
ரால்ஃப் லாரனின் சின்னமான ஆடைகளை உங்கள் Bitmoji-க்குக் கொண்டு வருகிறோம்
சின்னமான ஃபேஷன் பிராண்டான ரால்ஃப் லாரனுடன் இணைந்து, Bitmoji-க்காக முதன்முறையாக பிராண்டட் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய மிக்ஸ் & மேட்ச் ஆடைத் தொகுப்பை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளோம்.
பிரபலமான பேஷன் பிராண்டான ரால்ப் லாரனுடன் இணைந்து, Bitmoji க்காக முதன்முதலில் பிராண்ட் செய்யபட்ட மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய மிக்ஸ் அண்ட் மேட்ச் வார்ட்ரோபை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இப்போது உங்கள் Bitmoji ஒரு டிஜிட்டல் ரால்ப் லாரன் தொகுப்பிலிருந்து பன்னிரெண்டு விதமான தோற்றங்களை காட்சிப்படுத்த முடியும். ஆறு ஆடவர் மற்றும் ஆறு மகளிர் உடைகளுடன், Bitmoji நீங்கள் நேசிக்கும் பிராண்டை அணிந்து உங்கள் தனிப்பட்ட பாணியை முடிவில்லா விதங்களில் வெளிப்படுத்த முடியும்."
அசல் ரால்ப் லாரன் தோற்றங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தொகுப்பில் கிளாசிக் டபுள் பிரெஸ்டெட் பிளேசர்கள், ஒரு பிறாண்டட் ரேசர் ஜாக்கெட், ஒரு ஸ்ட்ரைப்ட் ரக்பி சட்டை மற்றும் ஒரு ஒளிரும் டிராக் ஜாக்கெட் ஆகியவை உள்ளடங்கும். இவை எல்லாவற்றையும் ரால்ப் லாரன் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் குறுப்பிட்ட ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக ஷாப் செய்ய முடியும் என்பதால், உங்கள் Bitmoji IRL உடனும் இணைக்க முடியும்.
Snapchat பயனர்கள் ரால்ப் லாரன் வடிவமைப்புகளை அரட்டைகள் மற்றும் விளையாட்டுகளில் Snap வரைபடத்தின் மீது மற்றும் Bitmoji கதைகள் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கம் உட்பட Snapchat இல் பல்வேறு இடங்களில் தங்கள் Bitmoji இல் பார்ப்பார்கள்.
இன்னும் வரவிருக்கும் பல கூட்டமைப்புகளுடன் ரால்ப் லாரனுடனான எங்கள் நீண்ட கால கூட்டமைப்பின் தொடக்கம் மட்டுமே இது.