17 மே, 2021
17 மே, 2021

Releasing Our Second CitizenSnap Report

Today we’re releasing our second annual CitizenSnap Report. The report outlines our Environmental, Social and Governance (ESG) efforts, which focus on running our business in a responsible way for our team, our Snapchat community, our partners and the broader world we are part of.

தொகுப்பாசிரியரின் குறிப்பு: Snap இன் தலைமைச் செயல் அதிகாரியான இவான் ஸ்பீகல் அனைத்து Snap குழு உறுப்பினர்களுக்கும் மே 17 அன்று பின்வரும் குறிப்பாணையை அனுப்பினார்.

குழு,

இன்று எங்கள் இரண்டாவது CitizenSnap ஆண்டறிக்கையை வெளியிடுகிறோம். இந்த அறிக்கை எங்கள் குழு, எங்கள் Snapchat சமூகம், எங்கள் கூட்டாளர்கள், மற்றும் நாங்கள் பங்குபெற்றுள்ள இந்தப் பரந்த உலகிற்குப் பொறுப்புடைய வகையில் எங்கள் தொழிலை நடத்துவதில் கவனம் செலுத்தும் எங்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) முயற்சிகளை விவரிக்கிறது.

இது Snap இற்கான முக்கியமான பணியாகும். ஒரு நலமான பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கிப் பணியாற்றுவது தொழில்களுக்கான அறநெறிக் கடமை என நாங்கள் நம்புகிறோம் மேலும் அது ஒவ்வொரு நாளும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான மில்லியன் Snapchat பயனர்களுக்கும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

எங்கள் சமூகங்களையும் எங்கள் கூட்டாளர்களையும் ஆதரிப்பதற்காக 2020 முழுவதும் நாங்கள் செய்த பணிகளின் விரிவான கண்ணோட்டத்தை எங்கள் CitizenSnap அறிக்கை வழங்குகிறது, இதில் உலகளாவிய பெருந்தொற்றின் போது Snapchat பயனர்களுக்கு தெரிவிக்கவும் கற்பிக்கவும் எடுத்துக்கொண்ட முயற்சிகள், வாக்களிப்பதன் வழியாக அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்காக அவர்களுக்கு அதிகாரமளித்தல், மற்றும் பன்முகக் குரல்கள் மற்றும் கதைகளை முன்னிலைப்படுத்தல் போன்றவை அடங்கும். எங்கள் தயாரிப்புகளிலும் தளத்திலும் தனியுரிமை, பாதுகாப்பு, நெறிமுறைகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் மற்றும் கூடுதல் பன்முகத்தன்மையான, உள்ளடக்கிய, இனவாத எதிர்ப்பு நிறுவனமாக மாறுவதை நோக்கிய எங்கள் பணியைத் தொடரும் அதேவேளையில் நாங்கள் இதனைச் செய்தோம்.

எங்கள் அறிக்கை இலட்சிய மூன்று-பாக காலநிலை உத்தியையும் அறிமுகப்படுத்துகிறது, இது தேவையான வேகம் மற்றும் அளவில் நடவடிக்கை எடுப்பதற்கான எங்களது பங்கைச் செய்கிறது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களிலும், கார்பன் நடுநிலை நிறுவனமாக இப்போது நாங்கள் மாறிவிட்டோம் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதமடைகிறோம். நாங்கள் அறிவியல்-அடிப்படையிலான உமிழ்வு குறைப்பு இலக்குகளைப் பயன்படுத்தி, அதற்கு உலகளவில் இந்த முன்னெடுப்பை வழிநடத்திச் செல்லும் அமைப்புகளின் ஒப்புதலைப் பெற்றோம், இது எங்கள் துறையில் இதனைச் செய்துள்ள வெகுசில நிறுவனங்களுள் ஒருவராக எங்களை ஆக்குகிறது. மேலும் உலகளவில் எங்கள் வசதியிடங்களுக்கு 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்குவதற்கு உறுதிபூண்டுள்ளோம். இந்த உறுதிப்பாடுகள் வெறும் தொடக்கம் மட்டுமே. சிறந்த நடைமுறைகளுடன் இயைந்திருப்பதற்காக எங்கள் காலநிலைத் திட்டங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், மேலும் அடுத்த ஆண்டிற்குள் நிகர சுழி உறுதியேற்பதற்கான செயல்முறைகளைத் தொடங்குகிறோம்.

எங்கள் அறிக்கைக்கு அழகு சேர்க்கும் விதமாக, புதுப்பிக்கப்பட்ட நடத்தை விதித்தொகுப்பையும் இன்று அறிமுகப்படுத்துகிறோம், [ADD LINK]. இந்தப் புதிய விதி ஒரு பன்னாட்டு தொழிலில் எங்கள் எல்லா பங்குதாரர்களையும் பொறுத்த வரை சரியானவற்றைச் செய்வது என்பதன் பொருள் என்ன என்பதைப் பற்றி விரிவாகச் சிந்திக்க எங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெறிசார் முடிவெடுக்கும் கட்டமைப்பை எங்கள் குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. இந்தக் கட்டமைப்பு எங்கள் நிறுவன விழுமியமான கருணையின் அடிப்படையில் அமைந்துள்ளது. கருணையுடன் தொழிலை நடத்துவது என்பதற்கு உண்மையைக் கேட்பதற்கும் பேசுவதற்கும் நாங்கள் துணிச்சல் கொண்டுள்ளோம், எங்கள் செயல்பாடுகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள பச்சாதாபத்தைப் பயன்படுத்துகிறோம், எங்கள் பங்குதாரர்களிடம் நம்பிக்கையை விதைக்கும் செயல்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று பொருளாகும். இந்த விதித்தொகுப்பு தவறான நடத்தையைத் தவிர்ப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, பொறுப்புள்ள தொழிலை நடத்துவதன் ஒரு பகுதியாக எங்கள் பங்குதாரர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வழிகளைக் கண்டறியவும் உதவுகிறது.

கடந்த ஆண்டு, எங்கள் CitizenSnap அறிக்கையை "செப்பமில்லா வரைவாக," அதாவது கற்றுக் கொள்ள, வளர மற்றும் மீண்டும் செயல்படுவதற்கான எங்கள் விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே எழுதினோம். அது இன்னமும் உண்மையாகிறது, எப்போதும் உண்மையாக இருக்கும். எங்கள் ஆரம்ப நாட்களிலிருந்து, எங்கள் தளத்தை எப்படி உருவாக்குவது மற்றும் எங்கள் தொழிலை எப்படி நடத்துவது என்பது பற்றி மிகவும் வித்தியாசமான முடிவுகளையே எடுத்து வந்துள்ளோம். அந்த நெடும் பயணத்தில் கவனத்துடன் இருந்தோம், கவனத்துடன் இருக்கிறோம். எதிர்காலத்தைப் பார்க்கும் போதும், நாங்கள் அடைந்தவை மற்றும் நாங்கள் தவறியவை பற்றி வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதைத் தொடர்வோம். மேலும் நாங்கள் சேவையாற்றும் சமூகங்களின் நம்பிக்கையைச் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் முடிவுகளை எடுப்பதைத் தொடர்வோம்.

எங்கள் CitizenSnap அறிக்கை, குறிப்பிட்ட சோதனையான ஆண்டில் இந்த நிறுவனத்தின் பல குழுக்களின் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பிரதிபலிப்பாகும். நாம் கடந்து வந்த தூரத்திற்காக உங்கள் அனைவருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் -- மேலும் நமக்கு முன்னுள்ள பணிகளால் சக்தி பெற்றுள்ளேன்.

இவான்