Snapகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன, அவை எப்போது, எவ்வாறு நீக்கப்படுகின்றன என்பன குறித்து சமீபமாக சில ஊகங்கள் நிலவுகின்றன. நாங்கள் விடயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி முன்னதாகவே விளக்குவதற்கு எப்போதும் முயற்சிக்கிறோம், எங்களின் அந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை, எனவே விடயங்களை இன்னும் விரிவாகப் பார்ப்பது நல்லதென நாங்கள் நினைக்கிறோம்.
Snapகளைச் சேமித்தல்
அனுப்பப்படும் Snap எங்கள் சேவையகங்களுக்குப் பதிவேற்றப்படுகிறது, பெறுநர்(களுக்கு) அவர்கள் ஒரு புதிய snap ஐப் பெற்றுள்ளனர் என்ற அறிவிப்பு அனுப்பப்படும், பின் Snapchat செயலி செய்தியின் நகலைப் பதிவிறக்குகிறது. அச்செய்தியிலுள்ள படம் அல்லது வீடியோ, சாதனத்தின் நினைவகத்தில் ஒரு தற்காலிகக் கோப்புறையில் சேமிக்கப்படுகிறது. இது தளத்தைப் பொறுத்தோ, வீடியோ அல்லது படத்தைப் பொறுத்தோ உள் நினைவகம், ராம் அல்லது எஸ்.டி அட்டை போன்ற வெளிப்புற நினைவகங்களில் சேமிக்கப்படலாம்.
எங்களது சேவையகங்களிலிருந்து Snapகளை நீக்குதல்
ஒரு snap பார்க்கப்பட்டு நேரக்கருவி முடிவடைவதை செயலி எங்கள் சேவையகங்களுக்கு அறிவிக்கிறது, அவை அந்த snap திறக்கப்பட்டதை அனுப்புநருக்கு அறிவிக்கின்றன. ஒரு snap அதன் பெறுநர்கள் அனைவராலும் திறக்கப்பட்டதை அறிவித்தபின் அது எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படுகிறது. 30 நாட்களுக்குள் திறக்கப்படாத snap உம் எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படுகிறது.
பெறுநரின் சாதனத்திலிருந்து Snapகளை நீக்குதல்
Snap திறக்கப்பட்ட பின் அதன் தற்காலிக நகல் சாதனத்தின் சேமிப்பகத்திலிருந்து நீக்கப்படுகிறது. இதனை உடனடியாகச் செய்ய முயற்சிக்கிறோம், சில நேரங்களில் ஒன்றிரண்டு நிமிடங்கள் ஆகலாம். தொலைபேசியின் கோப்பு அமைப்பிற்கு "நீக்கு" வழிகாட்டுதலை அனுப்பி கோப்புகள் நீக்கப்படுகின்றன. இதுதான் கணினியிலும் தொலைபேசியிலும் விடயங்களை நீக்குவதற்கான பொதுவான வழி - நாங்கள் இதுதவிர பிரத்யேகமாக எதையும் செய்வதில்லை (எ.கா "வைப்பிங்").
கூடுதல் விவரங்கள்
திறக்கப்படாத snap சாதனத்தில் சேமிக்கப்படுவதால் Snapchat செயலியைத் தவிர்த்து கோப்பை நேரடியாக அணுகுவது முடியாத காரியமில்லை. இதனை நாங்கள் ஆதரிப்பதோ ஊக்குவிப்பதோ இல்லை, பெரும்பாலான நேரங்களில் இதற்காக தொலைபேசியை ஜெயில்பிரேக்கிங் அல்லது "ரூட்டிங்" செய்ய வேண்டும், இது தொலைபேசியின் உத்திரவாதத்தைச் செல்லாததாக்கும். நீங்கள் snap ஐச் சேமிக்க வேண்டுமெனில், அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது அல்லது வேறொரு கேமராவால் படமெடுப்பது எளிதானதாகும் (பாதுகாப்பானதாகும்).
நீங்கள் இதற்கு முன்பு டிரைவை எதிர்பாராமல் நீக்கிய பின்னர் அல்லது சி.எஸ்.ஐ எபிசோடைப் பார்த்து இழந்த தரவை மீட்க முயற்சித்திருப்பீர்கள் எனில், சரியான தடயவியல் கருவிகள் மூலம் நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே… பெரிய பெரிய இரகசியங்களை உங்கள் செல்ஃபியில் வைப்பதற்கு முன்னால் இதனை மனதில் வையுங்கள் :)