17 செப்டம்பர், 2024
17 செப்டம்பர், 2024

SPS 2024 | படைப்பாளர்கள் ஒரு சமூகத்தை உருவாக்க மற்றும் வெற்றியைப் காண்பதற்க்கும் புதிய வழிகள்

Snapchatஇல் உள்ள ஒவ்வொரு அனுபவத்தின் மையத்திலும் உறவுகள் உள்ளன.  இயற்கையாகவே, ஊறவுகள் எங்கள் உள்ளடக்க அனுபவத்தின் மையமாக இருக்கின்றன, - நீங்கள் Snapsகளை உருவாக்குகிறவராக அல்லது சமூகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் பார்க்கிறவராக இருந்தாலும். 

கடந்த ஆண்டில், பொதுவாக பதிவிடும் படைப்பாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது, படைப்பாளிகள் தங்கள் கதைகளில் கிட்டத்தட்ட 10 பில்லியன் புகைப்படங்களை இடுகையிட்டுள்ளனர், மேலும் 6 டிரில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளனர்.1 நாங்கள் படைப்பாளர்களுக்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள, Snapகளை உருவாக்க மற்றும் தனித்துவத்துடன் இருக்கும்போது வெகுமதிகளைப் பெருவது போன்றவற்றை தொடர்ந்து எளிதாக்கி வருகிறோம். 

படைப்பாளிகள் தங்கள் சமூகத்தை வளர்பதற்கான புதிய கருவிகள்

புதிய எளிமைப்படுத்தப்பட்ட சுயவிவர வடிவமைப்பு Snapchat பயனர்கள் 16 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொது கணக்குகளுக்கு இடையே எளிதாக மாற அனுமதிக்கிறது. அவர்கள் தங்கள் உண்மையான நண்பர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பினால், - தனிப்பட்ட. மேலும் அவர்கள் பரந்த பார்வையாளர்களை சென்றடய விரும்பினால், - பொது. 16 மற்றும் 17 வயதுடைய Snapchat பயனர்களுக்கு, மிக உயர்ந்த தனியுரிமை பாதுகாப்பு அமைப்புகள் இயல்பாகவே வழங்கப்படும். 

படைப்பாளிகள் இப்போது தங்கள் பொது சுயவிவரங்களை மேலும் தனிப்பயனாக்க முடியும் புதிய பார்வையாளர்களை தங்களுக்குப் பிடித்த Snapகளை அவர்களின் பொது சுயவிவரத்தின் மேல் பின் செய்வதன் மூலம் அவர்கள் உருவாக்கும் Snapகளின் உணர்வைப் பெற முடியும்.

மெமரீஸ் மற்றும் கேமரா ரோலில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி சிறந்த Snapகளை உருவாக்குவதையும் பகிர்வதையும் வார்ப்புருக்கள் எளிதாக்குகின்றன. அந்தத் தருணத்தில் இருங்கள் மற்றும் நீங்கள் தயாராக இருக்கும்போது உங்கள் வாழ்நாளில் சென்ற விடுமுறை காலத்தை மீண்டும் போஸ்ட் செய்யுங்கள். வார்ப்புருக்கள் அனைத்தும் சிறந்த மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசையுடன் ஒலிப்பதிவு செய்யபடுகின்றன்.

ஒவ்வொரு நாளும் Snapchatஇல் படைப்பாளர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் இடையே 15 பில்லியன் கலந்துரையாடல்கள் இருக்கின்றன.2

பதில்கள் மற்றும் மேற்கோள் காட்டுதல் அம்சத்தின் மூலம் Snapchat பயனர்களுக்கு நேரடியாக பதில் அளிக்கலாம் அல்லது ஒரு படைப்பாளியின் Snapஇல் வெளிப்படயாகக் கருத்து தெரிவிக்கலாம். இப்போது, படைப்பாளர்கள் அந்த செய்தியை ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ பதிலாக மாற்ற முடியும். இது அவர்களின் பார்வையாளர்களை ஆழமான ஈடுபாட்டை அனுமதிக்கிறது.

படைப்பாளர்கள் வெற்றியைப் கண்டறிவதற்கான கூடுதல் வழிகள்

எங்கள் Snap Star Collab Studio, படைப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு இடையேயான கூட்டணியை விரைவுபடுத்த உதவுகிறது. எங்களின் விருப்பமான கூட்டாளர்கள் மற்றும் புதிய சுய சேவை கருவிகளின் மூலம், படைப்பாளிகள் தங்கள் ஈடுபாடு மற்றும் மக்கள் தொகைத் தரவை பிராண்டுகளுக்கு காட்ட தேர்வு செய்யலாம். விரைவில், Snapchatஇல் உள்ள விளம்பரதாரருடனும் இந்தத் தகவலை அவர்களால் நேரடியாக பகிர முடியும்.

படைப்பாளர்களின் கதைகள் மற்றும் ஸ்பாட்லைடில் உண்மையானவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு வெகுமதிப் வழங்கப்படும். மேலும், லென்ஸ்கள் மற்றும் ஒலிகள் போன்ற எங்கள் முழு படைப்பாற்றல் கருவிகளும், சுய வெளிப்பாட்டின் மூலம் பார்வையாளர்களை உருவாக்க நிறைய வாய்ப்புகள் உள்ள சூழலை ஆதரிக்க உதவியது. 

நீங்கள் உருவாக்கவுள்ளதைப் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்! 

செய்திகளுக்குத் திரும்புக

1 Snap Inc. உள் தரவு – ஜுன் 30, 2024 நிலவரப்படி

2 Snap Inc. உள் தரவு – Q2 2024 வருவாய்

1 Snap Inc. உள் தரவு – ஜுன் 30, 2024 நிலவரப்படி

2 Snap Inc. உள் தரவு – Q2 2024 வருவாய்