எங்கள் தயாரிப்பு, தொழில், சமூகம் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்பை எடுத்துக்காட்டிய எங்கள் முதல் முதலீட்டாளர் தினத்தை Snap Inc. இன்று நடத்தியது. தங்களை வெளிப்படுத்துவதற்கும், அக்கணத்தில் வாழ்வதற்கும், உலகைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், ஒன்றாக இணைந்து மகிழ்ந்திருப்பதற்கும் மக்களுக்கு அதிகாரமளிப்பதின் மூலம் மனித முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான எங்கள் இலக்கினை இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.
எங்கள் தயாரிப்பு, தொழில், சந்தைப்படுத்தல், பொறியியல், உள்ளடக்கம், நிதிக் குழுக்களைச் சேர்ந்த ஒன்பது தலைவர்களின் விளக்கக்காட்சிகளை உள்ளடக்கிய மெய்நிகர் நிகழ்வை இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான இவான் ஸ்பீகல் தொடங்கி வைத்தார். முதன்மை Snapchat தயாரிப்புகள் விரிவான தளங்களாகவும் தொழில்களாகவும் எவ்வாறு படிமலர்ச்சியடைகின்றன என்பதை விளக்கக்காட்சிகளின் போது நாங்கள் மீள்பார்வையிட்டோம். தொடக்க உரையில், ஒவ்வொரு நாளும் 265 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் கேமராவிற்கான எங்கள் தொலைநோக்கினை இவான் விளக்கினார்:
“ஒரு காலத்தில் முக்கியக் கணங்களை ஆவணப்படுத்தும் ஒரு கருவியாக இருந்தத கேமரா, இப்போது சுய வெளிப்பாட்டிற்கும் காட்சிவழித் தகவல் தொடர்புக்குமான சக்திவாய்ந்த தளமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் 5 பில்லியன் Snapகள் உருவாக்கப்படுகின்றன. Snapchat தலைமுறை சொற்களைக் காட்டிலும் படங்கள் வழியாகத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு 150 சதவீதம் அதிகமாக இருப்பதால், நமது நண்பர்கள் குடும்பத்தினருடன் நாம் உடாடும் உறவுகளை வளர்க்கும் விதத்தில் கேமரா இன்னும் மையமானதாக மாறும்”
இன்றைய நாளின் எழுத்துவடிவ உரைகளையும் வீடியோவையும் இங்கு காணுங்கள்.