நாங்கள் எப்போதுமே எங்கள் கேமராவில் புதுமைகளை உருவாக்குவதற்கான வழிகளைத் தேடுகிறோம், மேலும் எங்கள் சமூகத்தினரிடையே நிகழும் அன்றாட தருணங்களை ஸ்னாப் எடுக்க உதவுகிறோம். அதனால்தான் நாங்கள் Google-இன் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவுக்கான ‘Snap செய்வதற்கான விரைவுத் தட்டல்’ ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
முதன்முறையாக, கைபேசி பூட்டுத் திரையில் இருந்து நேரடியாக Snapchat கேமராவை அணுகும் வகையில் செய்கிறோம். Snap செய்வதற்கான விரைவுத் தட்டல் மூலம், தருணங்கள் செல்வதற்கு முன் நீங்கள் அவற்றை படம்பிடிக்கலாம்.
இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே காணலாம்: உங்கள் கைபேசியின் பின்புறத்தைத் தட்டுவதன் மூலம், உங்கள் பூட்டப்பட்ட கைபேசியைத் திறக்காமல், பூட்டுத் திரையில் இருந்து ஸ்னாப்களை உருவாக்கி நேரடியாக லென்ஸஸ் மூலம் இயக்கலாம். ஸ்னாப் பகிரத் தயாரானதும், முழு செயலியின் அனுபவத்தையும் நேரடியாகத் திறக்க, உங்கள் கைபேசியின் பூட்டுத் திரையில் உள்நுழையவும்.
ஆனால் காத்திருங்கள், இன்னும் நிறைய இருக்கிறது: ப்ரத்தியேக இணைப்பு நிஜமாக்கம் லென்ஸ்களை தொடங்க நாங்கள் Google உடன் இணைந்து செயல்படுகிறோம், அத்துடன் Snapchat இன் கேமராவிலும், பிக்சல் 6 மற்றும் 6 ப்ரோவின் அரட்டையிலும், மிக அகன்ற கோணம் மற்றும் நேரடி மொழிபெயர்ப்பு போன்ற Google இன் சில பிக்சல் அம்சங்களை ஆதரிக்கிறோம். நீங்கள் அகன்ற கோண ஸ்னாப்களை எடுக்கலாம் மேலும் உங்கள் நண்பர்களுடன் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசலாம் மற்றும் உரையாடல்களை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம்.
Snap செய்வதற்கான விரைவுத் தட்டலோடு இந்த அம்சங்களும் வரும் மாதங்களில் தொடங்கப்படும். உலகம் முழுவதும் உள்ள Snapchat பயனர்களுக்கு இன்னும் அதிகமான அனுபவங்களை கொண்டு செல்ல எங்கள் மொபைல் பங்குதாரர்களுடன் இனைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்!