23 நவம்பர், 2015
23 நவம்பர், 2015

கதை எக்ஸ்ப்ளோர்

Snapchat கதைகள் வெவ்வேறு கண்ணோட்டங்களின் ஆற்றலைக் கொண்டாடுகின்றன. எங்கள் சமூகத்தின் கண்கள் மூலம் உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை அனுபவிக்க இது முற்றிலும் தனித்துவமான வழியாகும்.

Snapchat கதைகள் வேறுபட்ட கண்ணோட்டங்களின் சக்தியைக் கொண்டாடுகின்றன. உலகெங்கிலும் நடப்பவற்றை எங்கள் சமூகத்தின் பார்வையில் காண்பது முற்றிலும் தனித்துவமான வழியாகும்.

சிலநேரங்களில் நடப்பவை Snapகளையும் தாண்டிச் செல்கின்றன அவற்றை கதைகளாகத் தெரிவுதேர்ந்துள்ளோம். இன்று கதை ஆராய்வானை அறிமுகப்படுத்துகிறோம்.

கதையிலுள்ள ஒவ்வொரு Snap இற்கும் கூடுதல் ஆழத்தை வழங்க, கதை ஆராய்வான் எங்கள் ஆராய்ச்சிக் குழுவினால் உருவாக்கப்பட்ட தொழினுட்பத்தைச் சார்ந்துள்ளது. உங்களை ஊக்கப்படுத்தும் உற்சாகப்படுத்தும் ஒரு தருணத்தைக் காணும்போது, அத்தருணத்தின் கூடுதல் Snapகளை ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் காண மேலே ஸ்வைப் செய்யுங்கள்.

நீங்கள் அரங்கம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணோட்டங்களிலிருந்து ஆட்டத்தை வென்ற அந்த கூடைப்பந்தாட்ட டங்கை அனுபவிப்பதோ, பரபரப்பான செய்தி வெளிவரும்போது அங்கிருப்பது போன்ற உணர்வைப் பெறுவதோ இதுவே முதல்முறை.

அத்தருணத்தின் Snapகளைப் பகிர்வதன் மூலமும் பலவித கண்ணோட்டங்களைப் பங்களிப்பதன் மூலமும் எங்கள் சமூகத்தினர் இதனைச் சாத்தியமாக்குகின்றனர் - இந்த கனவை நனவாக்கிய எங்கும் உள்ள Snapchat பயனர்களுக்கு நனி நன்றி!

கதை ஆராய்வானை நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நேரலைக் கதைகளில் இன்று அறிமுகப்படுத்துகிறோம் - இன்னும் பல கதைகளில் விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்!

செய்திகளுக்குத் திரும்பு