29 அக்டோபர், 2012
29 அக்டோபர், 2012

Android-க்கான Snapchat

v2.2 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் இயங்கும் அனைத்து Android சாதனங்களுக்கும் Google Play ஸ்டோரில் Snapchat இப்போது கிடைக்கிறது.

Snapchat இப்போது Google Play store-இல் v2.2 அல்லது அதற்கு மேலான பதிப்புகளில் இயங்கும் அனைத்து Android சாதனங்களுக்கும் கிடக்கிறது.

இது எங்கள் iPhone செயலியின் வெறும் நகலல்ல. நாங்கள் உண்மையான Android செயலியை உருவாக்க விரும்பினோம், அதைச் சரியாக உணரச் செய்ய நிறைய நேரம் செலவிட்டுள்ளோம். ஒவ்வொன்றும் வெவ்வேறு கேமரா வன்பொருளைக் கொண்ட வெவ்வேறு சாதனங்கள் அனைத்துடனும், அனைத்துப் பயனருக்கும் சிறப்பாகச் செயல்படும் ஓர் செயலியை வடிவமைப்பது கடினம். சாதனத்தில் இயல்பாக ஆதரிக்கப்படாவிட்டால் கூட, முழுத்திரைக் கேமரா முன்காட்சியை அனைவரும் அனுபவிப்பதை உறுதிப்படுத்த OpenGL அடித்தளத்திலிருந்து கேமரா லேயரை மறுகட்டமைப்பதின் மூலம் தொடங்கினோம். அதன் பின் படங்களை அனுப்புவதற்கும் ஓடையில் அவற்றை ஏற்றுவதற்கும் புதிய, மிகவிரைவான வழியை வடிவமைத்து வெண்ணெய் போல் மென்மையான தனிப்பயன் இடைமுகத்துடன் அதனை ஒருங்கிணைத்தோம். உண்மையான முதல் தர Android செயலியை உங்களுக்குக் கொண்டு வருவதில் மிக்க உற்சாகமடைகிறோம்.

எங்கள் இரசிகர்கள் அனைவருக்கும் உங்கள் ஆதரவிற்காக பெரும் நன்றி - காத்திருப்பு ஒருபோதும் மகிழ்ச்சியளிப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும் - உங்கள் ஊக்கமளிக்கும் மின்னஞ்சல்கள், டிவீட்டுகள், செய்திகள் அனைத்தையும் மிகவும் மெச்சுகிறோம். நீங்கள் அந்தப் பின்னிரவுகளை முற்றிலும் மதிப்புடையதாய் ஆக்குகிறீர்கள்.

பிழையைக் கண்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! 250 சாதனங்களில் மட்டுமே எங்களால் சோதிக்க முடிந்தது-Android உலகில் இது ஓர் மிகச் சிறிய பகுதியே.

iPhone நண்பர்களே…விரைவில் வரவிருக்கும் Snapchat வெளியீட்டிற்குத் தயாராகுங்கள் :)

செய்திகளுக்குத் திரும்பு