உருவாக்க AI, கம்ப்யூட்டர் விஷன் மற்றும் இணைப்பு நிஜமாக்க, முழுவதும் எங்கள் முன்னணி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புப் புத்தாக்கத்தின் மீது கவனத்தைக் கொண்டுவர, இந்த வாரம், Snap கம்ப்யூட்டர் விஷன் மற்றும் பேட்டர்ன் ரெகக்னிஷன் (CVPR) மாநாட்டிற்குச் செல்கிறது.
Snap இல் துணிச்சலான யோசனைகளை திருப்புமுனை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளாக மாற்றுவது, பின்னர் நவீன தொழில்நுட்பங்களை எங்கள் சமூகம் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் தயாரிப்புகளாக மாற்றுவது ஆகியவை தான் ஆராய்ச்சிக்கான எங்களது அணுகுமுறையாகும்.
எங்கள் R & D மேம்பாடுகள்Snapchat முழுவதும் Snap இன் அம்சங்களான AR மேம்பாட்டுக் கருவி Lens Studio Spectacles மற்றும் எங்கள் புதிய AR Enterprise Services மற்றும் AR கண்ணாடிகள் ஆகியவற்றை வடிவமைக்கின்றன.
இந்தப் புதுமையானத் தயாரிப்புகள் உலகில் மிகப் பெரிய AR தளங்களில் ஒன்றாக Snap ஆவதற்கு வழிவகுத்துள்ளன. ஒவ்வொரு மாதமும் 750 மில்லியனுக்கும் அதிகமானோர் Snapchat-ஐப் பயன்படுத்துகின்றனர், 3,00,000 க்கும் அதிகமான AR படைப்பாளிகள் மற்றும் டெவலப்பர்கள் Lens Studio இல் AR அனுபவங்களை உருவாக்கியுள்ளனர் மற்றும் வணிகங்கள் சிறந்த வணிக முடிவுகளைப் பெற எங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட AR விளம்பரங்கம் மற்றும் AR Enterprise சேவையாகலைப் பயன்படுத்துகின்றன.
CVPR-இல் Snap-க்கு வணக்கம் சொல்லுங்கள்
Snap குழு உறுப்பினர்கள் இந்த ஆண்டு CVPR இல் பன்னிரண்டு அறிக்கைகள் மற்றும் மாநாடு முன்னிலைப்படுத்தும் ஒரு டெமோ உட்பட இரண்டு டெமோக்களை வழங்குவார்கள். இந்த ஆண்டு 70% அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் விகிதத்தை அடைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் குழுவின் முன்னேற்றத்திற்குச் சான்றாகும்.
CVPR-இல் இடம்பெறும் பிரபலமான ஐந்து Snap அமர்வுகள் இதோ (நீங்கள் தவறவிட விரும்பமாட்டீர்கள்):
செவ்வாய், ஜூன் 20
இங்ஹாவ் ஷு, மெங்லேய் சாய், சிஃபான் ஷி, சிடா பெங், இவான் ஸ்கோரோஹோடோவ், அலியாக்சாண்ட்ர் சியாரோஹின், சியுவான் யாங், யுஜுன் ஷென், ஹ்சின்-யிங் லீ, போலே ஜாவ், செர்ஜி துலியாகோவ்ட
4:30 - 6:30pm | #26
இந்தப் பணி DisCoScene: உயர்தர மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய காட்சி தொகுப்பிற்கான 3Dஅவேர் ஜெனரேட்டிவ் மாடல் ஆகும்.
அன்சூப்பர்வைஸ்டு வால்யூமெட்ரிக் அனிமேஷன்
அலியக்ஸாண்ட்ர் சியாரோஹின், வில்லி மெனாபேஸ், இவான் ஸ்கோரோஹோடோவ், கெயில் ஓல்ஸ்ஸேவ்ஸ்கி, ஜியான் ரென், ஹ்சின்-யிங் லீ, மெங்க்லேய் சாய், செர்ஜி துலியகோவ்
மாலை 4:30 -6:30 | #50
இந்த அறிக்கை கடினமற்ற உருமாற்றக்கூடிய பொருள்களின் மேற்பார்வையற்ற 3D அனிமேஷனுக்கான ஒரு புதிய அணுகுமுறையை முன்மொழிகிறது. எங்கள் முறை ஒற்றை பார்வை RGB வீடியோக்களிலிருந்து மட்டுமே பொருள்களின் 3D கட்டமைப்பு மற்றும் இயக்கவியலைத் தெரிந்துகொள்கிறது, மேலும் அவற்றை டிராக் செய்யக்கூடிய மற்றும் அனிமேஷன் செய்யக்கூடிய சொற்பொருள் ரீதியாக அர்த்தமுள்ள பகுதிகளாகப் பிரிக்க முடியும்.
3DAvatarGAN: தனிப்பயனாக்கப்பட்ட திருத்தக்கூடிய அவதார்களுக்கு டொமைன்களை இணைப்பது
ரமீன் அப்தால், ஹ்சின்-யிங் லீ, பீஹாவோ ஜு, மெங்லீ சாய், அலிக்சாண்டர் சியாரோஹின், பீட்டர் வொங்கா, செர்ஜி துலியாகோவ்
மாலை 4:30 -6:30 | #40
இந்தப் பங்களிப்பு கலைத் தரவுத்தொகுப்புகளில் தனிப்பயனாக்கப்பட்ட கலைரீதியான 3D அவதார்களை உருவாக்க, திருத்த மற்றும் அனிமேஷன் செய்ய அனுமதிக்கிறது.
அஃபெக்ஷன்: நிஜ உலக காட்சி தரவுகளுக்கான உணர்நிலை விளக்கங்களைக் கற்றுக்கொள்வது
பனோஸ் அக்லியோப்டாஸ், மாக்ஸ் ஓவ்ஸ்ஜானிகோவ், லியோனிடாஸ் கியூபாஸ், செர்ஜி துலியாகோவ்
மாலை 4:30 -6:30 | #240
இந்தப் பணியில் இயன்மொழியை ஒரு குறிப்பிட்ட காட்சி தூண்டுதலுக்கு ஒரு உணர்வுப்பூர்வ எதிர்வினைக்கு பின்னால் உள்ள காரணத்தை வெளிப்படுத்தும் ஊடகமாகப் பயன்படுத்தி நிஜ உலக படங்கள் தூண்டக்கூடிய உணர்வுப்பூர்வ எதிர்வினைகளை நாங்கள் ஆராய்கிறோம்.
புதன்கிழமை, ஜூன் 21
மொபைல் சாதனங்களில் நிகழ்நேரா நியூட்ரல் லைட் ஃபீல்டு
ஜுன்லி காவ், ஹுவான் வாங், பாவ்லோ செமெரிஸ், விளாடிஸ்லாவ் ஷக்ராய், ஜூ கு, யுன் ஃபு, டெனிஸ் மாக்கோவிச்சுக், செர்ஜி துலியாகோவ், ஜியான் ரென்
காலை 10:30 -மதியம் 12:30 | #10
இந்தப் பணியில், ஒரு செயல்திறன் மிக்க நெட்வொர்க் ஒன்றை முன்மொழிகிறோம், இது நரம்பியல் உருவகப்படுத்த மொபைல் சாதனங்களில் நிகழ்நேரத்தில் இயங்குகிறது.
Lens Studio Spectacles மற்றும் எங்கள் AR கண்ணாடியை முயற்சிக்க #923 பூத்திற்கு வாருங்கள், மேலும் Snap-இல் பணி வாய்ப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
Snap குழுவில் சேருங்கள்
இயந்திர கற்றல், கணினி பார்வை மற்றும் இயன்மொழிச் செயலாக்கம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற திறமையான ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நாங்கள் பணியமர்த்துகிறோம். Snap-இல் தற்போதைய மற்றும் எதிர்கால கணினி பார்வை மற்றும் இயந்திரக் கற்றல் பணிக் காலியிடங்கள் குறித்து உங்களைத் தொடர்புகொள்ள வேண்டுமெனில் பதிவு செய்க அல்லது careers.snap.com வலைத்தளத்தில் எங்கள் தற்போதைய முழுநேர பணிகாலியிடங்களைப் பார்க்கவும்.
CVPR இல் உங்களைச் சந்திப்பதற்கு காத்திருக்கிறோம்!