதைகளுக்கான Discover ஐயும் பார்க்க மறவாதீர்கள்!
வாக்களித்து மகிழ்வோம்!