27 பிப்ரவரி, 2023
27 பிப்ரவரி, 2023

My AI க்கு ஹாய் சொல்லுங்கள்

இன்று நாங்கள் Snapchat-இற்காக பிரத்யேகமான உருவாக்கப்பட்ட OpenAI இன் GPT தொழில்நுட்பத்தின் சமீபத்திய பதிப்பில் இயங்கும் புதிய சாட்பாட் My AI ஐ அறிமுகப்படுத்துகிறோம். My AI Snapchat + சந்தாதாரர்களுக்கு ஒரு சோதனை அம்சமாக கிடைக்கிறது, இந்த வாரம் அறிமுகமாகிறது.

My AI உங்கள் சிறந்த நண்பரின் பிறந்தநாள் பரிசு யோசனைகளைப் பரிந்துரைக்கலாம், நீண்ட வார இறுதியில் ஒரு ஹைகிங் பயணத்தைத் திட்டமிடலாம், இரவு உணவுக்கான செய்முறையைப் பரிந்துரைக்கலாம் அல்லது செடர் சீஸ் பிடித்த உங்கள் நண்பருக்கு சீஸ் பற்றி ஹைக்கூ எழுதலாம். My AI-க்கு ஒரு பெயர் கொடுத்து, உங்கள் அரட்டைக்கான வால்பேப்பரை தனிப்பயநாக்குவதன் மூலம் அதை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

AI-இயக்கும் அனைத்து சாட்பாட்களைப் போலவே My AI-யும் மாயத்தோற்றத்தால் பாதிக்கப்படலாம் மற்றும் எதைப் பற்றிவேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றப்படலாம். குறைபாடுகள் பலவற்றைப் பற்றி கவனமாக இருங்கள், முன்கூட்டியே மன்னிப்புக் கேட்கிறோம். My AI உடனான அனைத்து உரையாடல்களும் சேமிக்கப்பட்டு தயாரிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதற்கு மதிப்பாய்வு செய்யப்படலாம். My AI உடன் எந்த இரகசியங்களையும் பகிறாதீர்கள் மற்றும் அதன் ஆலோசனையை நம்பாதீஈர்கள்.

My AI பாரபட்சமான, தவறான, தீங்கு விளைவிக்கும் அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தவறுகள் நிகழலாம். My AI-இலிருந்து எந்த ஒரு செய்தி மீதும் அழுத்திப் பிடித்து கருத்தைச் சமர்ப்பிக்கவும். My AI உடனான உங்கள் அனுபவத்தைப் பற்றி தெரிந்துகொள்வதை எதிர்நோக்குகிறோம்.

ஹேப்பி ஸ்னாபிங்!

Snapchat குழு