இன நீதி மற்றும் குடிமை ஈடுபாட்டை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில் கருப்பின ஆக்குநர்களை ஆதரிக்கும் எங்கள் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, Snapchat ஆக்கப்பூர்வக் கவுன்சிலைத் தொடங்குவதற்காக செப்டம்பரில் ADCOLOR உடன் Snapchat இணைந்தது.
Snapchat ஆக்கப்பூர்வக் கவுன்சிலின் யோசனை எளிமையானது -- மனநலம், கல்வி, குடிமை ஈடுபாடு ஆகியவற்றில் சவாலான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை எங்கள் Snapchat பயனர்கள் சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக முன்னணி கருப்பின ஆக்குநர்களை ஒன்றிணைப்பதாகும்.
இவ்வகையில் கருப்பின சமூகத்தை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட மெய்மை பரப்புரைகளை முன்மொழிவதற்கு சிறிய ஆக்கப்பூர்வக் குழுக்களை இந்த முதலாவது பல்லாண்டுக் கூட்டணி ஊக்குவிக்கிறது. Snapchatஇன் ஆக்கப்பூர்வ உத்திக் குழுவின் ஆதரவுடன், வெற்றிபெற்ற யோசனைகள் உயிர் பெறச் செய்யப்பட்டு எங்கள் அதிகாரப்பூர்வ சேனல்களெங்கும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
மாகிடா லோனி (கருப்பொருள் எழுத்தர், The Martin Agency), சோ ஏ ரியூ (வடிவமைப்பாளர், FCB Chicago), பிராண்டன் ஹியர்ட் (மூத்த உத்தியாளர், R/GA), காமரூன் கெர் (கணக்கு மேலாளர், BBDO), டெர்ரன்ஸ் புரூடி (ஆக்குநர், VICE Media) ஆகியோர் அடங்கிய ஆக்குநர்கள் குழுவினால் வடிவமைக்கப்பட்ட முதலிடம் வென்ற “ஷோ தெம் ஹூ வி ஆர் (A/RE)” எனும் பரப்புரையை இப்போது நாங்கள் பகிர்கிறோம்.
கருப்பினத்தவர் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பல்வேறு தொழில்சார் பாத்திரங்களில் தங்களைக் காண்பதற்கு கருப்பின இளம்பெண்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதற்காக இந்த மிகைப்படுத்தப்பட்ட மெய்மை பரப்புரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஊக்கமூட்டும் ஸ்டிக்கர்கள் தொகுப்பையும் இதுபோன்ற தொழில்வாழ்க்கைப் பாதைகளில் தொடர Snapchat பயனர்களுக்கு உதவும் வளங்களுடன் கூடிய நுண்தளத்தையும் கொண்டுள்ளது. 1968 இன் மெம்பிஸ் துப்பரவு வேலைநிறுத்தம் மற்றும் வாசிங்டன் அணிவகுப்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தருணங்களால் தூண்டப்பட்டு Vocal Typeஆல் வடிவமைக்கப்பட்ட அச்சுக்கலைகளையும் ஆக்குநர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் இரண்டு நாட்களுக்குள், நாடு முழுவதும் உள்ள 12 மில்லியன் Snapchat பயனர்களை “ஷோ தெம் ஹூ வி ஆர் (A/RE)” பரப்புரை சென்றடைந்துள்ளது. அடுத்ததாக, ஆக்கப்பூர்வக் கவுன்சில் கருப்பின சமூகத்தினரின் மன நலனை மையமாகக் கொண்ட திட்டத்தையும், மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் Creative Equals உடன் இணைந்து இங்கிலாந்து, பிரான்சு, ஆஸ்திரேலியாவில் உள்ளூர் பரப்புரைகளையும் தொடங்கும்.
Snapchatஇன் ஆக்கப்பூர்வக் கவுன்சிலிடமிருந்து முக்கியத் திட்டங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற தொடர்ந்து இணைந்திருங்கள்!