கலை மற்றும் அறிவியல், விளையாட்டு, இசை, அழகு மற்றும் ஷாப்பிங் மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிலும் நீங்கள் அக்கறை கொண்ட விஷயங்களை உயிர்ப்பிக்க ஆக்மென்டெட் ரீயலிட்டி சாத்தியமுள்ள எல்லைகளை எங்கள் கூட்டாளர்கள் விரிவாக்குகிறார்கள். இன்று 300 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் மிகை மெய்மையில் ஈடுபடுகின்றனர்.1
Snapchat Cam மேலும் பல இடங்களுக்கு விரிவடைகிறது
சூப்பர் பவுல் LVIII, இன் போது, NFL Snapchat Cam மூலம் அரங்கத்தில் உள்ள ஜம்போட்ரோன் எடுத்துக் கொண்டது, இது கேமரா கிட் தொழில்நுட்பத்தால் இயக்கபடுகிறது, இந்தத் தொழிலநுட்பம் கூட்டாளர்களுக்கு அவர்களுடய செயலிகள் இனையதளங்கள் மற்றும் நிஜ உலகில் AR ஐ கொண்டு வர அனுமதிக்கிறது.
கேயின்ப்ரிட்ஜ் ஃபில்ட் ஹவுசில் உள்ள இண்டியான ஃபீவர் மற்றும் மேடிசன் ஸ்க்யர் கார்டெனில் உள்ள் நியூயார்க் நிக்ஸ் போன்ற 50க்கும் மேற்பட்ட இடங்கள், அணிகள் கலைஞர்கள் மற்றும் ஒளிபரப்புக் கூட்டாளர்களுக்கு Snapchat Cam ஐ இணைத்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
எமினெமுடன் லிப் சிங்க் லென்ஸ்
எமினெம் தனது புதிய பாடலான "ஃபுயெல்" வெளியீட்டை கொண்டாடும் வகையில், நாங்கள் லிப் சிங்கிங் லென்ஸை அறிமுகப்படுத்துகிறோம். விரைவில் இந்த காட்சி லென்ஸஸ் அனுபவம் Snapchat இன் ஒலிகளின் லைப்ரரியில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்குகளை ஆதரிக்கும், எனவே நீங்கள் நிகழ் நேரத்தில் உற்சாகமூட்டும் Snapகளை எடுக்கலாம் அல்லது உங்கள் நினைவுகளை உயிர்ப்பிக்க லென்ஸஸை பயன்படுத்தலாம். லிப் சிங்கிங் லென்ஸ் கொண்ட Snapகள் 100 மில்லியனுக்கும் அதிகமாக பகிரப்பட்டுள்ளன.- இதுவே உரையாடலை தொடங்குவதற்கான சரியான வழியாகும்.2
NYX பியுட்டி பெஸ்ட்டி
NYX பிரொஃபஷனல் மேக்கப் சமீபத்தில் NYX பியூட்டி பெஸ்டீயை அறிமுகப்படுத்தியது, இது AR மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில அழகு முறைமைகளை மகிழ்ச்சியானதாக, சிக்கலற்றதாக, மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Snap மூலம் எளிதாகக் காண்பிக்கக் கூடியதாக மாற்றுகிறது. இன்று, உங்கள் தனித்துவமான முக அம்சங்களுக்கு ஏற்ப முடிவற்ற தோற்றங்களை பரிந்துரைக்க கூடிய ஜனரேட்டிவ் AI-யை பயன்படுத்தும் லென்ஸின் மேம்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் கூட்டாளர்கள் எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது கற்பனைகளுக்கும் எட்டாத அனுபவங்களை உருவாக்குகின்றனர். அவர்கள் Snapchat பயனர்களின் அன்றாட வாழ்க்கையை, செயலியில் மற்றும் உண்மையான உலகிலும் எவ்வாறு மேம்படுத்துகிறார்கள் என்பதை காண்பது நம்பமுடியாத ஒன்றாகும்.