இன்று ஸ்னாப் கேமரா -ஐ அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: டெஸ்க்டாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச செயலி, தங்கள் கணினியைப் பயன்படுத்தும் போது லென்ஸின் வேடிக்கையான அனுபவங்களைப் பெற அனைவரையும் அழைக்கிறது.
டெஸ்க்டாப்பிற்கான ஸ்னாப் கேமரா மூலம், ஸ்னாப்சாட் உருவாக்கிய கிளாசிக் மற்றும் லென்ஸ் ஸ்டுடியோ மூலம் லென்ஸ் கிரியேட்டர் சமூகத்தால் தினமும் உருவாக்கப்பட்ட புதிய வடிவமைப்புகள் உட்பட ஆயிரக்கணக்கான லென்ஸ்களிலிருந்து தேர்வு செய்யவும். இதன் அர்த்தம் லென்ஸ்களைப் பயன்படுத்தி அதிக ஸ்ட்ரீமிங் மற்றும் பகிர்வுகள் —இப்போது அதிக சாதனங்களில்!
தொடங்குவதற்கு, உங்கள் டெஸ்க்டாப் சாதனத்தில் ஸ்னாப் கேமரா செயலியைப் பதிவிறக்குங்கள். ஸ்னாப் கேமரா உங்கள் கணினியில் இணைக்கப்பட்ட கேமராவுடன் ஒத்திசைந்து உங்களுக்கு பிடித்த சில வீடியோ பகிர்வு தளங்கள் மற்றும் செயலிகளுடன் வேலை செய்யும். இதன் அர்த்தம் உங்கள் அடுத்த யூடியூப் வீடியோவை பதிவு செய்யும்போது அல்லது ஸ்கைப், கூகுள் ஹேங்க்அவுட்ஸ் மற்றும் OBS போன்ற செயலிகளுடன் ஸ்ட்ரீம் செய்யும்போது கூட லென்சை அணிந்திருக்க வேண்டுமென்பதாகும். Twitch -இல் ஸ்ட்ரீம் செய்வதற்காக என்றே ஓர் தனிப்பயன் Snap கேமரா ஒருங்கிணைப்பையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
ஹேப்பி ஸ்னாப்பிங்!