கோவிட்-19 காரணமாக ஏற்பட்டிருக்கும் பொதுச் சுகாதார நெருக்கடிக்காக சமூகங்கள் தொடர்ந்து தயாராகிக் கொண்டும் பதிலுறுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எங்கள் Snapchat சமூகம், எங்கள் கூட்டாளர்கள், எங்கள் குழுவினர், அத்துடன் நாம் அனைவரும் வாழும் இவ்வுலகின் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாங்கள் எடுத்துவரும் முயற்சிகள் குறித்துப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
எங்கள் உலகளாவிய குழுவினர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், வைரஸ் பரவலைக் குறைக்க உதவும் பொதுச் சுகாதார முயற்சிகளுடன் இணைந்து எங்களின் பங்களிப்பைச் செய்தும் வருகின்றனர். எங்கள் சமூகத்தையும் கூட்டாளர்களையும் ஆதரிப்பதற்காகவும் இதுவரைக் கண்டிராத இச்சவாலை ஒன்றிணைந்து கடக்கவும், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம்.
Snapchat தனித்திருக்கும் நெருங்கிய நண்பர்களையும் உறவினர்களையும் ஒன்றாக இணைக்கிறது- இக்காலகட்டத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவும் வாய்ப்பிற்காக நாங்கள் நன்றிக்கடன் பெற்றுள்ளோம். எங்கள் சேவைகளில் அதிகரித்திருக்கும் ஈடுபாட்டை உணர்ந்து, அனைத்தையும் சீராக இயங்கவைப்பதற்குக் கடுமையாக உழைத்து வருகிறோம்.
வைரஸ் பரவலைத் தடுப்பதில் Snapchat பயனர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சமூகத்தினால் தொழினுட்பத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி உடல்ரீதியான இடைவெளியைக் கடைப்பிடித்திருக்கும்போதும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்ள, நண்பர்களுடன் விளையாட, தகவல்களை அறிந்திருக்க உதவ முடியும்.
உதவுவதற்காக நாங்கள் செய்யும் சில விடயங்களைப் பற்றிய விரைவான புதுப்பிப்பு இதோ:
Snapchat பயனர்கள் வல்லுநர்களின் ஒப்புதலைப் பெற்ற சிறந்த நடைமுறைகளைத் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள உதவுவதற்காக ஆக்கப்பூர்வக் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், இதில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என எங்கள் சமூகத்திற்கு அறிவுரை கூறும் உலகளாவிய வடிகட்டியும் உள்ளது. இத்தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து பெறப்பட்டவையாகும், கூடுதல் விவரங்களுக்காக அதன் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது.
Snapchat பயனர்கள் வல்லுநர்களிடமிருந்து சமீபத்திய தகவல்கள் அனைத்தையும் பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக, நாங்கள் உலக சுகாதார நிறுவனம், நோய் கட்டுப்பாடு தடுப்பு மையங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். உலக சுகாதார நிறுவனமும் நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையங்களும் Snapchat பயனர்களுக்காக தங்கள் அதிகாரப்பூர்வ கணக்குகளிலிருந்து புதுப்பிப்புகளை வெளியிடுகின்றனர், மேலும் எங்கள் சமூகத்தின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக தனிப்பயன் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
மக்கள் உணர்ந்துவரும் கவலை, மன அழுத்தத்தின் காரணமாக எங்கள் புதிய உங்களுக்காக இதோ அம்சத்தின் அறிமுகத்தினை வேகப்படுத்தியுள்ளோம், இது Snapchat பயனர்கள் மனநலம், கவலை, மனச்சோர்வு, மனஅழுத்தம், தற்கொலை எண்ணங்கள், வருத்தம், துன்புறுத்தல் தொடர்பான குறிப்பிட்ட தலைப்புகளைத் தேடும்போது எங்கள் வல்லுநர் கூட்டாளர்களால் உள்ளூர்மயமாக்கப்பட்ட வளங்களைக் காட்டுகிறது. கொரோனா வைரசுக்குப் பதிலுறுக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம், நோய் கட்டுப்பாட்டு மையங்கள், விளம்பர மன்றம், Crisis Text Line ஆகியவற்றால் தயாரிக்கப்படும் கோவிட்-19 தொடர்பான கவலை குறித்த உள்ளடக்கத்தைக் காட்டும் புதிய பகுதியையும் சேர்த்துள்ளோம்.
நாங்கள் நம்பகமான உள்ளடக்கத்தை வழங்குகிறோம். எங்கள் உள்ளடக்கத் தளமான Discover தெரிவுதேரப்பட்டது, உலகெங்கிலுமுள்ள மிக நம்பகமான செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில கூட்டாளர்களுடன் மட்டுமே நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். Snapchat பயனர்களும் எங்கள் கூட்டாளர்களும் ஏமாற்றும் அல்லது தீங்கு விளைவிக்கும் பொய்த்தகவல்களை வேண்டுமென்றே பரப்பும் உள்ளடக்கங்களைப் பகிர்வதை எங்கள் வழிகாட்டுதல்கள் தடை செய்கின்றன, சரிபார்க்கப்படாத பதிப்பாளர்களோ தனிநபர்களோ பொய்யான தகவல்களை வெளியிட வாய்ப்பளிக்கும் திறந்த செய்தி ஓடையை நாங்கள் வழங்கவில்லை.
NBC News’ “StayTuned”, The Washington Post, SkyNews, The Telegraph, Le Monde, VG, Brut India, Sabq போன்ற மூன்று டஜன்களுக்கும் அதிகமான கூட்டாளர்கள் கோவிட்-19 தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.
எங்கள் சொந்த செய்திக் குழுவும் செய்திகளை வழங்குவதுடன், கோவிட் -19 பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது, இதில் மருத்துவ வல்லுநர்களின் கேள்வி பதில்களும் அடங்கும்.
இது வெறும் தொடக்கம் தான். நாங்கள் எங்கள் சமூகத்தை ஆதரிப்பதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் உங்கள் அனைவரைப் பற்றியும் நினைக்கிறோம், இக்கடினமான நேரத்தில் எங்கள் அன்பினை நிரம்ப அனுப்புகிறோம்.