17 செப்டம்பர், 2024
17 செப்டம்பர், 2024

SPS 2024 | புதிய மற்றும் எளிய Snapchat

நண்பர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் கேமராவைப் பயன்படுத்துவது மற்றும் படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள் உட்பட பரந்த Snapchat சமூகத்தின் நண்பர்கள், மற்றும் Snapchat சமூகத்திலிருந்து Snapகளைப் பார்ப்பது ஆகியவற்றை சுற்றி இருக்கும் பயன்பாட்டை ஒழுங்கமைக்கும் புதிய மற்றும் எளிமைபடுத்தபட்ட Snapchatஐ நாங்கள் இப்போது சோதித்து வருகிறோம்.

நாங்கள் சில காலமாக கதைகள் மற்றும் ஸ்பாட்லைட்டை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது, இந்த புதிய மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமைப்பு மூலம், Snapchat பயனர்கள் தனிப்பட்ட மற்றும் பொருத்தமான பார்வை அனுபவத்தை பெறுவார்கள். இந்தப் புதுப்பிப்பு எங்கள் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர் கூட்டாளர்களுக்கும் புதிய பரப்புகளில் புதிய பார்வையாளர்களை கண்டறிவதற்க்கும் நீண்ட காலத்திற்க்கு எங்கள் விளம்பர வணிகத்தை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

எளிய Snapchat எப்படி வேலை செய்கிறது என்று இங்கே:

கேமராவை திறக்கவும்:
எப்போதும் போல Snapchat பயனர்கள் பயன்பாட்டை திறக்கும்போது, அவர்கள் உடனடியாக எங்கள் கேமராவின் மூலம் தங்கள் உலகத்தைப் பார்ப்பார்கள், எனவே அவர்கள் எளிதாக Snap எடுத்து பகிரலாம்.

உரையாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்:
இடதுபுறத்தில், அரட்டை - Snapchat பயனர்களின் உரையாடல்களுக்கும் இட்மாகும். கதைகள் இப்போது உரையாடல்களின் தொடக்கத்திலயே உள்ளன, ஏனென்றால் கதைகளைப் பகிர்வதும் பதிலளிப்பதும் நாம் தொடர்புகொள்ளும் விதத்தில் அடிப்படையாக உள்ளது. 

Snapchat பயனர்கள் இந்த டாப்பின் கீழ் உள்ள ஒரு பொத்தானைப் பயன்படுத்தி Snap வரைபடத்திற்க்கு தாவலாம், இதன் மூலம் உரையாடல்களை நிஜ உலக திட்டங்களாக மாற்றுவது எளிது.

தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கம், உங்களுக்காக:
வலதுபுறத்தில், Snapchat பயனர்கள் கதைகள் மற்றும் ஸ்பாட்லைட் வீடியோக்களை ஒருங்கிணைக்கும் புதிய பார்வை அனுபவத்தை காண்பார்கள். இது எங்களின் முதல் ஒருங்கிணைந்த பரிந்துரை அமைப்பால் இயக்கப்படுகிறது, - இது எங்களின் மிகவும் தனிப்பயனாக்கபட்ட அனுபவத்தை இன்னும் வழங்குகிறது.

நண்பர்களிடமிருந்து வரும் வீடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும் பரிந்துரைகள் Snapchat பயனர்கள் தங்கள் சமூகத்துடன் பகிர விரும்புகிறார்கள், தங்கள் வட்டத்தில் எது பரபலமாக இருக்கிறது, மற்றும் அவர்கள் பார்க்க விரும்புவதைப் பொறுத்து பரிந்துரைகள் இருக்கும். 

இந்த புதிய அனுபவத்தை பகிர்ந்து கொள்வதிலும் மேலும் எங்கள் சமூகம் மற்றும் கூட்டாளர்களுக்கு சேவை செய்வதற்கான எங்களின் தற்போதய பணியை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

செய்திகளுக்குத் திரும்புக